Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Wednesday, 25 December 2019
நாளை சூரிய கிரகணம்... என்ன செய்யலாம்?... என்ன செய்யக்கூடாது?
மோடியும் துரோகிகளும்
Friday, 13 December 2019
பிஸ்கட் அதிகம் சாப்பிடுவது நல்லதா?.
Monday, 25 November 2019
சிவபுராணத்தின் பெருமைகள்
Sunday, 24 November 2019
Why should companies recruit**people over 50?
Tuesday, 19 November 2019
#கர்மா_வலியது
Wednesday, 6 November 2019
நவம்பர் 10-13 வெளியூர் பயணத்தை தவிர்க்கப்பாருங்க
Saturday, 2 November 2019
#கந்தர்_சஷ்டி_விரதம் ஸ்பெஷல் !
Wednesday, 23 October 2019
#தீபாவளி ஸ்பெஷல் !சாஸ்திரத்தில் #பட்டாசு கொளுத்தச் சொல்லப் பட்டுள்ளதா?
Tuesday, 22 October 2019
இப்பதான் நாம சரியான ஆயுதத்த கைல எடுத்திருக்கோம்
Saturday, 19 October 2019
தூக்கம் தொலைத்த இரவுகள்.!
தூக்கம் தொலைத்த இரவுகள்.!
கடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது? என உங்களுக்கு நினைவிருக்கிறதா?
கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச் செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா?
8:00 மணிக்குள் இரவு உணவு முடித்து, 8:30-க்கு வெளிச்சம் அணைத்து, பேசிக்கொண்டே படுக்கையில் விழுந்தால், 9 மணிக்குள் உறங்கிப் போவோம். அது ஒரு காலம்.
9 மணித் தூக்கம் என்பது, 10 மணியாகி, நள்ளிரவாகி, இப்போது அதிகாலை வரை வந்துவிட்டது.
அதிகாலை 3 மணி, 4 மணி வரைகூட விழித்திருக்கிறார்கள்.
இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒருநாள் தூக்கம் வராமல் இப்படி ஆவது, என்பது எல்லாம் தனி.
எந்த உடனடி காரணமும் இல்லாமல் தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக் கொண்டிருக்கின்றனர்.
இதன் விளைவுதான், இந்த 20 ஆண்டுகளில் புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள்.
இரவுத் தூக்கம் தள்ளிப் போவதற்கும், நோய்களின் வருகைக்கும் நேரடித் தொடர்பு உண்டு.
தவறான வாழ்வியல் முறைகளால் ஏற்படும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் பக்கவாத நோய், போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
நம் இரவுத் தூக்கம் எதனால் தள்ளிப் போகிறது?
நமக்கு ஏன் தூக்கம் வருவதில்லை?
இதற்கு `நமது உடல் பிரச்னைகள், மனக் கவலைகள் தான் காரணம்' என நினைக்கிறோம்.
இது முழு உண்மை அல்ல.
உண்மையில் நாம் உறக்கத்தைத் தள்ளிப்போடும் ஒவ்வொரு நிமிடத்திலும், பல நிறுவனங்கள் பல கோடிகளுக்கு வருமானம் பார்க்க ஆரம்பித்து விட்டன.
இரவுச் சந்தையில் தான் இப்போது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு `கோடி’கள் புரள்கின்றன.
இரவுச் சந்தை என்பது, முழுக்க முழுக்க டிஜிட்டல் சந்தை.
டிஜிட்டல் பொருட்களை நாம் சரியாக அணுகத் தெரியாமல் தடுமாறுவதையே வியாபாரம் ஆக்கிவருகிறார்கள்.
அதிகரித்து வரும் `காஸ்ட் ஆஃப் லிவிங்' மற்றும் குடும்பக் கடமைகளைச் சமாளிக்க, தனக்குப் பிடிக்காத வேலைகளையும் செய்தாக வேண்டும்.
அதுவும் தொழிலாளர் சட்டத்தை மதித்து 8 மணி நேர வேலை எல்லாம் கிடையாது. குறைந்தது 10 மணி நேரம் உழைக்க வேண்டும்.
அதில் டார்கெட்டை எட்டிப்பிடிக்க வேண்டும்.
மனஉளைச்சல் தரும் இந்த வேலையைச் செய்து விட்டு, வெளியே வந்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டும்.
சோர்வுடன் வீட்டுக்கு வந்து விழுந்ததுமே டி.வி-யை ஆன் செய்து விடுகிறார்கள்.
அந்த மாய உலகத்தில் விரியும் வண்ண வண்ணக் காட்சிகளில் மனம் மயங்குகின்றனர்.
இளம் வயதினர் மட்டுமின்றி, பலரும் ஸ்மார்ட்போனில்: ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என மூழ்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
சமூக வலை தளங்கள் எனும் உலகத்துக்குச் சென்று விட்டால் அங்கு அதற்கான வேடம் தரித்து பலர் பிஸியாகி விடுகிறார்கள்.
முன்னர் எல்லாம் இரவு உணவு முடித்ததும் திண்ணையில் ஓரிரு மணி நேரம் நண்பர்களோடு உட்கார்ந்து பேசிவிட்டே உறங்கச் செல்வார்கள்.
இப்ப வீட்டுத் திண்ணை வாட்ஸ்அப் ஆனது.
வாட்ஸ்அப் உரையாடலில் நேரம் போவதே தெரிவதில்லை.
சொந்த வீட்டில் இருப்பவர்களுடன் கூட, வீட்டில் இருந்து கொண்டே சமூக வலைதளங்களின் வழியே தொடர்பு கொள்பவர்களும் இருக்கிறார்கள். இது உண்மை.
தினமும் நள்ளிரவைத் தாண்டிய சாட்டிங்குக்குப் பிறகு `குட்மார்னிங்' சொல்லி விட்டுத் தான் படுக்கைக்குச் செல்கிறார்கள்.
இரவு உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென எழுந்து, `ஃபேஸ்புக்கில் போட்ட போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ்? வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா?' என அடிக்கடி செக் செய்து கொண்டே இருப்பதை `கம்பல்சிவ் பிஹேவியர்' எனச் சொல்லும் ஒருவகையான மனநலப் பிரச்னை என்றும், `கண்டிஷனல் இன்சோம்னியா' எனும் தூக்கமின்மை நோய் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
பலர் தினமும் காலையில் விழித்து எழுந்ததும் செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா?
தலையணை அருகே இருக்கும் மொபைலை எடுத்து இன்டர் நெட்டை ஆன் செய்து, வாட்ஸ்அப்பில் ஏதேனும் மெசேஜ் வந்திருக்கிறதா? எனப் பார்ப்பது தான்.
நாம் எவ்வளவு தூரம் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி வருகிறோம் என்பதை உடனடியாக உணர வேண்டிய தருணம் இது.
இரவுத் தூக்கம் தடைபடுவதால் ஏற்படும் பிரச்னைகள்:
நமது உடலுக்குள் மன சுழற்சிக் கடிகாரம் இருக்கிறது.
பொதுவாக சூரிய உதயத்தின் போது எழுந்து உற்சாகமாக வேலை செய்வதும், சூரியன் மறைந்த பின்னர் இரவு உணவை முடித்து விட்டு உறங்கச் செல்வதும் தான் இயற்கையோடு இணைந்த வாழ்வு.
ஏன் நாம் சூரிய வெளிச்சத்தில் மட்டும் இயங்க வேண்டும் என்பதற்கு அறிவியல் விளக்கமும் உண்டு.
சூரியன் மறைந்த பிறகு, இருட்டு நேரத்தில் தான் " மெலட்டோனின் " முதலான பல ஹார்மோன்கள் நமது உடலில் சீராகச் சுரக்கும்.
நாம் இரவு நேரத்தில் உடலுக்கு ஓய்வு தந்து உறங்கும் போது தான் "மெட்டபாலிசம்" எனும் வளர் சிதை மாற்றம் உடலில் சீராக நடக்கும்.
நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான குரோத் ஹார்மோன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான, ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டீரான் போன்ற பிரத்யேக செக்ஸ் ஹார் மோன்கள் சமச்சீராகச் சுரக்கும்.
முறையற்ற இரவுத் தூக்கத்தால் ஹார்மோன்கள் சீராக உற்பத்தி செய்யப் படாமல் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
கடந்த சில வருடங்களாக குழந்தைப் பேறின்மை பிரச்னை இளம் தம்பதிகளிடம் அதிகரித்து வருகிறது.
பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, ஆண்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறைவு ஆகியவற்றுக்கு, முறையற்ற இரவுத் தூக்கமே முக்கியக் காரணம்.
ஒழுங்கற்ற தூக்கத்தால்: பயம், பதற்றம், சோர்வு ஆகியவை வருகின்றன.
மனநலன் சார்ந்த பல பிரச்னைகள் வருவதற்கும் இதுதான் காரணம்.
இரவு நெடுநேரம் கழித்து உறங்குவதாலும், போதுமான நேரம் தூங்காததாலும், ஆழ்நிலை தூக்கம் அடையாமல் மேம் போக்காகத் தூங்குவதாலும், மெள்ள மெள்ள உடற்பருமன், சர்க்கரை நோய், குறிப்பாக ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
எல்லோராலும் இயல்பாக உடனடியாகத் தூங்கிவிட முடிவதில்லை. ஒவ்வொருவருக்கும் தூக்கம் தடைபடுவதற்கு வெவ்வேறு காரணிகள் இருக்கின்றன.
பொதுவாக, தூக்கத்தைப் பாதிக்கும் காரணி வெளிச்சம் தான்.
இருள் தான் மனிதர்களுக்குத் தூக்கத்தைத் தூண்டும்.
அதனால் தான் வெளிச்சத்தை அணைத்து விட்டுத் தூங்குகிறோம்.
சமீப ஆண்டுகளாக இரவிலும் வெளிச்சம் கண்களைப் பறிக்கிறது.
வீதிகளில் மட்டும் அல்ல, வீட்டுக்குள்ளும் இரவு வெளிச்சம் அளவுக்கு அதிகமாக அதிகரித்து விட்டது.
ஒரு காலத்தில் மின்சார விளக்கு மட்டும் தான் நமக்கு இரவு வெளிச்சம்.
பிறகு டி.வி வந்தது, கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப், டேப்லெட் எல்லாம் வந்துவிட்டன.
அனைத்தும் அதிஉயர் வெளிச்சத்தை உமிழ்கின்றன.
இதனால் நமது தூக்கம் தள்ளிப் போகிறது.
மொபைல் வெளிச்சம் தூக்கத்துக்குக் கடும் எதிரி.
பலர் அறை விளக்குகளை அனைத்து விட்டு மொபைலில் நோண்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.
கண்களுக்கு அருகில் வைத்து மொபைலைப் பயன்படுத்தும் போது, அந்த வெளிச்சம் நமது கண்களையும் மூளையையும் பாதிக்கும்.
தூக்கத்தைத் தாமதப்படுத்தும்.
ஒவ்வொருவருக்கும் வேலை நேரம் என்பது வித்தியாசப்படும்.
வேலைக்கு ஏற்ப தங்களது வாழ்வியல் முறையை ஆரோக்கியமான வகையில் மாற்றிக் கொண்டால் பிரச்னை வராது.
பொதுவாக இரவு 9 மணிக்குள் உறங்குவதும். காலை ஐந்து மணிக்குள் எழுவதும் தான் சிறந்தது.
அதிகத் தூக்கம் எப்படி ஆபத்தோ, அதுபோல குறைந்த தூக்கமும் ஆபத்தானது.
இரவு தாமதமாக உறங்கினாலும் காலையில் அலாரம் வைத்து சீக்கிரமாக எழுந்துவிடுவது தவறு.
அனைவருக்கும் ஆறு மணி முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். நாம் அவசியம் நன்றாகத் தூங்கியே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு வந்து விட்டோம்.
நேர மேலாண்மையைச் சரியாகக் கையாளத் தெரியாதவர்கள் தடுமாறுகிறார்கள்.
நண்பர்களுக்கு, மொபைலுக்கு, டி.வி-க்கு என நேரம் ஒதுக்குவதில் தவறு இல்லை.
உங்கள் உடலுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.
கடைசி காலத்தில்: ஆரோக்கியம் மிக மிக முக்கியம்.
Thursday, 17 October 2019
கேரள நடிகை நயன்தாராவிற்கு பெயர் வைத்தவர் ஒர் தமிழக முன்னாள் அமைச்சர் என்பதை நம்ப முடிகிறதா?
கேரள நடிகை நயன்தாராவிற்கு பெயர் வைத்தவர் ஒர் தமிழக முன்னாள் அமைச்சர் என்பதை நம்ப முடிகிறதா?
முழமையாக படிக்கவும். படித்துவிட்டு, என்னை யாரும் திட்டக் கூடாது. ஆனால், கண்டிப்பாக மனதிற்கு நிறைவாக இருக்கும்.
தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.
உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, ‘இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான். ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம். நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக் கொள்கிறேன்’ என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், ‘சிங்கிள் பெட்ரூம்’ வீட்டில் தங்கிக்கொண்டார்.
கக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன். சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன். இதைக் கேட்டதுமே, ‘அப்படியா’ என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக ‘தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும். ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்’ என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன்.
எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் பிறந்தவர்.
பிறப்பு என்பது தற்செயலாக நடக்கும் இயற்கை நிகழ்வு. இதில் பெருமை படவோ அல்லது சிறுமை கொள்ளவோ எதுவுமில்லை. சுய (சொந்த) சாதி பெருமை பேசுவதும் சக மனிதனை தன்னை விட தாழ்தவன் என்று கருதுவதும் ஒரு வகையான 😨மன நோய்😬
கக்கன் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர். ஆனாலும் சாதி அடையாளம் தன்மீது வராமல் பார்த்துக்கொண்டார். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்.
இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது."(நாம் நடிகர் கருணாஸ் போன்ற தியாகிகளை ஜெயிக்க வைப்பவர்கள்)" அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்:
எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை’.
தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன்.
1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப் போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு வந்தார். அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார்.
அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு, ‘அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? ஐயா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: ‘ஐயா! அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா’ யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அந்த வார்டைக் காட்டுங்க’ என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார்.
மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப் பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்.
உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்., எதிரில் உள்ள நாற்காலி தானும் அமர்ந்தார். ‘தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்’ இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது.
கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும்?
சொல்லுங்க. உடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்’ என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, ‘அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்’ என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, ‘என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்’ என்று வணங்கி விடை பெற்றார்.
கக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது. ‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்’ என உத்தரவிட்டார் முதல்வர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆவன செய்தார்.
அதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-இல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன்.
கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப் பத்திரிகைகளில் இருக்க... ‘குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை!
எல்லாம் சரி .நயன்தாராவிற்கு பெயர் வைத்த தமிழக அமைச்சர் யார் என்று கூறவேயில்லை என்று கேட்கிறீர்களா?
என்ன செய்வது. நல்ல விஷயங்களை கூட நயன்தாரா என்று சொன்னால் தான் முழுமையாக படிக்கிறீர்கள்.
அன்புடன் உங்களில் ஒருவன்
Excuse
Note: Dear Friends….Excuse any mistake in my writing