Thursday, 29 August 2019

பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்

வணக்கம்,
*பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்*

*ஜீன் 1ம் தேதியன்று புதிய பாலிசிஆண்டு தொடங்குவதால் இதுவரை இந்த திட்டத்தில் இணையாதவர்கள் அவரவர் வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்து  காப்பீட்டுதிட்டத்தில் இணையவும்.*

👈🇮🇳🚀🌍
🌺🌻🌹🌼

ஏற்கனவே இத்திட்டத்தில் இணைந்தவர்கள் இந்த மேமாத இறுதியில் அதற்கான கட்டணம் உங்கள் வங்கிகணக்கில் எடுக்கப்படஉள்ளதால் தேவையான பணஇருப்பு உள்ளதாஎன பார்த்துக்கொள்ளவும்.
________________________

*பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்...ஒரு விளக்கம்.*

படித்தால் மட்டும் போதாது.மக்களுக்கு பகிரவும் செய்யணும்.

இந்த காப்பீட்டு திட்டம் இரு விதமாக செயல் படுத்தப் படுகிறது.

*ஒன்று விபத்து காப்பீடு மற்றொன்று ஆயுள் காப்பீடு.*

இரண்டிற்க்கும் தனித்தனியாக இரண்டு லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை உண்டு. மொத்தம் நான்கு லட்ச ரூபாய்.ஒருவர் இரண்டையும் சேர்த்து எடுக்கலாம் அல்லது எது வேண்டுமோ அதை மட்டும் எடுக்கலாம்.

வங்கி வாடிக்கையாளர்கள் அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி மூலம் அல்லது அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு மூலம் மட்டுமே எடுக்க முடியும்.

விபத்து காப்பீட்டிற்க்காக ஆண்டுக்கு 12 ரூபாயும் ஆயுள் காப்பீட்டிற்க்காக ஆண்டுக்கு 330 ரூபாயும் ஒருவரிடமிருந்து கட்டணமாக வசூலிக்கப்படும்.இது ஒரு குழுகாப்பீடு என்பதால் யாருக்கும் தனியாக பாலிசி சான்றிதழ் தரப்பட மாட்டாது. மேலும் இது செயல்படுத்தபடும் காலம் ஜீன் 1 ம் தேதியிலிருந்து மே31 ம் தேதி வரையாகும். ஆனால் ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம்.

ஒருமுறை ஒருவர் தேவையான படிவத்தை நிரப்பி கொடுத்து இத்திட்டத்தில் சேர்ந்து்விட்டால் ஒவ்வொரு ஆண்டும் அவரது கணக்கிலிருந்து காப்பீட்டு கட்டணம் தானாகவே கழித்துக் கொள்ளப்படும். ஒருவர் ஒரு வங்கி மூலம் மட்டுமே இதில் சேர வேண்டும். இறப்பு உரிமை (Death claim)ஒரு வங்கியில் மட்டுமே கோர முடியும்.
ஒருவர் திட்ட ஆரம்பத்தில் நிரப்பி தரும் படிவத்தில் பயனாளியின்
(Nominee) பெயரை குறிப்பிட வேண்டும்.

*விபத்து காப்பீட்டில் 18 வயது முதல் 70 வயது வரையிலும் ஆயுள் காப்பீட்டில் 18 வயது முதல் 50 வயதுவரை ஆண் பெண் இருபாலாரும் சேரலாம்.ஆயுள் காப்பீட்டை 55 வயது வரை தொடரலாம்.இத்திட்டத்தில் முதிர்வு தொகை என்று எதுவும் வழங்கப்பட மாட்டாது.*

*விபத்தினால் இறப்பு என்பது சாலை விபத்து மட்டுமல்ல பாம்பு கடித்து இறந்தாலும் விபத்துதான் படியில் தவறி விழுந்து இறந்தாலும் விபத்துதான்.விபத்தினால் ஏற்படும் ஊனத்திற்க்கும் இழப்பீடு உண்டு.*

*ஆயுள் காப்பீடு என்பது ஒருவர் எப்படி இறந்து போனாலும் காப்பீட்டு பணம் உண்டு.பாலிசியில் சேர்ந்த முதலாமாண்டில் மட்டும் தற்கொலை ஏற்கப்படாது.*

*மொத்தம் ஆண்டிற்க்கு 342 ரூபாய்க்கு நான்கு லட்ச ருபாய் காப்பீடு இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கிறது.*

ஒருவர் எந்த வங்கியில் இத்திட்டத்தில் சேர்ந்திருக்கிறார் என்று குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லி வைக்க வேண்டும். ஏனென்றால் ஒருவரது வங்கி கணக்கிலிருந்து கட்டணம் கழிக்கப் படுவது மட்டுமே ஆதாரம்.

நாம் அனைவரும் இத்திட்டத்தில் சேருவதோடு இல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் சேர தூண்ட வேண்டும்.

நம்மால் முடிந்த ஏழைகளுக்கு நாமே வங்கி கணக்கு தொடங்கி தந்து கட்டணத்தையும் செலுத்தி இத்திட்டத்தில் சேர்க்கலாம். பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா மூலம் இருப்பு வைக்க வேண்டிய அவசியமில்லாத (0 Balance) வங்கி கணக்கு துவக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் ஏழைகளுக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதமாகும்.

எளியோருக்கான உருப்படியான திட்த்தை மக்களுக்கு விளக்குவதும்,சேர்ப்பதும் தேசப்பணி என்பதை நாம் உணர்வோம்.
நன்றி.

*ஆளுக்கு ஒரு ஷேர்செய்து மக்களுக்கு தகவல் சென்றடைய உதவுவோம்.*

👈🇮🇳🚀🌍
*🌺🌻🌹🌼
Next visit go to bank fill up forms and submit

Wednesday, 28 August 2019

உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை பின்வரும் நபர்களுக்கு மாற்றுதல்

❇ *பயனுள்ள தகவல் !*❇

ரயில்வே வாரியத்தின் மிக நல்ல முடிவு .. ---------------- + - + - + --------------

உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை பின்வரும் நபர்களுக்கு மாற்றுதல்.

1. உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை உங்கள் இரத்த உறவுகளுக்கு மாற்ற முடியும்.

2. ஒரு நபர் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை வைத்திருந்தால், பயணிக்க முடியாவிட்டால், டிக்கெட்டை தந்தை, தாய், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவர் அல்லது மனைவி உள்ளிட்ட அவரது / அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்ற முடியும்.

3. டிக்கெட் மாற்றுவதற்கு, ஐடி ஆதாரத்துடன் ரயில் புறப்படுவதற்கு திட்டமிடப்பட்ட 24 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு விண்ணப்பத்தை தலைமை இடஒதுக்கீடு மேற்பார்வையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

4. அரசு அதிகாரிகள் மற்ற அரசு அதிகாரிகளுக்கு மாற்றலாம்.

5. மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு டிக்கெட்டை மாற்றலாம்.

இதை பகிர்ந்தால் யாரேனும் ஒருவருக்கு உதவக்கூடும்.

விவரங்களுக்கு அணுக / பார்வையிட
: http: /www.indianrail.gov.in/change_Name.html

#மீனவர்களுக்கான பயிற்சி வகுப்புகள்

***************************************
* #மீனவர்களுக்கான பயிற்சி வகுப்புகள்*
****************************************
தங்கச்சிமடம் ம.சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மீனவர்களுக்கான  மதிப்பு கூட்டிய மீன் பொருட்கள் தயாரிப்பு மற்றும் அலங்கார மீன் வளர்ப்பு என மீன்பிடி தொழில் சார்ந்த சிறப்பு படிப்புகளை ம.சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பூம்புகார் அனைவருக்கும் மீன் மையத்தின் மூலமாக செயல்படுத்த இருக்கிறோம்.
மேலும் படிப்புகளுக்கான கோட்பாடு (Theory) பயிற்சிகள் வீடியோ காண்பிரன்ஸ் முறையிலும் செயல்முறை பயிற்சிகள் (Practical) நேரடியாக பூம்புகாரில் உள்ள அனைவருக்கும் மீன் மையத்தின் ஆய்வு கூடத்திலோ அல்லது அங்கு இருக்கிற வல்லுனர்களை கொண்டு தங்கச்சிமடம் கிராம வள மையத்திலோ அளிக்க பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
முதல் பயிற்சியாக சுகாதாரமான முறையில் உலர்மீன் (கருவாடு) தயாரிப்பது குறித்த பயிற்சி செப்டம்பர் 3 முதல் நடைபெற இருக்கிறது. எனவே ஆர்வமுள்ள மீனவர்கள், மீனவ மகளிர் சுய உதவி குழுவினர் உடன் தொடர்பு கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு 04573-251799, 9944407047 8012421007

வாழும் ஒவ்வொரு நொடியையும் வீண் ஆக்காதீர்கள் நண்பர்களே

ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார்...

மகனே! இது உனது பூட்டனாரின் கைக் கடிகாரம்.
200 வருடங்கள் பழைமை வாய்ந்தது.

நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடை வீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் போய் நான் இதனை விற்கப் போகிறேன். எவ்வளவு   விலை மதிப்பீர்கள்  என்று கேட்டுப் பார் என்றார்.

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம்
இது பழையது என்பதால் 5 டாலர்கள் மாத்திரமே தர முடியும் என்றனர்.

தந்தை பழைய கால பொருட்கள் விற்கும் Antique கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார்.

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், இதற்கு 5000  டாலர் தர முடியும் என்றனர்.

தந்தை இதனை நூதன சாலைக்கு Museum கொண்டு சென்று விலையை கேட்டுப் பார் என்றார்.

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்கு உட்படுத்த ஒருவரை வரவழைத்து பரிசோதித்தும் விட்டு என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர் என்றனர்.

தந்தை மகனைப் பார்த்து மகனே... சரியான இடமே உனது அந்தஸ்தை எப்போதும் சரியாக மதிப்பிடும்.

எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்தி விட்டு உன்னை  மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தமே இல்லை. இதை நீயே வைத்துக் கொள்.
விற்பதும் விற்காததும் உன் இஷ்டம் என்று கொடுத்தார்.

உனது அந்தஸ்தை அறிந்தவனே உன்னை கண்ணியப் படுத்துவான்.

உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே.
இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக் கொள் மகனே என்றார் வயதான அப்பா.

தெரிந்த கதைதான்.
இந்த கதையில் பாருங்க.
அவன் விலை கேட்கும் ஒவ்வொரு கட்டமும் அவன் மனதுக்கு அந்தந்த நேரம் சரியாகவே மனதில் பட்டு இருக்கும்.
ஆனால் நிஜம் வேறுதானே!.

நம் வாழ்க்கையும் அப்படிதான்.
இன்று நமக்கு தெளிவு அவசியம்.
நீங்கள் இருக்கும் இடம்,போகும் பாதை அனைத்தும் சரியா என உங்களை நீங்களே மீண்டும் மீண்டும் பரிசோதியுங்கள்.
ஏமாந்த காலம் நமக்கு போதும்.
தீர்க்கமான முடிவு எப்போதும் முக்கியம்.
வாழும் ஒவ்வொரு நொடியையும் வீண் ஆக்காதீர்கள் நண்பர்களே.

உங்களின் நிஜ மதிப்பு உங்களுக்கு தெரியணும்.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

இயன்றால் பகிருங்கள்.

Tuesday, 27 August 2019

ஊறவைத்த #பாதாம்பருப்பின் ஐந்து ஆரோக்கிய நன்மைகள்

✅👌👍🇪🇬
ஊறவைத்த #பாதாம்பருப்பின் ஐந்து ஆரோக்கிய நன்மைகள்....
ஊறவைத்த பாதாம் நிச்சயமாக வெற்றி! அவை எப்போதும் மூல பாதாமை விட சிறந்த வழி. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து, நமது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவது வரை, ஊறவைத்த பாதாம் நன்மைகள் நிறைந்தது. தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் காலையில் 5-6 ஊறவைத்த பாதாம் பருப்புகளை கொடுக்க விரும்புகிறார்கள். ஊறவைத்த பாதாம் பருப்பின் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
ஒரு நாளைக்கு 5-6 ஊறவைத்த பாதாமை உட்கொள்வது மூளை டானிக்கின் நோக்கத்தை நிறைவேற்றுவதன் மூலம் நமது மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
நினைவாற்றலைக் கூர்மைப்படுத்துவதில் பாதாம் மிகவும் உதவியாக இருக்கும், மேலும் வளர்ந்து வரும் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தையும் அதிகரிக்கும்.
குறைந்த கொழுப்பு அளவு ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுவதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். ஊறவைத்த பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ உள்ளது, இது ஆபத்தான இதய நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இதய ஆரோக்கியம் ஊறவைத்த பாதாம் அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகளைக் கொண்டுள்ளது, இது பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு மற்றும் மாரடைப்பைத் தடுக்க உதவுகிறது. ஊறவைத்த பாதாம் புரதம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, அவை ஆரோக்கியமான இருதய அமைப்புக்கு அவசியமானவை.
செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது முழு செரிமான அமைப்பையும் எளிதாக்குவதன் மூலம், ஊறவைத்த பாதாம் உங்கள் உணவு செரிமானத்தை விரைவாகவும் மென்மையாகவும் மாற்றும். ஊறவைத்த பாதாம் உணவில் உள்ள கொழுப்பில் செயல்பட்டு செரிமானத்தை எளிதாக்கும் லிப்பிட் பிரேக்கிங் என்சைம் ‘லிபேஸ்’ வெளியிடுகிறது. இரத்த அழுத்த நிலைகளை மேம்படுத்துகிறது
ஊறவைத்த பாதாம் மூலம் கடுமையான உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்த முடியும். ஊறவைத்த பாதாமின் குறைந்த சோடியம் மற்றும் அதிக பொட்டாசியம் உள்ளடக்கம் உடலில் சரியான அளவிலான இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும், இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் குணமாகும்.

Monday, 5 August 2019

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்? தெரிந்து கொள்ளலாமா!


கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்? தெரிந்து கொள்ளலாமா!
Curry Leaves :
▪ நாம் சமைக்கின்ற உணவினை தாளிக்கும் பொழுது, குழம்பு ,பொரியல், வறுவல் எதைத் தாளிக்க முயற்சி செய்தாலும் எண்ணெயுடன் கடுகு, கறிவேப்பிலை போட்டு ஏன் தாளிக்கிறோம் என்பது தெரிந்துகொள்ள வேண்டும் விஷயம்தான்.
▪ கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும்.
▪ கறிவேப்பிலையை எண்ணையுடன் சேர்த்து வறுக்கும் போது மிகவும் லேசாக வதக்க வேண்டும். இல்லை என்றால் அதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.
▪ கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர்.
▪ கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவர உடல் எடையை அதிகரிக்கலாம்.
▪ இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing