Monday 2 July 2018

மோடி தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்?

மோடி தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்!!!???– “Go Back Modi” தமிழகமக்களின் தோல்வி :
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மோடியை ஏன் இவ்வளவு வெறுக்க வேண்டும் அப்படி மோடி தமிழகத்துக்கு என்ன செய்து விட்டார். 2004 முதல் 2014 வரை நடந்த காங்கிரஸ் ஆட்சியில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு ஒரு சிறப்பு என்னவென்றால்
தமிழகத்தை சார்ந்த மத்திய அமைச்சர்களே அதிகம் நிதி துறை , கப்பல் துறை , சாலை போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்பம் , ஜவுளித்துறை , ரயில்வே துறை என பல முக்கிய துறைகளை அலங்கரித்தனர் நமது MP கள் . அதனால் தமிழகத்திற்கு நிகழ்ந்த பெரும் மாற்றம் அமைச்சர்களின் வாரிசுகள் உறவினர்கள் சொகுசு கார்களில் வளம் வருவது,புது புது லெட்டர் பேட் நிறுவனங்கள் முழைப்பது,உலகையே அதிரவைத்த கோடி கணக்கான ஊழல் என பல சாதனைகளை செய்தனர்.
ஆனால் மோடி அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது??
1. UDAY மின் திட்டத்தில் தமிழக மின்வாரியத்தை இணைத்து TANGEDCO வின் 22000 கோடி ரூபாய் கடனை அரசு ஏற்றது (இதன் மூலம் புதிய மின் திட்டங்களில் வழிகாகத்தால் முதலீடு செய்ய முடிந்தது)
2. Swach Baarath திட்டம் மூலம் (தமழகத்தில் அதிகம் கிண்டலடிக்கப்படும் திட்டம்) கிராமப்புறங்களில் 25 லட்சம் கழிப்பறைகளை,நகர்ப்புறங்களில் 2 . 5 லட்சம் கழிப்பறைகளை காட்டிக்கொடுத்து, கிட்டத்தட்ட 80 % தமிழத்தை Open defecation free என அறிவித்தது (வெட்டவெளியில் கழிக்க அவசியம் இல்லாத)இது 2014 49 % தான் இருந்தது..
3. முத்ரா திட்டத்தின் மூலம், சிறு குறு தொழில் துவங்க, விரிவாக்க இந்தியாவிலேயே அதிகப்படியாக சுமார் 52000 கோடி கடன் வழங்கியது
4. காலம் காலமாக இருந்து வந்த தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கி,மீனவர்களுக்கு பயிற்சி அளித்து வருவது (இங்கே சில விஷமிகள் மீனவனுக்கு மீன் பிடிக்க எதுக்கு பயிற்சி என நக்கல் அடிப்பார்கள், ஆனால் எல்லா மீனவர்களுக்கு இன்று உள்ள புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தெரியாது என்ற அறிவுகூட அவர்களுக்கு இல்லை)
5. ஆதாரை ரேஷன் கார்டோடு இணைத்து கிட்டத்தட்ட 60 லட்சம் போலி ரேஷன் கார்டுகளை (தமிழ்நாட்டில் மட்டும்) கண்டுபிடித்து பல்லாயிரம் கோடி மக்கள் வரி பணத்தை தவறானவர்கள் கைகளுக்கு செல்லாமல் பாதுகாத்தது,
6. Smart City திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 12 நகரங்களை தேர்ந்தெடுத்து முதற்கட்டமாக 2400 கோடி ஒதுக்கியது (இதில் மாநில அரசு வெறும் 1 % ஐ தான் இதுவரை செலவழித்திருக்கிறது என்பது வேறு கதை, ஆனால் இந்த ஆண்டு முதல் இது மேலும் வேகம்பிடிக்கும் என்று மாநில அரசு சொல்லி இருக்கிறது)
7. ரூபாய் 4000 கோடி ரூபாய் செலவில் சென்னையில் மிகப்பெரிய (தினம் 40 கோடி லிட்டர்) கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்தது
8. கோதாவரி காவிரி இணைப்பிற்கான வேலைகளை துவங்கி இருப்பது
9. சொட்டு நீர் விவசாயத்திற்கு 40 % மானியம் அளித்து 75000 hectare நிலத்தை பாசனத்திற்கு கொண்டு வந்தது (மாநில அரசும் ஊக்கம் கொடுத்து வருகிறது)
10. Fasal Bhima Yojana பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் தமிழக விவசாயிகளுக்கு ரூ.2000 கோடிகளுக்கு மேல் நஷ்டஈடு வழங்கியது
11. மதுரை – வஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி, வஞ்சி மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோயில் மற்றும் கன்னியாகுமரி – நாகர்கோயில் – திருவனந்தபுரம் என்று மூன்று பாதைகளை இரட்டை வழித்தடமாக மாற்றுதல் மற்றும் மின்சார தண்டவாளங்களாக மற்ற 3600 ஒதுக்கி பணிகளை மேற்கொண்டிருப்பது (இது பல ஆண்டுகளாக அம்மாவட்ட மக்களின் கோரிக்கை)
12. மேற்கொண்டு வரும் சாலை திட்டங்கள்
– 2250 கோடி செலவில் தாமப்ரம் செண்டர்கள்பட்டு பறக்கும் சாலை அமைத்தல்

– 1500 கோடிகள் செலவில் பூந்தமல்லி மதுரவாயல் விரைவு சாலை அமைத்தல்
– 1000 கோடி செலவில் சென்னை நெல்லூர் விரைவு சாலை அமைத்தல்
– சென்னை – தடா , திருச்சி சிதம்பரம், பூந்தமல்லீ வாலாஜாபாத் , விழுப்புரம் –
நாகப்பட்டினம் ஆகிய பாதைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுதல்

– மதுரை – சேலம் – கோவை பேரூந்துநிலையங்களை நவீனமயப்படுத்தல்
– 10000 கோடிகள் சென்னை – சேலம், 20000 கோடிகள் செலவில் சென்னை – பெங்களூரு அதி
விரைவு சாலை அமைத்தல் (இன்னும் துவங்கவில்லை, ஆனால் விரைவில் இரண்டும்
துவங்கவுள்ளது)

13. 1900 கோடிகள் செலவில் AIIMS ஆஸ்பத்திரி அமைத்தல்
14. pradhan manthri awas yojana திட்டம் மூலம் இந்த நிதியாண்டுக்கு மட்டும் 25000 க்கும் மேற்பட்ட வீடுகள் (இந்தியாவிலேயே மதிய பிரதேசத்திற்கு அதிக படியாக) ஏழைகளுக்கு கட்டிக்கொடுத்தல்
15. பல ஆண்டுகளாக நிலவி வந்த காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை எண்ணி மேலாண்மை ஆணையம் அமைத்தல், ஜல்லிக்கட்டிற்கு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட தடையை நீக்குதல், இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்த தமிழக மீனவர்களை காத்துதல் (காங்கிரஸ் ஆட்சியில் 600 கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்) , ராஜபக்சேவை இந்தியாவின் RAW அமைப்பின் மூலம் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புதல் (இதை ராஜபக்சவே ஒப்புக்கொண்டுள்ளார்)
ஆனால் இங்கே சொன்ன இந்த பட்டியல் இந்த 4 ஆண்டுகளுக்குள் நடந்தது, நடந்துகொண்டிருப்பது. இதை தயவு செய்து கடந்த 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியுடனும், இதற்க்கு முன் இருந்த காங்கிரஸ் திமுக ஆட்சியுடனும் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். அப்படி ஒப்பீட்ட பிறகும் பாஜக கால் ஊன்ற முடியாது, மோடி ஒழிக என்று சொன்னால், நிச்சயம் இங்கு உள்ள அரசியல்வாதிகள் அவர்களில் அடுத்த 20 தலைமுறைக்கு பணம் சேர்க்க மக்களை பயன்படுத்தி வருவது வெட்கக்கேடு.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing