Saturday, 24 March 2018

L I C OF INDIA என்றென்றும் இந்தியாவின் அடையாளம்

ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதமும் எல் ஐ சி யை  குறிவைத்து சில தனியார் நிறுவனங்கள் ஏதாவது ஒரு புரளியை  கிளப்பி விட்டாலும் ..
அதில் உண்மைதன்மை யை ஆராயாமல் சத்யம் டீவி போன்ற சேனல்கள் செய்திகளை முந்தி தருகிறோம் என்கின்ற பெயரில்  அவசரப்பட்டு சொல்லிவிட்டு  பிறகு மன்னிப்பு கேட்டுக்கொண்டாலும்..

எல் ஐ சி என்பது தாய் கம்பெனி. அதன் சேவையை வைத்துதான் மக்களுக்கு இன்சூரன்ஸ் மீது மிக பெரிய நம்பிக்கை வளர்ந்தது. அந்த நம்பிக்கையைதான்  நாமும் அறுவடை செய்துகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து சில தனியார் கம்பெனிகள்  எல் ஐ சி க்கு எதிரான சில வதந்திகளை அசுர வேகத்தில் பரப்பிக்கொண்டிருந்தாலும்..
அதையெல்லாம் முற்றிலும் ஒதுக்கி தள்ளிவிட்டு
எல் ஐ சி யை நாம் ஏன் கண் மூடித்தனமாக நம்ப வேண்டும்???

ஏனென்றால் எல் ஐ சி என்பது ஒரு பொதுதுறை நிறுவனம். அதாவது மக்களின் நிறுவனம். இதை அரசாங்கமோ அல்லது தனிப்பட்ட ஒரு நபரோ சொந்தம் கொண்டாட முடியாது . எல் ஐ சி யில் இருக்கும் ஒவ்வொரு பைசாவும் பாலிஸி தாரர்களுக்கு மட்டுமே சொந்தமானது.
ஒரு வேளை எல் ஐ சி தன் சேவையை நிறுத்திகொள்ளும் ஒரு நிலைபாட்டை எடுத்தால் கூட... எல் ஐ சி யின் பணத்தையும் சொத்துக்களையும்  இதில் பாலிஸி எடுத்தவர்களுக்கு மட்டுமே பிரித்து கொடுக்க வேண்டுமே தவிர...
அரசாங்கமோ தனிப்பட்ட ஒரு நபரோ எடுத்து கொண்டு போய்விட முடியாது.

எல்லோருக்கும் பிரித்து கொடுக்கும் அளவுக்கு எல் ஐ சி யில் அப்படி எவ்வளவு தான் சொத்து இருக்கிறது....??
ஆம் இருக்கிறது! புக் வேல்யூ படி பார்த்தாலே எல் ஐ சி யின் சொத்து மதிப்பு நாற்பது லட்சம் கோடிகள் இருக்கின்றன.
அதென்ன புக் வேல்யூ ???
உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால் திருப்பூரில் இருக்கும் எல் ஐ சி மெயின் கிளையின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் நான்கு கோடிகள் என்று  இருந்தாலும்.. அரசாங்க கணக்கின் படி அதன் புக் வேல்யூ வெறும் இருபது லட்சங்கள் மட்டுமே.

( அப்படியென்றால் நீங்கள் பல லட்சங்களாக, கோடிகளாக எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் சொத்துக்களின் புக் வேல்யூ எவ்வளவு இருக்கும் என்று  எண்ணிப்பாருங்கள். ஒரு வேளை நாளையே அரசாங்கத்திற்கு உங்கள் நிலம் தேவைப்பட்டால் எடுத்துக்கொண்டு புக் வேல்யூ படி சில ஆயிரங்களையோ அல்லது சில லட்சங்களையோ தான் தருவார்களே தவிர நீங்கள் கற்பனை  செய்து வைத்திருக்கும் பல லட்சங்கள், கோடிகள் கிடைக்காது. என்பதுதான் நிஜம்.
அதனால் தான் நாங்கள் உங்களிடம் திரும்ப திரும்ப சொல்லுவது... உங்கள் வருமானத்தையெல்லாம் சொத்துக்களாக மட்டுமே உருவப்படுத்தி  வைக்காதீர்கள். குறைந்தபட்சம் ஒரு நாற்பது சதவீதத்தையாவது எப்போது வேண்டுமானாலும் சுலபமாக கையாளக்கூடிய இடங்களில் அது சார்ந்த திட்டங்களில் பணமாக மாற்றி  வையுங்கள். அதில் ஒரு பெறும்  பகுதியையாவது இன்சூரன்ஸ்  கவரேஜ்க்குள் கொண்டு வந்து உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்  பாதுகாப்பு அடங்கிய  ப்யூர் ஒயிட் மணியாக செய்து வைத்துக்கொள்ளுங்கள்  என்று அழுத்தி அழுத்தி சொல்கின்றோம்.)
பல லட்சங்களாக, கோடிகளாக நீங்கள் எண்ணி கொண்டிருக்கும் உங்களின் சொத்து மதிப்பு புக் வேல்யூ படி சில ஆயிரங்கள், சில லட்சங்கள் தான் பெறும் என்றால்...
புக் வேல்யூ படி நாற்பது லட்சம் கோடிகளை வைத்திருக்கும் எல் ஐ சி யின் இன்றை சந்தை மதிப்பு எத்தனை ஆயிரம் கோடி கோடிகள் இருக்கும் என்று முடிந்தால் கணக்கு  போட்டு கொள்ளுங்கள்.!

இதன் விபரங்கள் தெரியாதவர்களுக்கும் .
தெரிந்தும் வதந்திகள் பரப்புபவர்களுக்கும் சொல்வது ஒன்றே ஒன்று தான்..
ஒரு வேளை எல் ஐ சி தன் முதலீடுகளையெல்லாம்  திரும்ப பெறுவது என்று முடிவெடுது விட்டால் அதனால் அதிர்ச்சி அடையபோவது ஆட்டம் கானப்போவது சிறு சிறு நிறுவனங்கள் அல்ல..
நம் இந்திய அரசாங்கம் தான். ஏனென்றால் எல் ஐ சி நம்மிடம் வாங்கும் பணத்தில் தொண்ணூறு சதவீதத்தை மக்களுக்கான திட்டங்களில் அரசாங்கத்திடம் தான் முதலீடு செய்கிறது. அதனால் தான் அரசாங்கம் எல் ஐ சி க்கு  G.G, 37 A (government guaranty sec.37 A) என்கின்ற அதாவது எல் ஐ சி யில் இருக்கும் மக்கள் பணத்திற்கு அரசாங்கம் பொறுப்பு என்கின்ற  உத்திரவாதத்தை கொடுத்திருக்கிறது. அதனால் எல் ஐ சி யை பொத்தி பாதுகாக்க வேண்டிய கடமையும் அக்கரையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. நாம் கவலை கொள்ள தேவை இல்லை.

மீதம் இருக்கும் பத்து சதவீதத்திற்கும் குறைவான பணத்தைத்தான் பங்குசந்தை சார்ந்த திட்டங்களில் எல் ஐ சி முதலீடு செய்கிறது. அதுவும் பாதுகாப்புக்குள் தான் இருக்கிறது. 
எப்படி என்று கேட்கிறீர்களா??
எந்த ஒரு நிறுவனமும் தன் பங்குகளை அவசரமாக விற்க்கும் போது தான் நஷ்டத்தை சந்திக்கின்றன.
சத்யம் கம்யூட்டர் நிறுவனத்தின் பங்குகளை அதிகளவில் வாங்கி வைத்திருந்த நிறுவனங்களில் எல் ஐ சி யும் ஒன்று !
சத்யம் கம்ப்யூட்டர் திவால் என அறிவித்த போது அறுநூறு ரூபாய்க்கு மேல் சென்று கொண்டிருந்த அதன் பங்குகள் வெறும் ஆறு  ரூபாய்க்கும் கீழ் சரிந்தன. அதில்  பங்குகளை வாங்கி வைத்திருந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் விற்று விட்டு வெளியேறிய போது எல் ஐ சி  அந்த தவறை செய்யவில்லை.
அதன் பிறகு சத்யம் நிறுவனத்தை "டெக் மகேந்திரா என்கின்ற நிறுவனம் வாங்கியது. இன்று அதன் பங்குகள்  பதினோராயிரத்தை தாண்டி போய்க்கொணிருக்கிறது.
ஏன் மற்ற நிறுவனங்கள் அவசரப்பட்டபோது எல் ஐ சி மட்டும் பொறுமை காத்தது ?
ஏனென்றால் எல் ஐ சி பணத்தை கையால்வது அதனை எதில் முதலீடு செய்யலாம் என்பதை தீர்மானிப்பதெல்லாம்  பல நூறு முன்னணி ஆடிட்டர்களை உள்ளடக்கிய ஒரு வலுவான டீம்.
அவர்கள் பரிந்துரையின் படி
எல் ஐ சி ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கும் போதே இந்த பங்கு இவ்வளவுக்கு உயரும் போது விற்று விடலாம் என்கின்ற இலக்கை நிர்ணயித்து விடுவார்கள். அந்த இலக்குக்கு ஒரு பைசா குறைவாக இருந்தால்  கூட விற்க்க மாட்டார்கள். 
அந்த பங்கு அந்த இலக்கை தொட்ட பின் ஒரு வேளை நாளையே அந்த பங்கு  இதைபோல் இரண்டு மடங்காக உயரப்போகிறது என்று நிச்சயமாக தெரிந்தால் கூட சரி ஒரு நாள் தானே பார்க்கலாம் என்று  நிறுத்தி வைத்து ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் மக்கள் பணத்தை கையாளுகின்றோம் இதில் துளி கூட ரிஸ்க் எடுத்து விடக்கூடாது என்பதில் அவ்வளவு கவனமாக செயல்படுவார்கள்.

இது தான் பங்கு சந்தைகளில் எல் ஐ சி யின் நூறு சதவீத வெற்றி பார்முலா. 
(பங்கு சந்தை சார்ந்த திட்டங்களில் வெறும் பத்து சதவீதத்தை மட்டுமே முதலீடு செய்து அதையும் பத்திரமாக திரும்ப பெற்று விடும்  எல் ஐ சி க்கே இந்த விமர்சனங்களையெல்லாம் சந்திக்கும் நிலமை என்றால்....
மக்கள் பணங்களையெல்லாம் முழுக்க முழுக்க பங்கு சந்தைகளிலேயே முதலீடுகள் செய்து விளையாடிக்கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டுகளின் நிலமையெல்லாம் வருங்காலங்களில் என்னவாகும் என்று கொஞ்சம் மனதில் வைத்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் ஈமு கோழியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியபோது இதை விட லாபமான வியாபாரம் உலகத்திலேயே இல்லை என வாக்குறுதிகளை கொடுத்தவர்கள் தான் இப்போது வேறு வேறு வேடங்களில் வந்துகொண்டிருக்கிறார்கள் அடையாளம் கான முயர்ச்சியுங்கள்.

ஆக எல் ஐ சி முப்பதாயிரம் கோடிகளை முதலீடு செய்திருக்கும் இந்த எட்டு நிறுவனங்களும் தங்களை திவால் என்று அறிவிக்க கோரிய மனுக்களை அரசாங்கமும் IRDA வும் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. எல் ஐ சி யும் அவசரப்பட்டு அந்த பங்குகளையெல்லாம் அடிமாட்டு விலைக்கு இன்னும் விற்றுவிடவுமில்லை. 
அவர்கள் திவால் மனுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் நம் பணம் நம் எல் ஐ சி க்குள் பத்திரமாக திரும்பி வந்த பிறகு தான் அது நடக்கும்.

இப்போது நம் எல் ஐ சி யை உரசி பார்க்க நினைத்து வதந்திகளை பரப்பிவிடும் திருவாளர்களுக்கெல்லாம் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று தான்...
L I C OF INDIA என்றென்றும் இந்தியாவின் அடையாளம்...

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing