Thursday 13 September 2018

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை

காயமே (உடலே) மருத்துவர் !!
                         காய்கறிகளே மருந்து !!!
உணவை மருந்தாக்கு !!
                       மருந்தை உணவாக்காதே !!!
தலைப்பு  :  பசியின்மையால்  சாப்பிடவும் , குடிக்கவும் முடியாமல் சிறிதளவு நீர் குடித்தால் கூட வாந்தி ஏற்படும் நிலையிலிருந்து
விடுபட.
---------------------------------------
சத்துக்கள்
--------------------
 எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.
தீர்வு
-----------------------------------
எலுமிச்சம் பழம் தோலுடன் (சிறியது1) ,  புதினா (சிறிதளவு) , கறிவேப்பிலை (சிறிதளவு) , கொத்தமல்லித் தழை (சிறிதளவு),வெற்றிலை (2) , இஞ்சி (1 துண்டு)  ,  இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மாலை என இருவேளையும்  கொஞ்சம் கொஞ்சமாக உமிழ் நீருடன் கலந்து மெதுவாக குடிக்கவும்.
முளைக் கீரையுடன்  மிளகு , சீரகம் ,
பூண்டு ,சின்ன வெங்காயம் ,மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக்  கொதிக்க
வைத்து   உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
இரவு படுக்கப் போகும் முன்
----------------------------------------------------
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing