Saturday 18 January 2020

முதல்ல நம்மை நாமே சரி பண்ணிட்டு,அப்புறம் அரசு திட்டங்களில் குறை இருப்பின் அதை சுட்டிக்காட்டலாம்

fastag வந்து ரெண்டு வருஷமாச்சு!
அரக்கோணம் விமானபடை தளத்திலிருந்து, ஹெலிக்காப்டர் மூலம் மத்திய அமைசர் பயணித்த போது ஶ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி வாகன நெரிச்சலை பார்த்து இந்த காலவிரயத்தை குறைக்க எடுத்த உடனடி திட்டம் தான் இந்த திட்டம். இது ஏற்கனவே பல நாடுகளில் இருப்பது தான்.

ஆனால் அதை கண்டுகாமல், ரெண்டு நிமிஷத்தில் கடக்க வேண்டிய இடத்தில் பத்து நிமிஷம் நின்னு  டைம், ஃபியுல் வேஸ்ட் பண்ணுவீங்க.

fastag இருந்தால் 10%  கட்டண சலுகை கூட குடுத்தாங்க.
அப்பவும் அசரவில்லை நாம்.
போதாததற்கு fastag wayல் ஏறி விதிமிறல் பண்ணுனோம். ஒழுங்காக fastag வெச்சிருந்தவங்க கூட இதனால் என்ன பயன்னு சலிப்படைஞ்சு ரீசார்ஜ் பண்ணாமல் விட ஆரம்பிச்சாங்க.
விளைவு பெரும்பாலான சுங்கச்சாவடிகளில்  fastag wayக்கள் மூடப்பட்டு
கடைசியில் அந்த திட்டத்தின் நோக்கமே கேள்விக்குறியானது.

அன்பாக சொன்னால் கேட்க மாட்டாங்க, கண்டிப்பாக சொன்னால் கேட்பார்கள்ன்னு நினைச்சு , fastag கட்டாயம் என அரசு தேதி அறிவித்தது.
ஆனால் அப்போதும் தூங்கிட்டு தான் இருந்தோம்
மூன்று முறை கால நீடிப்பு குடுத்தாங்க.
அப்போதும் "நீயென்ன சொல்லுறது நானென்ன கேட்பது"ங்குற தெனாவெட்டு நமக்கு!

கடைசியாக வங்கி கட்டணம்(புரசசிங் ஃபீஸ்) செலுத்தாமல் வங்கிகளில் ஃபாஸ்ட் டேக் பெற்றுக்கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தினார்கள்.
பொங்கல் இலவச கரும்புக்கு ரேஷன் கடைக்கு காரில் போனவன் , இதை கண்டுக்கவே இல்ல.

முக்கியமாக இந்த திட்டம் மூலம் சாலை போட்டு வசூல் செய்யும் நிறுவனங்கள் பொய் கணக்கு இனி தாக்கல் செய்வது இயலாத விசயம்.ப்ளாக் மார்கெட்டில் உலாவும் கரன்சி நோட்டுகளில் இந்த சுங்கச்சாவடி கரன்சிக்கு முக்கிய பங்கு உண்டு. வார இறுதிநாட்கள், பண்டிகை காலங்களில் டேக்கனே குடுக்காது பல சுங்கசாவடிகளில் பணம் புடுங்குவது வழக்கமான நடைமுறை. கரன்சியே இல்லாத ஃபாஸ்ட் டேக் சிஸ்டம் இதற்கு தீர்வு காண்பதோடு, சுங்க கட்டண வசூலில் ஒரு அக்கவுண்டபிலிட்டியை கொண்டுவரும்.

நீண்ட தூரம் பயணிக்கும் கனரக வாகன ஓட்டுநர்கள் கையில் இதற்காக கையில் பணத்தினை வைத்து அவஸ்தைப்பட தேவையில்லை. 
அவசரமாக வெளியூர் கிளம்பும் போது கையில் பணம் குறைவாக இருந்தால் கிரடிட் கார்டு மூலம் ஃபாஸ்ட் டேக் அக்கவுண்டில் செலுத்துவது இதன் இன்னொரு அனுகூலம்.
ஒருவேளை உங்களது கணக்கில் பணம் இருந்து ஸ்கேனர் வேலை செய்யவில்லை எனில் உங்களது வாகனம் தடுத்து நிறுத்தப்படாது என அரசு அறிவித்து விட்டது.

வண்டி வாங்கும் போது பத்து பிராண்டுல, பதினைஞ்சு ஷோரும் ஏறி இறங்குவீங்க.
ஆனால் ஹெல்மட், இன்சூரன்ஸ், ஃபாஸ்ட் டேக்ன்னா மட்டும் கசக்கும். எல்லாத்துக்கும் சிங்கப்பூரை இழுப்பவர்கள் இதிலும் ஒப்பிடலாமே?
காரணம் சிங்கப்பூரில் இதுவரை இருந்த இதே திட்டம் சேட்லைட் மயமாக்கப்பட்டு, வாகனம் சாலையில் பயணிக்கும் நேரம், தூரம் கணக்கிடப்பட்டு , அதற்கான தொகை அப்போதே உங்கள் சாலைவரி கணக்கிலிருத்து பிடித்தம் செய்யப்படும் திட்டம் இந்தாண்டு அமுலுக்கு வருகிறது.
உங்கள் கணக்கில் தொகையை செலுத்தாது பயணித்தால் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை!

முதல்ல நம்மை நாமே சரி பண்ணிட்டு,
அப்புறம் அரசு திட்டங்களில் குறை இருப்பின் அதை சுட்டிக்காட்டலாம்.

இனி கமென்டில் என்னை கழுவி ஊத்துறவங்க ஊத்தலாம்!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing