Tuesday, 30 April 2019

40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்... மத்திய அரசு இல‌வ‌ச‌மா குடுக்குது

40 ஆயிரம் மதிப்புள்ள  இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்... மத்திய அரசு இல‌வ‌ச‌மா குடுக்குது. தேவை இருக்கிறவ‌ங்க நேர்ல‌போய்... வ‌ருமான‌ சான்றித‌ழ், ரேஷ‌ன் கார்ட், மாற்றுதிறனாளி அடையாள‌ அட்டை குடுத்து வாங்கிக்க‌லாம்.

இட‌ம் : National institute
for empowerment of persons with multiple disabilities, muttukadu, Chennai.
http://niepmd.tn.nic.in/schemes.php

ஒரு ஷேர் பண்ணிவிடுங்க. யாராவது ஒருவருக்கு அவசியம் உபயோகப்படும் !!

Tuesday, 16 April 2019

மோடியும் துரோகிகளும்

*மோடியும் துரோகிகளும்*
     டில்லி, போலீஸ் குற்றப் பிரிவின் துணை கமிஷனர், விக்ரம், மோடியைப் பற்றி சொல்லியிருப்பதைத் தமிழில் கொடுக்கிறேன்:
     *“இன்று, நம் பிரதமர்* *நரேந்திரமோடி,* அதிக அளவுவெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன?
     காரணங்களை எல்லாம் நான் நன்றாக அலசிப் பார்க்கும் போது, *ஒவ்வோர் ஊழல் அரசியல்வாதியும்,*  * கறுப்புப்பணம்* *வைத்திருப்பவரும்,* *தீவிரவாதியும், தேச விரோதியும்,* *தேசப் பற்று கொண்டுள்ள நம்* *பிரதமரின் ஊழலற்ற* *கொள்கைகளால் பெரிதும்* *பாதிக்கப் பட்டுள்ளனர்*
என அறிகிறேன்.
     *பண மதிப்பைக் குறைத்ததிலும்*  சரி, *
*ஆதார் அட்டையை வங்கிக்* *கணக்குடன் அல்லது வருமான* *வரிப் ‘பேன்’ அட்டையுடன்* *இணைத்ததிலும் சரி,* அவர்கள் வெறுத்துப் போய் விட்டனர்.
     *ஆதார் எண்ணை* *இணைத்ததில்,* மஹாராஷ்ட்ராவில்,  ஏழைகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்ட *10 லட்சம் பேர் மாயமாக* மறைந்து விட்டனர்.
     *3 கோடிக்கும் மேலான*
* போலி ‘எல் பி ஜி’ இணைப்புகள்* முடிவுக்கு வந்து விட்டன.
     *மதரஸாக்களில் ஸ்காலர்ஷிப்* வாங்கியதாகச் சொல்லப் பட்ட *195000 போலி குழந்தைகளைக்* காணோம்.
     *15 லட்சம் போலி ரேஷன்* *அட்டைகள்* காணாமல் போய் விட்டன.
     *ஏன் இவை மாயமாய்* *மறைகின்றன?*
     *திருடர்களின் மொத்த கறுப்பு* *சந்தையும் வெளிச்சத்துக்கு வந்து* *கொண்டிருக்கிறது. எனவே,* *எல்லாத் திருடர்களும் ஒன்றாகச்* *சேர்ந்து, உச்ச நீதி மன்றத்தில் ,* *ஆதாரை இணைப்பது நம்* *அடிப்படை உரிமைக்கு எதிரானது* என்று ஒரு மனுவைப் போட்டார்கள். *இதற்கு சில முதலமைச்சர்களும்* *உடந்தை. திருடர்களுக்குத் தனி* *ரகசிய உரிமை என்று என்ன* *இருக்கிறது?*
*1.  மோடி 3 லட்சம் போலி* *நிறுவனங்களை மூடி விட்டார்;*

*2. ரேஷன் வியாபாரிகள் கோபமாக இருக்கிறார்கள்;*
*3. சொத்து (ரியல் எஸ்டேட்) டீலர்கள் எரிச்சல்* *அடைந்துள்ளார்கள்;*

*4. ஆன்லைன் அமைப்பால் இடைத் தரகர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;*

*5. மூடப்பட்ட 40000 போலி நிறுவனங்களின் (ஏன் ஜி ஓ) உரிமையாளர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;*

*6. கள்ளப் பணத்தைக் கொண்டு சொத்துக் கிரயம் செய்து வந்தவர்கள் கோபம் அடைந்துள்ளனர்;*

*7. ‘இ டெண்டர்’ முறையால், சில ஒப்பந்ததாரர்களும் கோபம் கொண்டுள்ளனர்;*

*8.  ‘கேஸ்’ நிறுவனங்கள் கோபத்தில் உள்ளன;*

*9. புதிதாக வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரப் பட்ட 1 கோடியே 20 லட்சம் பேர் கோபமடைந்துள்ளனர்;*

*10. ‘ஜி எஸ் டி’ என்னும் புதிய வரி விதிப்பின்படி,  தானியங்கி வரி செலுத்தும் முறையால், வியாபாரிகள் எரிச்சல் அடைந்துள்ளனர்;*

*11. கறுப்பை வெள்ளையாக்குவது சிரமமாகி விட்டது;*

*12. நேரத்தில் வேலைக்கு வர வேண்டி இருக்கும் சோம்பேறி அரசு ஊழியர்கள் கோபப்படுகிறார்கள்;*

*13. வேலையும் செய்யாமல், லஞ்சமும் பெற்று வந்த அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;*

*14. ‘டிஜிடல்’ பொருளாதாரத்தால் பாதிக்கப் பட்டுள்ள கள்ளப் பண டீலர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;*

*15. பயங்கரவாதிகளின் பணப் பரிமாற்றம் பெரிதும் பாதிக்கப் பட்டு விட்டது;*

*16. ரியல் எஸ்டேட் கும்பல், பணமாகப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியாததால், கணக்கில் வராதப் பணத்தை எப்படி கணக்கில் ஏற்றுவது என்று விழித்துக் கொண்டுள்ளனர்.*

*17. கடந்த 4 ஆண்டுகளாக, ஒரு ஊழல் கூட கிடையாது. இதனால் பல அரசியல்வாதிகள் மோடி மீது வெறுப்பில் இருக்கிறார்கள். மோடி முந்தைய பிரதமர்களைப் போல, ஊழல் என்றால் தன் கண்களைப் பொத்திக் கொண்டு விடுவார் என எதிர் பார்த்தனர். எனவே, மோடியால் பாதிக்கப் பட்டுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் சேர்ந்து, ‘கிச்சடிக் கூட்டணி’யை ஏற்படுத்திக் கொண்டு, மோடி, இரண்டாம் முறையாகப் பதவிக்கு வந்து விடக் கூடாது என்று எல்லாப் பிரயத்தனங்களையும் செய்து வருகின்றனர். *
    *இப்போது, 125 கோடி இந்தியர்கள் முன்னுள்ளது, இந்த ஊழல் ‘கிச்சடிக் கூட்டணியை’ ஆதரிப்பதா, இல்லை இந்த நாட்டின் உண்மையான விசுவாசியான நம் பிரதமர் மோடியை ஆதரிப்பதா, என்பதே. பந்து உங்கள் பக்கம் தான் இருக்கிறது.*
     *ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!”*
     எளியப் பாமர மக்களிடம் இந்த உண்மைகளை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். சத்தியமே வெல்லும்.👍🌷🚩

Monday, 15 April 2019

மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே ? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ?

கோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில்.

ஒரு பெண்மணி கேட்டார்.!

மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே ? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ? என்று?

அதற்குப் பதிலளித்தார் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த அனுபவுமுள்ள ஒரு அதிகாரி:

முன்னொரு காலத்தில் , அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன.
இட்டேரி என்பது கொங்கு நாட்டு சொல்.
இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை.

இந்த இட்டேரி என்பது "ஒரு தனி உலகம்." இதை நான் "Itteri eco-system" என்று அழைப்பேன்.
கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும்.

இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன.
கறையான் புற்றுகள் , எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும்.

இவற்றை உணவாக கொள்ள வண்டுகள் , நண்டுகள்
பாம்புகள், பாப்பிராண்டிகள்,
உடும்புகள், ஓணான்கள்,
கோழிகள், குருவிகள்
அலுங்குகள், ஆமைகள்
இப்படி பல உயிர்களும்
இவற்றை உணவாக கொள்ள
பாம்புகள் , பருந்துகள், நரிகள் போன்றவையும் இருந்தன.

மனிதர்களுக்கு கோவப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம், போன்ற சுவையான கனிவகைகளும்,
கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக்கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருட்களும்,
மூலிகைகளும் கிடைத்தன. (ஏன் இன்று பணமழை பொழியும் கண்வலிப்பூக்கள் காய்கள் வேலியில்தான் ஆங்காங்கு படர்ந்திருக்கும்)
இங்கே பலருக்கும் பள்ளிப் பருவத்தில் விடுமுறை நாட்களில்
ஓனானைக்கண்டால் ஓட ஓட விரட்டு
பாப்பிராண்டி கண்டால் பாவம்ன்னு விடு என்று ஓனான் வேட்டைக்குப் போன அனுபவம் கண்டிப்பாக இருக்கும்.

இந்த வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓனான்கள், தவளைகள்  பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை அழித்தொழித்தன.

பாம்புகள், ஆந்தைகள்  எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தின. பறவைகளின் எண்ணிக்கையை பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின.

பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின.

"மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின."

ஆனால்
இன்று .....???

விவசாய நிலங்கள் ப்ளாட்டுகள் ஆன போது இந்த வேலிகளும் அழிந்தன. வண்டித்தடங்கள் தார் சாலைகள் ஆன போது இட்டேரிகள் மறைந்தன.
கொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருக்கும் விவசாய நிலங்களுக்கு உயிர் வேலியை அழித்து காக்கா குருவி கூட கூடு கட்டாத கம்பிவேலிகள் அமைக்கப்பட்டன.

இதனால் எண்ணற்ற ஜீவராசிகள் வாழ இடமின்றி போனது.

அதில் முக்கியமானது குள்ளநரிகள்.
இவை மயில்களுக்கு முக்கியமான எதிரிகள். இவை மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் தந்திரமாக கவர்ந்து உணவாக்கிக்கொள்ளும்.

இவற்றை நாம் எங்கும் காண முடியவில்லை. காடுகளில் மட்டும் ஓரிரு ஜோடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகின்றன.

விளைவு ??
மயில்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி விட்டன.

" நாம் விதைத்தது நாம் அறுவடை செய்கிறோம்."

கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொண்டால் புண்ணாகத்தான் செய்யும்.

மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மீண்டும் உயிர்வேலி முறைக்கு மாறுங்கள்.

இல்லையேல் இழப்புகளை அனுபவிக்கத்தான் வேண்டும்.

தகவல் : சிவசெல்வி.

Sunday, 14 April 2019

நாம் கொடுக்கும் பணத்தைதானே திருப்பி தருகிறார்கள் என்று கதறும் நவீனகால முட்டாள்களுக்கான பதிவு இது

*சிலிண்டர் 1000 ரூபாய்* என்றும்
நாம் கொடுக்கும் பணத்தைதானே
திருப்பி தருகிறார்கள் என்று கதறும்
நவீனகால முட்டாள்களுக்கான
பதிவு இது...
முழுமையாக படித்து பகிர்க...

ஒவ்வொரு காஸ் இணைப்புக்கும் *வருடம்  12 சிலிண்டர்கள்* ஒதுக்கீடு செய்யப்படுகிறது...

இன்றைய காலசூழலில்
கூட்டுக் குடும்பங்கள் குறைவு என்பது அனைவருக்கும் தெரிந்ததே...

ஆகையினால் *வருடம் அதிகபட்சம் 5 அல்லது 6 சிலிண்டர்கள்* மட்டுமே உபயோகிக்க முடியும்...
*இதற்கு முன் நாம் எடுக்கும் சிலிண்டரை பணம் கொடுத்து பெற்றுகொள்வோம்... அந்த சிலிண்டருக்கான மானிய பணத்தை நீங்கள் இணைப்பு வைத்துள்ள காஸ் ஏஜெண்சிக்கு மத்திய அரசு பணம் கொடுக்கும்...*
ஆனால் அனைத்து ஏஜென்சிகளும் வருட இறுதியில் _*உங்களுக்கு தெரியாமல் உங்கள் பெயரை பயன்படுத்தி பதிவுசெய்து அதில் வரும் சிலிண்டர்களை கடைகளுக்கும் வெளிசந்தைகளிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யும்*_. மேலும் அந்த சிலிண்டர்களுக்கு மானியமாக மத்தியரசிடமும் பணம் பெற்றுகொள்ளும்...

உதாரணமாக: நீங்கள் 5 சிலிண்டர்கள் மட்டுமே பயன்படுத்தியிருப்பீர்கள்
மீதமுள்ள 7 சிலிண்டர்களை உங்கள் பெயரில் வெளிமார்க்கெட் விலைக்கு விற்பனை+மானியம் ஒருசிலிண்டருக்கு 500 ரூபாய்க்கு ஊழல் நடந்தது....

அப்படியென்றால்
7×500=3500 வருடத்திற்கு
உங்கள் ஒருகுடும்பத்தினால் அரசுக்கு இழப்பு...
அப்படியென்றால் இந்தியா முழுவதுமாக எவ்வளவு இழப்பு ஏற்படும் என்று உங்கள்
யூகத்திற்கே விட்டுவிடுகிறேன் ....

மேலும் ஒரே நபரின் பெயரில் பல இணைப்புகள் இருந்தது..
அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் மட்டும் ஆண்டுக்கு 1லட்சம்கோடிகள்
அப்படியென்றால் கடந்த
4 வருடங்களில்
4லட்சம் கோடி ரூபாய்
அரசு பணம் காப்பாற்றப்பட்டுள்ளது...

*இப்போது உள்ளபடி உங்கள் அனுமதியின்றி யாரும் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாது...*
_*அப்படியே அவர்கள் செய்தாலும் மானியம் உங்கள் வங்கி கணக்கிற்கே வரும்...*_
ஆதாரை இணைத்ததின் மூலமாக ஒரு நபருக்கு ஒரு இணைப்பு மட்டுமே சாத்தியம்...

*வசதிபடைத்தவர்கள் மானியத்தை விட்டுகொடுத்ததின் பேரில் நாடுமுழுவதும் 6கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச இணைப்பு கொடுக்கபட்டுள்ளது...*

இப்போது கூறுங்கள்...
இதில் பாதிக்கபட்டது
மக்களா? அரசா? அல்லது
காலகாலமாக ஊழல் செய்து வந்த கேஸ் ஏஜென்சி நிர்வாகமா?
அவர்களிடம் வாங்கி நக்கிவந்த அரசியல்வாதிகளா?

இந்த விளக்கத்தை படித்தபின் முட்டாளுக்கு கூட புரியும் ...

பாதிக்கப்பட்டது கேஸ் ஏஜென்சியும்
நக்கிபிழைத்த அரசியல்வாதிகளும் என்று...

அரசு மக்கள் வரிப்பணத்தை வீணாக்காமல் லாபமடைந்து அதன் மூலம் உண்மையான பயனாளிகளுக்கு அந்த பணத்தின் மூலமாக இலவச சேவை செய்கிறது...

அதனால்தான் கதறுகிறார்கள்
அனைவரும்

_*மோடி ஒழிக*_ என்று

நாம் ஆறறிவு உள்ள
மனிதர்கள்...

சற்றே சிந்தியுங்கள்...
உண்மை வெளிப்படும்...

_*ஆதாரமாக: எங்கள் வீட்டில் கடைசியாக வாங்கிய சிலிண்டரின் விலை ரூ.920 எனது மனைவியின் வங்கி கணக்கில் வந்த மானியபணம் ரூ.477.47பைசா.*_
அப்படியானால்
920 - 477.47= 442.53.
*சிலிண்டர் விலை = ரூ.442.53 பைசா* மட்டுமே...

_*AgainModiji2019*_

Friday, 12 April 2019

அஷ்டமி அன்றும், *நவமி நவநாழிகை* வரையிலும் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது.. ஏன்?

*ராம நவமி அறிவியல் ரீதியான காரணம்*

ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது.

இதுதான் காரணமா ?

இல்லை !!!!

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.

அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வருவதை ஒரு மாதம் என்கிறோம்.

அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.

அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம்.

ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.

தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.

சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது.

அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது.

அந்த Vibration பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.

பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுத்முடிவதில்லை அல்லவா ?

அதைப்போன்று. அதன்காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது.

அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.

நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும்.

அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும்.

எனவேதான் அஷ்டமி அன்றும், *நவமி நவநாழிகை* வரையிலும்  எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்ற பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தனர்..😊💐

Wednesday, 10 April 2019

வாழ்வின் எல்லா செயல்களிலும் நடுவில் நில்லுங்கள், அப்போது தான் தியானம் கைகூடும்

ஞானக்கதை:🧘‍♂🧘‍♂

சுரோணா என்ற அழகான இளவரசன் மிகவும் ஆடம்பரமாக 😇வாழ்பவன். சிறந்த சித்தார் கலைஞன்.🎸
பகலெல்லாம் உறக்கம். 😴இரவெல்லாம் குடியும் 🕺🥂கும்மாளம்தான.

புத்தரை 🧘‍♂கண்டு அவர் மொழிகளை கேட்டதால், தீட்சை வழங்குமாறு வேண்டிக்கொண்டான். யாருக்கும் தயங்காமல் தீட்சை தருபவர், இப்போது சற்று தயங்கினார் 🤔சுரோணா,, உன்னை பற்றி எல்லாம் தெரியும். நன்கு யோசித்து 🤔சொல் என்றார். ஆனால் இவன்,, நான் முடிவு செய்து விட்டேன் இப்போதே தாருங்கள் என்றான்.

நீ ஆடம்பரமாக வாழ்ந்தவன். 💃மாளிகையை விட்டு, பூங்காவை விட்டு வெளியே வராதவன். நாளுக்கு இருவேலை சாப்பாடு கூட கிடைக்காது. தீட்சை பெற்று விட்டால் உலகவாழ்கையில் திரும்புவது அவமானமானது. மரியாதை மரியாதை குறைவானது.

யோசித்து சொல் என்றார் நான் பலமுறை யோசித்து விட்டேன் என்றான்.

புத்தர் தீட்சை கொடுத்தார்.

இரண்டாவது நாளே விவகாரம் ஆரம்பித்து விட்டது.

புத்தருக்கு மட்டும் தெரியும்.
சன்யாசிகளிடம் மூன்று ஆடைகள் மட்டுமே இருப்பது. ஆனால் சுரோணா நிர்வாணமாக இருக்கஆரம்பித்தான். சன்யாசிகள் சாலையில் நடந்தால் இவன் சாலையோர கல்லிலும முல்லிலும் நடந்தான். மற்றவர்கள் நிழலில் ஓய்வு எடுத்தால் வெய்யிலில் நின்றான் உச்சிவேளையிலும் கூட,,,,

ஓரு எல்லையிலிருந்து மறு எல்லைக்கு போய்விட்டான். ஆறுமாத காலத்தில் கருத்துபோய்அடையாளம் தெரியாமல் மாறிப்போனான்.

ஓரிரவில் புத்தார் அவனை எழுப்பினார். நீ சித்தார் கலைஞன் தானே என்று கேட்டார். அதற்கு ஆம் என்றான்.

புத்தார் சித்தாரின நரம்புகள் இருக்கமாக இருந்தால் அதில் இசை பிறக்குமா?என்றார்,, பிறக்காது கம்பிகள் அறுந்து போகும் என்றான்.அவன், அவை மிகவும் தளர்வாக இருந்தால் இசை எழுமா?

இசைபிறக்காது .விரைப்பும் தளர்வு இல்லாமல் நடுநிலையில் இருந்தால் மட்டுமே வாசிக்க முடியும் என்றான்.

நான் சொல்லவந்தது அதுதான் வாழ்க்கை 💃ஓரு இசைகருவி மிகவும் இறுக்கமாக மிகவும் தளர்வாக இருந்தால் இசை பிறக்காது,,,,,,நீ ஓரு எல்லையிலிருந்து மற்றொர் எல்லைக்கு பாயாதே,, ஆனந்தத்திலிருந்து சுய சித்திரவதைக்கு எட்டி குதிக்காதே நடுவில் நடுநிலையாக நில் என்றார் புத்தார்.

உங்கள் வாழ்வின் எல்லா செயல்களிலும் நடுவில் நில்லுங்கள், அப்போது தான் தியானம் கைகூடும். 🧘‍♂🧘‍♂💐விடுதலை மார்க்கம் புலப்படும்.😇💐🙏

*ஆஸ்துமா என்றால் என்ன?*


*ஆஸ்துமா என்றால் என்ன?*
நுரையீரல் பாதிப்பினால் ஏற்படும் நோய்
பனிக்காலங்களில் இந்நோய் தொந்தரவிற்கு பஞ்சம் இல்லை...
*காரணம்*
தூசி புகை நிறைந்த இடங்களில் வசிப்பது அல்லது வேலைசெய்வது
இல்லை என்றால் இயற்கை காற்றே இல்லாமல் வாழ்வது
உடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் ஆகிய காரணங்களினால் இந்நோய் உண்டாகிறது
*தீர்வு*
காற்றோட்டமான இடங்களில் வாழ்வது
கப்பளி துணிகளை தவிர்ப்பது
பால் உணவுகளை தவிர்த்தல்
கீரை வகைகளை தவிர்ப்பது
புளிப்பான உணவை தவிர்ப்பது
குளிர்பானங்பளை தவிர்த்தல்
சீரகத்தண்ணீர்;
எளிமையான உணவு;
வெற்றிலை நீராவி பிடிப்பது;
மூச்சு பயிற்சி ;
ஆகியவற்றை கடைபிடிக்க நோய் குணமாகும்
சளி குப்பையை உள்ளே  அடக்காமல் வெளியேற்றுங்கள்
சிறப்பாக வாழுங்கள்.

#சர்க்கரை குறைபாட்டை சீர் செய்யும் மற்றும் #உடல்பருமன், பருமன் , #தொண்டை_அழற்சி யை குணப்படுத்தும் அற்புத ஜூஸ்


#சர்க்கரை குறைபாட்டை சீர் செய்யும் மற்றும் #உடல்பருமன்,
பருமன் , #தொண்டை_அழற்சி யை குணப்படுத்தும் அற்புத ஜூஸ்

பாகற்காய்  சாறு
தேவையான பொருட்கள
பாகற்காய் அரிந்தது.   -  100 கிராம்
மாங்காய் துருவியது   -    10 கிராம்
இஞ்சிச் சாறு.           -    1 ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு        -    1 ஸ்பூன்
உப்பு.           -  தேவையான அளவு
தண்ணீர்    -  தேவையான அளவு
செய்முறை.....
முதலில் அரிந்து வைத்துள்ள பாகற்காயில் எலுமிச்சம் பழச் சாற்றை ஊற்றி சிறிது நேரம் ஊறவைக்கவும்.
பின்பு ஊறவைத்த  பாகற்காயுடன் அரிந்து வைத்துள் மாங்காய்த் துருவல் மற்றும் இஞ்சிச் சாற்றை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து காலை வேளையில் குடித்து வரவும்.
பயன்கள்.....
இந்த ஜூஸை வாரம் மூன்று நாட்கள் குடித்து வந்தால் பல வருடங்களாக சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு சீர்செய்யும் அருமையான ஜூஸாக இருக்கும்.மேலும் இதனால் உடல் பருமன் குறையும் , தொண்டையில் உண்டாகும் அழற்சியையும் நீக்கும் அற்புதமான சாறு.

Saturday, 6 April 2019

மூளை_முதல்_மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்

#மூளை_முதல்_மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்

👽#மூளை

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

👀#கண்கள்

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

😁#பற்கள்

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

🍁#நரம்புகள்

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

🌹#ரத்தம்

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.ஷ...ரு🌴🌷

💃#சருமம்

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

💓#நுரையீரல்  & இதயம்

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால்  நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

#முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

#ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

🍒#வயிறு

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

🌴🌷மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.

🌴🌷வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.

#சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்

🍅#கல்லீரல் & #மண்ணீரல்

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

🍓#மலக்குடல்

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

👣#பாதம்
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.ஷ...ரு🌴🌷

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

#உணவே_மருந்து_மருந்தே_உணவு

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing