Tuesday 17 July 2018

#மருத்துவ #முதுமொழிகள்

மருத்துவ முதுமொழிகள்
1. பணமுள்ளவருக்கு கஸ்தூரி, ஏழைக்கு மஞ்சள்.
2. ஆவாரை இருக்க சாவாரை என் சொல்வேன்.
3. வல்லாரையினும் நல்லாருமில்லை. வல்லாரும் இல்லை.
4. மூலிகை அருத்தால் மூன்று உலகும் ஆளலாம்.
5. பொங்கினவாயிற்றுக்கு
பொடுதலைச்சாறு.
6. அருஞ்சுனை நீருண்ண அப்போதே நோய் தீரும்.
7. கதிரவன் ஒளியில் பண்டம் பாழ் ஆகாது.
8. அஞ்ஞானம் தொலைந்தால் ஒளடதம் பலிக்கும்.
9. சேய்க்கு நோயானால் தாய்க்கு மருந்திடு.
10. மைந்தரை வளர்க்கும் மணத்தக்காளி.
11. தேற்றாங் கொட்டையிட்டு தேற்று மைந்தரை.
12. வாயிற்குச் சுவை வயிற்றிற்கு கேடு.
13. நல்வாழ்வின் அருமையை நோயில் தான் அறியலாம்.
14. கொன்றைப் பட்டை கோடி நோயை போக்கும்.
15. மிளகை நம்பினால் தீராத நோய் தீரும்.
16. பாடான மருந்திற்குப் பாலும் தேனும்.
17. தண்ணீர் விட்டான் கிழங்கு தழுவப்பால் சுரக்கும்.
18. அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்.
19. மறுசாதம் போட்டுக்கொள்ளாதவன் மாட்டுப்பிறப்பு.
20. தாமரை இலையில் உணவு கொள்ள தீராப் புண்ணும் தீரும்.
21. ஆலிலையில் உணவு கொள்ள முகம் வசீகரம் ஆகும்.
22. எருக்கிலையில் உணவு கொள்ள கடிவிஷம் தீரும்.
23. உண்டி வெல்வோர்க்கு உறுபிணி ஏது.
24. குடிநீர் தோஷங்கட்கு உட்தாமணிக்குடிநீர் மாற்று.
25. வங்கத்திற்குக் காட்டுப் புளியும் வசம்பும் மாற்று.
26. நொந்த உடம்பிற்கு வெந்த அமுதிடு.
27. எள்ளின் துவையல் எதற்கும் நன்று.
28. உணவில் உப்பை ஒழித்தவன் யோகி.
29. நாக்கிலே இருக்குது நன்மையும் தீமையும்.
30. வெங்காயம் தின்பார்க்கு தன் காயம் பழுதில்லை.
31. வெந்தால் தெரியும் வெங்காயம் மாண்பு.
32. உடல்துவாரம் ஒன்பதின் நோயும் சிறுகீரை உணவு சிறுகச் செய்யும்.
33. கண்ணேருக்கு கால் மண் சுற்றியிடு.
34. கரிவேப்பில்லை அரைத்துக் கண் கட்டிக்கு இடு.
35. கண்களில் நோயானால் உள்ளங்கால்களில் மருந்திடு.
36. எருச்சிக்கல் நீங்கல் உடல் சிக்கல் தீரும்.
37. தோகை மோகமுற தொருமயில் மாணிக்கம்.
38. அரவம் தீண்டினால் அழிஞ்சல் பட்டை வேறிடு.
39. அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.
40. பப்பாளிப் பழத்தை தேமல் மேல் தேய்.
41. சேற்றுப் புண்ணிற்கு சிறுநீர் விட்டாற்று.
42. மேனிப் புகைக்கு மூலம் உள்ளேகும்.
43. புண்ணாக்கிற்கு தேங்காய்ப்பால் விட்டாற்று.
44. கை கண்ட மாத்திரை வைகுண்ட யாத்திரை.
45. பொன்னானது வேண்டினால் பூவரசைப் பார்.
46. கடுமையான நோய்க்கு கடவுளே மருந்து.
47. எந்த வீக்கட்திற்கும் எருக்கின் பாலடி.
48. மாந்ரீகன் வீட்டுபேயும், மருத்துவன் வீட்டு நோயும் போகாது.
49. வீரம் விட்டால் நீற்றினம் போச்சு.
50. சாரம் விட்டால் செய்நீர் போச்சு.
51. காரம் விட்டால் உருக்கினம் போச்சு.
52. துருசு விட்டால் குருவே போச்சு.
53. குருவில்லா வித்தை பாழ்.
54. வெங்காயம் தின்று தன்காயம் போற்று

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing