Tuesday, 3 July 2018

40 வருஷமாய் தீராமல் இருந்த காவிரி பிரச்சனை தீர்ந்திருக்கிறது

40 வருஷமாய் தீராமல் இருந்த காவிரி பிரச்சனை தீர்ந்திருக்கிறது..! 
கர்னாடகா செய்த ஆட்சேபத்தை உதறித் தள்ளி, மத்திய பிஜேபி அரசு காவிரி மேலாண்மை அமைத்து, முதல்  மீட்டிங் போட்டு தமிழகத்திற்கு சாதகமாய் முதல் உத்திரவும் வெளியிட்டு விட்டது..!
ஆனால் பாருங்கள்....
^^^^^

"கர்னாடக சிறையில் இருந்த காவிரித் தாயை
மீட்டு வந்த மோடி மகானே..! தமிழர்களின் கண்கண்ட தெய்வமே..! தமிழ் விவசாயிகளின் உயிர்காத்த உத்தமரே..! விடிவெள்ளியே..! தமிழகத்தைக் காக்க வந்த தங்கத் தலைவனே..!"
...... இப்படி ஒரு பேனர், போஸ்டர் கூட தமிழ்நாட்டில் எங்கும் இல்லை..!
தமிழ் சினிமாக்காரர்களை வைத்து 'பிரம்மாண்ட' பாராட்டு விழா  நடத்தி பல கட்சித் தலைவர்களும், ரஜனியும் மோடியை வானுயர புகழ்ந்து  பேசச் சொல்லி வற்புறுத்தப் படவில்லை..! அதில் நடிகைகள் கொஞ்சமாய் டிரஸ் போட்டுக் கொண்டு  குதித்து ஆடுவதை  மோடி உட்கார்ந்து ரசித்துப் பார்க்கவில்லை..!
தினத்தந்தி, மாலைமுரசு, தினமலர்  பத்திரிக்கைகளில் 20 பக்க பாராட்டு விளம்பரங்கள்  இல்லை..! அட, ஒரு சின்ன வரி விளம்பரம் கூட இல்லை..!
கேவலம்,  தமிழ் டிவி சேனல்களில் ஒரு  'ப்ரேக்கிங் நியூஸ்'  கூட இல்லை அய்யா..?
"காவிரித்தண்ணீர் மட்டும் வரவில்லையென்றால் ,   தற்கொலைதான்..!"  என்று புலம்பிய விவசாயிகள் ஒருத்தர் கூட   'நன்றி..'  என்று  முணுமுணுக்கக் கூட இல்லை..!  அவர்களுக்கு காசு கொடுத்து சொல்ல வைக்க ஒரு டிவி சேனலும் இல்லை..!
^^^^^^

இப்டி இருந்தால்,  பிஜேபி தமிழ்நாட்டில்  நோட்டாவை விட ஜாஸ்தி எப்படி வாங்க முடியும்...? 
முடியாது..! முடியவே முடியாது..!  எந்நாளும்   முடியாது..!

வாங்க தமிழர்களே....!  காவிரிப் பிரச்சனை தீந்துட்டா அதனால என்ன..?  'நோட்டாவைத் தாண்டாத  பிஜேபி..'  என்று கிண்டல் செய்து  நாம் நம்  மீம்ஸ்களைத் தொடர்வோம்..!  நமக்கு தெரிந்தது அது ஒன்றுதானே..?
நாம் 'தமிழ்ர்கள்'..!  நம் கண்களை நாம் திறந்து பார்க்கவே கூடாது..!  காங்கிரஸ் மத்தியில் இருந்திருந்தால் இது  நடந்திருக்காது என்பதை யோசிக்கவும் கூடாது; வெளியே பேசவும் கூடாது..!
உண்மையும்,  நேர்மையும், நன்றியும், மனசாட்சியுமா நமக்கு  முக்கியம்..?  தேவையே இல்லடா..! தமிழன்டா..!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing