Thursday 8 February 2018

புதிதாக TV வாங்க சில குறிப்புகள்

35 ஆண்டுகால Service அனுபவத்தில் இருந்து :

புதிதாக  TV வாங்க சில குறிப்புகள் :
LED TV என்று விற்கப்படும் எல்லா TVயும் LCD TV தான். அதாவது, LED -LCD TV என்றே சொல்லப்பட வேண்டும். ஆரம்பத்தில் அப்படித்தான் Print செய்திருந்தனர்.இண்டிலுமே,  நமக்குப் படம் தெரியும் திரை LCD தான். அது ஒளிர்வதற்கு ஆரம்பத்தில் பின் பக்கத்தில் CCFL  விளக்குகள் இருந்தன(நம் வீட்டில் பயன்படும் CFL பல்பு போல) பின்னர் அது LED விளக்குகளாக மாறி உள்ளது. திரை என்னவோ LCD தான்.
அளவு: 32 இன்ச் TV பெரிய அளவு TVக்களை விட குறைவாக பழுது ஏற்படுகிறது. அதே போல, Resolution அதிகம் ஆகும்போது, ரிப்பேராகும் வாய்ப்புகள் அதிகம். படம் தெரிகின்ற, திரையில் வெற்றுக் கண்ணில்  தெரியாத Circuit / Track உண்டு. Resolution அதிகம் ஆக ஆக அவற்றின் நெருக்கம் மிக மிக அதிகம், பாதிப்பும்.

டிஸ்ப்ளே, பேனல், ஸ்க்ரீன் என்று அழைக்கப்படும் திரைப்பகுதியே அதிகம் பாதிக்கப்படுகிறது. கம்பெனிக்காரர்கள்  இவற்றை மொத்தமாகவே மாற்றுவார்களே அன்றி, அதில் உள்ள பழுதினை  சரி செய்வதில்லை. 80% ஸ்க்ரீன்களின் ரிப்பேர் சரி செய்யக் கூடியவை. தோராயமாக, ஸ்க்ரீன் மாற்றுவதை விட 60 முதல் 65% வரை செலவு குறைவு. கடந்த ஆண்டுகளில் நூற்றுக்
கணக்கான ஸ்க்ரீன்களை சரி செய்துள்ளேன்  (பெரும்பாலானவை பரணில் போடப்பட்டு இருந்தவை)
பழைய தொழில் நுட்பமான CRT TVக்களின் லைஃப் அதிகம் (approx. 30 வருஷம்)  பராமரிப்புச் செலவும் மிகக்குறைவு. உங்களிடம் இருப்பின், அதை exchange ல் போட்டு #அழித்து_விடாதீர்கள். ஒன்று, பரணில் போட்டு வையுங்கள் அல்லது தேவைப்படும் யாருக்காவது கொடுங்கள்.

32" LED -  TV லோக்கல் BRAND கள், ரூ12,000 ரேஞ்சிலேயே கிடைக்கின்றன. கண்டிப்பாக 2 -3 வருஷமாவது நன்றாகவே செயல்படுகின்றன. (Branded ம் அவ்வளவே :(    )  via : https://www.facebook.com/roamingraman

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing