Tuesday 17 July 2018

அந்த வீடியோ...சராசரி இந்தியனை பிரமிக்க வைத்து விட்டது....❤ ஹிமா தாஸ்

அஸ்ஸாமின் நெல் வயல்களில் இருந்து புறப்பட்டு, கோர்வையாய் ஆங்கிலம் பேசத்தெரியாமல், வித்தியாசமாக ஹிந்தி பேசும் ஒரு இருபது வயது கூட நிரம்பாத ஒரு மிகசாதாரணமான பெண்.. ஆனால் மிக அசாதாரணமான ஹிமா தாஸ்.. இருபது வயதுக்குள்ளான 400 மீட்டர்
தடகள உலக சாம்பியன் பட்டத்தை, தங்க பதக்கத்தை ஃபின்லாந்தில் முதல் இந்தியனாக வென்றதுமல்லாமல், ஆங்கில கேள்விகளை புரிந்து, உடைந்து போன ஆங்கிலத்தில் பெருமையாய் பதில் சொல்லி.. இந்தியா என் தேசம்.. நான் பெருமைப்படுகிறேன்.. இது என் மூவர்ணக்கொடி என்று திரங்காவை, முத்தமிட்ட அந்த வீடியோ...சராசரி இந்தியனை பிரமிக்க வைத்து விட்டது. நாம் வாழ்த்த வேண்டிய அந்த இளைஞி, இந்தியாவை வாழ்த்தும் வீடியோ தந்தது கண்கொள்ளா ஆனந்தமும், பெருமித உணர்வும். ஹிமாவிற்கு ஆங்கிலம் வரவில்லை என்கிற AFI மற்றும் ஊடகங்களை எந்த காலணியாலும் விளாசலாம்.
கட்சிகளின் சார்பு நிலைகளை கடந்து, மொழி தாண்டி, இனம் கடந்து,கண்ணுக்கு புலப்படாத மானில எல்லைகளும், ஊர் எல்லைகளையும் தாண்டி..  தெரியும் , தெரியப்படுத்தி, ஒவ்வொருவரிடமும் வாழும் இந்த உணர்வுதான் இந்தியன் என்பது..
இந்தியா என்கிற தேசம் அன்னியமானது. நம்மை அடிமைப்படுத்துகிறது என்று மேடைக்குமேடை மனதில் விஷத்தை ஏற்ற முயலும், வேலை வெட்டியற்ற சினிமா டைரக்டர்களுக்கும், பொய் பெயர்கள் கொண்ட காந்திகளுக்கும், மெத்தப்படித்தோம் என்கிற கர்வ ஜேஎன்யூ அர்பன் நக்ஸல் முட்டாள்களுக்கும், இப்படி உலவும் விநோத ஜந்துக்களுக்கும், ஒன்று புரிந்திருக்கும்.. இந்திய தேச உணர்வை எந்தவித போராட்டங்களாலும் இன மொழி பிரிவினைகளாலும் அழிக்கவே முடியாது என்பதுதான் . காரணம் நிஜ வாழ்வில் சாதிப்பவர்களை இவர்கள் சந்தித்திருக்கவே மாட்டார்கள்..இந்தியன் என்கிற எண்ணம் பாஸ்போர்ட்டில் மட்டும் இல்லை, காந்தி நோட்டில் மட்டுமில்லை, தபால்தலைகளிலோ, ரயில் பெட்டிகளிலோ இல்லை.. இவை நம் போன்ற எளிய மனிதர்களின் உள்ளத்தில் வாழும் அழிக்க இயலாத அழகிய ஒரு உணர்வுடா.. 
..❤ ஹிமா தாஸ்

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing