Saturday 10 February 2018

"பட்ஜெட் 2018 – நாம் யோசிக்க வேண்டிய விஷயம்

[ தினமலர் இணையப் பக்கத்தில் திரு விஜயகுமார், சென்னை அவர்களால்  வெளியிடப்படட கருத்து : :  ...    ..  ... "பட்ஜெட் 2018 – நாம் யோசிக்க வேண்டிய விஷயம் ஃபிப்ரவரி ஒன்றாம் தேதி உங்கள் எல்லொரையும் போல நானும் டீவியின் முன் உட்கார்ந்திருந்தேன். கண்களைக்கொட்டாமல் அருண் ஜெயிட்லியையே பார்த்துக்கொண்டிருந்தேன். இதோ…..இதோ வரப்போகிறது. இன்கம் டாக்ஸில் எனக்கு என்ன சலுகை என்று அவர் சொல்லப்போகிறார். என்ன இருந்தாலும் பா ஜ க அரசின் இந்த ஐந்தாண்டுகளின் கடைசி பட்ஜெட், நான் அவர்களுக்குத்தான் ஓட்டுப்போட்டேன். நிச்சயம் சலுகை கிடைக்கும். அந்தோ கடைசி வரை அந்தச்சலுகை வரவே இல்லை. “யோவ் என்னய்யா கவர்ன்மெண்ட் இது? முழுக்க முழுக்க நடுத்தர வர்க்கம் ஓட்டுப்போட்டுத்தான் மோடிய ஜெயிக்க வெச்சோம் ஆனா எல்லாச் சலுகையும் எவனோ விவசாயிக்கா? வரட்டும் அடுத்த வருஷம் தேர்தல் என் ஓட்டு இந்த முறை பா ஜ க வுக்குக்கிடையாது, ஆம்மாம்” கடுப்பில் டீவியை அணைத்தேன். நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். ஒரு டம்ளர் சில்லுனு தண்ணி குடித்தேன். படபடப்பு அடங்கியது. கோபம் குறைந்தது. யோசிக்க ஆரம்பித்தேன். என்னுடைய வீட்டு கடன் வட்டி 2013இல் 9.25% - 11.25%ஆக இருந்த நினைவு. இப்போது அது 8.55தான். 2% குறைந்தால் கூட 30 லட்ச ரூபாய் கடனுக்கு அது வருடத்துக்கு 45000 ரூபாய் மிச்சப்படுத்தியிருக்கிறது. (SBI Home Loan Calculator). இது நடுத்தர வர்க்கத்துக்கான நன்மை இல்லையா? Average consumer price index (CPI) 2013இல் 10.92%. இப்ப எவ்வளவு தெரியுமா? 2.49% மேலே சொன்ன அந்தக்கண்றாவி CPI இப்பவும் அதே உயரத்தில் இருந்தா நம்ம நிலைமை என்னன்னு யோசிச்சுப்பாக்கணூமா வாண்டாமா? Fiscal Defictஐ 3.5% க்குள் வைத்திருப்பது சாதனை இல்லியா? இது 2013இல் 4.1% அதுக்கும் என்னைப்போன்ற சாதாரணனுக்கும் என்னய்யா சம்மந்தம் என்று கேட்பீர்களா? இது கட்டுக்குள் இல்லையென்றால் பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு, Inflation உயரும். வட்டி விகிதம் உயரும். விலை வாசி உயரும் இதெல்லாம் என்ன பேச்சு? நான் சாதாரண சம்பளம் வாங்கும் ஆசாமி எனக்கு ஏன்யா டாக்ஸை உசத்தினீங்க? கேப்பீங்களே இப்ப இதயும் பாருங்க என்ன, வரி விலக்கு அளவை 2.5 லட்சத்திலிருந்து 3 லட்சத்திற்கு ஏன் உயர்த்தலைன்னு கேட்கலாம். சரி, உயர்த்தினா என்ன ஆகியிருக்கும் நமக்கு டாக்ஸில் வருடத்திற்கு 2500 ரூபாய் மிச்சப்படும், அதாவது மாத்திற்கு ரூ 208 ஆனால் யோசித்துப்பாருங்கள், அரசுக்கு இழப்பு எவ்வளவு தெரியுமா? 2500X 6.3 கோடி, அதாவது ரூ 15750கோடி வரி இழப்பு மேலே சொன்ன Fiscal Defictiல் போய்ச்சேர்ந்து கொண்டு நமக்குத்தான் பின்னால் இடிக்கும். இன்னொண்ணையும் பார்க்கலாமா? 2009லேர்ந்து 2013வரைக்கும் வரி விலக்கு அளவு ரூ 1.60 லட்சத்திலிருந்து ரூ 2 லட்சம்தான் ஆனது. ஆனால் இந்த மூன்றே வருடங்களில் அது ரூ 2.5 லட்சமாக உயர்ந்துவிட்டது. அதுவும் சீனியர்களுக்கு 5 லட்சமாகிவிட்டது. வீட்டுக்கடனுக்கு விலக்கு 2 லட்சமாக உயர்ந்திருக்கிறது. கூடவே இன்னொன்று, ரூ 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை இப்போது வரி 5% தான் முன்பு அது 10%ஆக இருந்தது. மேலும் இந்த பட்ஜெட்டில் ரூ 40,000 விலக்கும் கிடைத்துவிட்டது. வேறு சில விஷயங்களும் கவனிக்கப்பட வேண்டும். இதய ஸ்டெண்டின் விலை 2 லட்சத்திலிருந்து ரூ 35000க்கும் மூட்டு மாற்று சிகிச்சை 1.5 லட்சத்திலிருந்து 45000க்கும் குறைந்துவிட்ட்து. இன்ஷூரன்ஸ் ரூ 2 லட்சத்திற்க்கான பிரீமியம் இப்போது ரூ 333 உம் அரசே கொடுத்துவிடும். ஆக இந்த அரசுதான் மத்தியத்தர வர்க்கத்துக்கு அதிகம் அளித்த அரசு. இதை ஒழித்துவிட்டு நம்மிடம் காசைப்பிடுங்கி தன் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளும் அரசையா நான் கொண்டு வர உதவப்போகிறேன் நமக்கு சிரமம் தரும் ஒரே சமாச்சாரம் பெட்ரோல் விலையேற்றம் மட்டுமே. அதைக்கட்டுக்குள் கொண்டு வர இந்த அரசோ அல்லது மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் பா ஜ கா அரசோ செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்போம். ஆக என் போன்ற நடுத்தர வர்க்கம் வரிச்சலுகை தரவில்லை என்னும் கோபத்தால் பா ஜ கவைத் ்தோற்கடித்தால் என்ன ஆகும்? காங்கிரஸ் அல்லது இடது சாரியுடன் கூட்டு வைத்துக்கொண்டு அதே காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். ராஹுல் பிரதமர் ஆவார். ப சி நிதி அமைச்சர் ஆவார். ஏ ராஜாகூட மந்திரி ஆகலாம். கனிமொழி பாதுகாப்பு அமைச்சர் ஆகலாம். இப்போது சொல்லுங்கள்.. எனக்கு ரூ 2500 வரி மிச்சம் தரவில்லை என்னும் கோபத்துக்காக பா ஜ கவை தோற்கடிக்க எண்ணும் ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்து ஆசாமியும் யோசிக்க வேண்டிய விஷயம்".

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing