Saturday 3 February 2018

இருபத்தொயோராம் நூற்றாண்டிலும் வெறுப்பரசியலைப் பேசுகிறவன், எழுதுகிறவன் விசித்திரமானவன்

Narenthiran PS அவர்களின் அருமையான அலசல்..!

ஒருவன் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்பதற்காக மட்டுமே அவன் மீது வன்மமும், கோபமுமாகத் திரிகிற பேமானித்தனத்தை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை. தன்னுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் பார்பபான்தான் எனப் பொருமுவதும், பாப்பானை அழித்தால் தான் உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்து கொள்ளமுடியும் என்கிற நினைப்பே கேவலமானது. விடலைத்தனமானது.

உலக நடப்பு அறியாத வயதில் அப்படி நடந்து கொள்ள முடியும். ஆனால் எட்டுக் கழுதை வயதிலும் அதனையே சொல்லிக் கொண்டு வெறுப்பரசியல் பண்ணுகிறவன் புழுவை விடவும் கேவலமானவன்.

பார்ப்பான் போனால் இன்னொரு சாதிக்காரன் வருவான். அவனை ஒழித்தால் இன்னொருவன். பிறகு இன்னொருவன் என்று தொடர்கதையாக அல்லவா நடக்கும்? இந்தக் காலத்தில் எந்தப் பார்ப்பான் வந்து நம் வாயில் மலத்தைத் திணித்துக் கொண்டிருக்கிறான்?

உலகம் போட்டிகளால் ஆனது. இங்கே திறமைக்கும், கல்விக்கும்தான் மதிப்பு. என்ன குட்டிக்கரணம் அடித்தாலும், எத்தனை இட ஒதுக்கீடு வந்தாலும் போட்டிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாதவனை உலகம் காலால் எட்டி உதைத்து வெளியே தள்ளும். நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் எடுக்கிற ஒரு பார்ப்பனக் குழந்தையோ அல்லது வேறொரு மேல்சாதிக் குழந்தைக்கோ சேரவேண்டிய இடமானது, பள்ளியில் பெஞ்சைத் தேய்த்துக் கொண்டு பார்டர் மார்க்கெடுத்து பாசாகும் ஒருவனுக்குக் கொடுக்கப்படுவது அநீதி என்கிற நினைப்பே நமக்கு இல்லையே! அது ஏன்?

படிக்காமல், அதற்கென உழைக்காமல் பார்டர் மார்க்கெடுத்து கல்லூரியில் இடம்பிடித்து, எந்தத் திறமையும், அறிவும் இல்லாமல் வெளியுலகிற்கு வந்தவனால் இன்றைய உலகில் போட்டியிட முடிவதில்லை. மிஞ்சிப் போனால் ஒரு அரசாங்க வேலையை வாங்கிக் கொண்டு அங்கும் பெஞ்சு தேய்க்கப் போவான். அப்படியே தப்பித் தவறி வெளியுலகிற்கு வருகிறவன் வெற்றி பெறமுடியாமல் தவிக்கிறான் என்பது உண்மையா இல்லையா? அதுதானே தமிழகத்தில் இன்றைக்கு நடக்கிறது?

நியாயமான முறையில் அரசாங்கக் கல்லூரியில் இடம் பிடித்திருக்க வேண்டிய பார்ப்பனனும், வேறு உயர்சாதிக்காரனும் அவனது அம்மாவின் தாலியை அடமானம் வைத்தாவது தனியார் கல்லூரிகளில் படித்து வெளியே வருகிறான். பாதுகாப்பாற்ற உணர்வுடனேயே வளரும் அவன் தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைக்கிறான். முன்னேறுகிறான். அதற்காக அவனை வெறுப்பது கோமாளித்தனமானது. கேவலமானது.

என்னுடைய வாழ்க்கையில் எல்லா சாதிக்காரனுடனும் வேலை செய்திருக்கிறேன். சண்டை போட்டிருக்கிறேன். அதில் பார்ப்பானும் அடக்கம். செட்டியானும் அடக்கம். முதலியானும் அடக்கம். தாழ்த்தப்பட்டவனும் அடக்கம். அதற்காக அவர்களின் சாதியைத் திட்டிக் கொண்டெல்லாம் நான் அலைந்ததில்லை. It is the part and parcel of the life. தனிப்பட்டோர் மீது எனக்குக் கோபமும், விரோதமும் இருந்திருக்கிறது. ஏனென்றால் நானொரு சாதாரண மனிதன்.

என்னை விடவும் ஒருவன் நன்றாக, திறமையாக வேலை செய்தானென்றால் நானும் அவன் அளவிற்குப் படிக்க, போட்டியிட மட்டுமே நினைத்திருக்கிறேன். பார்ப்பானை ஒழித்தால் எனக்குத் தங்கக் புதையல் கிடைக்கும் என்கிற அற்பக் கனவெல்லாம் இருந்ததில்லை. அப்படிக் கனவு காண்கிறவன் வாழ்க்கை முழுவதும் வருத்தப்பட்டே செத்துப் போவான். தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்ட் கபோதிகளைப் போல. சாதிக்கட்சித் தலைவனைப் போல.

பார்ப்பானை வெறுத்து டிஸ்கிரிமினேட் செய்கிற உங்களை ஒரு பணக்கார வட நாட்டான் அல்லது வெள்ளைக்காரன் அல்லது சீனாக்காரன் டிஸ்கிரிமினேட் செய்கையில் அந்த வலி உங்களுக்குத் தெரியவரும். இன்றைக்குப் பார்ப்பனர்களின் பிரியத்திற்குரிய ஆண்டாளைக் கேவலமாகப் பேசுகிறவன் நாளை அவனது  சுடலை மாடனைக் கேவலமாகப் பேசினால் பொறுத்துக் கொள்வானா?

ஆண்டாளும், சுடலமாடனும், நீங்களும், நானும், பார்ப்பனனும் தமிழ்க் கலாச்சாரத்தின் ஓர் அங்கம். வழி வழியாக வந்ததொரு அறுபடாத கலாச்சார இழையின் அடையாளம்தான் நாமெல்லோரும். நான் சொல்வதெல்லாம், இன்றைக்குப் பார்ப்பனனுக்கு நிகழ்ந்த கேவலம்தான் நாளை உங்களுக்கும் நடக்கும். அப்போது உங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க ஒருவனும் வரமாட்டான் என்பதுதான்.

இருபத்தொயோராம் நூற்றாண்டிலும் வெறுப்பரசியலைப் பேசுகிறவன், எழுதுகிறவன் விசித்திரமானவன். அவனொரு சரி செய்யவே முடியாத மனநோயாளி.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing