Monday 29 January 2018

அல்சர்* *போக்க* *நம்* *முன்னோர்* *கொடுத்த* *அருமருந்து* " *பழைய* *சோறு

✍ *இயற்கை* *வாழ்வியல்* *முறை* 🌾🌾🌾🥜🥜🥜
*அல்சர்* *போக்க* *நம்* *முன்னோர்* *கொடுத்த* *அருமருந்து* " *பழைய* *சோறு* "...

முதல் நாள் சாதத்தில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சோற்றில்தான் பி6 மற்றும் பி12 விட்டமின்கள் ஏராளமாக இருக்கிறது.
தவிரவும் உடலுக்கு குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மை செய்யும் டிரில்லியன் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்‌கிறது.
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகும்.
பழைய சோற்றின் மகத்துவங்கள்
** காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சோற்றை சாப்பிடுவதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கும்
** இரவே தண்ணீர் ஊற்றி மூடிவைப்பதால் இலட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை சாப்பிடும் போது உடல்சூட்டைத் தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
** அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்சத்து மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்க செய்கிறது.
** இந்த பழைய சோறு உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டாலே நல்ல வித்தியாசம் தெரியும். இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். உடல் எடையும் குறையும்.
** மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
** அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகிவிடும்.
** அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்துவர ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைத்தது.
** எல்லாவற்றிக்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அரு‌‌கில் கூட வராது.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing