Tuesday 17 July 2018

#ஸர்வம் #ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்

போலந்து நாட்டின் இந்துக்களுக்கு
எதிராக நடந்த ஒரு வழக்கு:
“இஸ்கான்” என்று அழைக்கப்படும்
கிருஷ்ண பக்தி இயக்கம் உலக முழுவதும்
இந்து மதம் பரவ ஒரு காரணமாகவும்
இருக்கிறது...
அப்படி இந்து மதம் உலக அளவில்
பரவுவதை விரும்பாத ஒரு கிறுத்துவ
கன்னியாஸ்திரி சுமார் நான்கு
ஆண்டுகளுக்கு முன்பு போலந்து
நாட்டின் தலைநகர் வார்சாவில்
”இஸ்கான்” அமைப்பை எதிர்த்து
நீதிமன்றத்தில் ஒரு வழக்கு
தொடர்ந்தார்.....

வழக்கும் விசாரணைக்கு
வந்தது....

கன்னியாஸ்திரியின் வாதம்
என்னவென்றால் “இஸ்கான்” போலந்து
நாட்டில் பகவான் கிருஷ்ணரைப் பற்றி
பிரச்சாரம் செய்து தங்கள் மதத்தை
பிரபலப்படுத்துகின்றனர்.....

ஆனால்
அவர்கள் அப்படி பிரபலப்படுத்தும்
கிருஷ்ணரோ மிகவும் ஒழுக்கமற்றவராக
இருந்துள்ளார்....அவர் சுமார் 16,000
கோபிகளை திருமணம்
செய்துகொண்டுள்ளதாக புராணங்கள்
சொல்கின்றன....

அப்படிப்பட்ட ஒரு
ஒழுக்கமற்றவரைப்பற்றி பிரச்சாரம்
செய்வது தடை செய்யப்பட வேண்டும்.....

”இஸ்கான்” சார்பில் எதிர்வாதம் செய்தவர்
நீதிபதியிடம் ஒரு வேண்டுகோள்
வைத்தார்...

.”தயவு செய்து வழக்கு
தொடர்ந்த கன்னியாஸ்திரியிடம் அவர்
கன்னியாஸ்திரியாக குருப்பட்டம்
பெறும் போது எடுத்துக் கொள்ளும்
உறுதி மொழியினை இந்த
நீதிமன்றத்தில் ஒருமுறை திரும்பச்
சொல்ல வேண்டி உத்தரவேண்டும்”
என்பதுதான்....

நீதிபதியும் அவ்வாறே அந்த
கன்னியாஸ்திரியிடம்
உறுதிமொழியினை ஒருமுறை
நீதிமன்றத்தில் ஒப்புவிக்கச்
சொன்னார்....
ஆனால் அவர்
சொல்லவில்லை.....

“இஸ்கான்” நபர் நீதிபதியிடம் தானே அந்த
உறுதிமொழியினை ஒப்புவிப்பதற்கு
அனுமதி கேட்டார்....நீதிபதியும் அதற்கு
சம்மதித்தார்....
அந்த உறுதிமொழியின் படி ஒருவர்
கன்னியாஸ்திரி ஆனால் அவர்
ஏசுநாதருடன் திருமணம் செய்து
வைக்கப்பட்டவர்....

”இஸ்கான்” நபரின் வாதம்: கனம் நீதிபதி
அவர்களே...! பகவான் கிருஷ்ணர் 16,000
பெண்களை மட்டுமே திருமணம் செய்து
கொண்டுள்ளார்.....
ஆனால் சுமார் இரண்டு மில்லியன்
(இருபது லட்சம்) கன்னியாஸ்திரிகள்
ஏசுநாதருடன் திருமணம் செய்து
கொண்டுள்ளதாக உறுதிமொழி
ஏற்றுள்ளனர்....

அப்படி இருக்கையில்
பகவான் கிருஷ்ணர் மற்றும் ஏசுநாதர்
இருவருக்கிடையில் யார் அதிகமாக
ஒழுக்கமற்றவர்.... அது தவிர அந்த
கன்னியாஸ்திரிகளை என்னவென்பது....?

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.....
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing