Monday, 6 April 2020

இங்க இருக்கும் சிலருக்கு இதன் அருமை புரியாது ...எம் மண் ...பெருமை கொள்வோம் ...#இந்தியா #பாரதம் 🇮🇳❤️#Corona#Lockdown

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நண்பர் ஒருவர் தெரிவிப்பது ...!!

18 வருடங்களாக இங்கே இருக்கிறேன்,,,! என்றுமே இங்கே பாலாறும், தேனாறும் ஓடுவதாக சொன்னதில்லை...!!

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சொர்க்கபுரியாக மாயத்தோற்றம் அளிக்கலாம்....!!! இக்கறைக்கு அக்கறை பச்சை என்ற நிலையை உணர்த்த இன்றுதான் முடிந்தது என்கிறார்....!!

மாஸ்க் / கையுறை எல்லாம் சிகிச்சை கொடுப்பவர்களுக்கு வேண்டும் என்பதால் பொதுமக்களுக்கு சப்ளை இல்லையாம் ...!!!
பயங்கர தட்டுப்பாடாம் ...!!!

எதுவும் அணியாமல் தான் அங்காடிகளுக்கு சென்று பொருள்கள்  வாங்குகிறார்களாம் ...!!

நியூயார்கில் வெண்டிலேட்டர் தட்டுப்பாட்டால் , ஒரு வென்டிலேட்டரை இரு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் அவல நிலையாம் ...!!!

உலகையே  அழிக்க கூடிய பல கோடி ஆயுதங்களை தயாரித்த நாட்டிற்கு ...!!!
தன் மக்களை பேரிடர் ஏற்பட்டால் காக்க கூடிய இவைகளை தயாரிக்க முடியவில்லை  ...!!!

இங்கே இருந்து கொண்டே , சீனாவை பார் , அமெரிக்காவை பார் , கியூபாவை பார்னு ஒரு முட்டாள் கூட்டம் ...!!!

உலகின் பல்வேறு நாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்டு கொண்டு வந்த தாய் உள்ளம் ..

பிரச்சனை என்றவுடன் ராணுவம் கொண்டு 1000 படுக்கைகள் மேல்  கொண்ட மருத்துவவசதி இரண்டே நாளில்.

பல ஆயிரம்  பேர் சிகிச்சை பெரும் அளவிற்கு  மாற்றப்பட்ட ரயில் கோச்சுகள் ....

போலீஸ் பணியில் உள்ளவர்களை கொண்டு விடிய விடிய மாஸ்க் தயாரிப்பு ...

மருத்துவர்கள் தங்கவதற்கு  5 ஸ்டார் ஹோட்டல்களை ஏற்பாடு செய்யும் அரசு ...

3000 பஸ்கள் கொண்டு மக்களை இடம் பெயர்க்கும் அரசு ...

மைக்ரோ லெவலில் வீடுகளை மருத்துவ பணியாளர்கள் கொண்டு  செக்  செய்து ,
நோய் தொற்றை தடுக்கும் அரசு ...

போர் கால அடிப்படையில்  எல்லா அரசு இயந்திரங்களும்...

நடுவில் சில #கோமாளிகளின்  கேள்விக்கு பதில் ...

24மணி நேரமும் இதனை தடுக்க பல வல்லுனர்களுடன் பேசி கொண்டு இருக்கும் பிரதமர் ...

அவர் கேட்டவுடன் உதவ கோடிகளில் எடுத்து கொடுக்கும் நல்ல உள்ளங்கள் ...

உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு கொடுத்து உதவும் மனிதாபிமானமுள்ள மகான்கள் ...

பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீட்டுக்கு கூட போகாமல் மருத்துவம் பார்க்கும் தெய்வங்கள் ..

துப்பரவு பணியில் சிறிதும் தொய்வு இல்லாமல் பார்த்துக்கொள்ளும் நம் கடவுள்கள்..

வெளியே நடமாட்டத்தை கட்டுப்படுத்த இரவு பகலாக முழு நேர தேச பணியில் காவலர்கள் ...

பிரதமர் வாக்குக்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள் இருக்கும் மக்கள் ...

இதைவிட ஒரு சிறந்த சிஸ்டம் கொண்ட நாடு இருந்தா சொல்லுங்கடா கேட்போம் ...

புண்ணியம் பல கோடி செய்தால்தான் ,இந்த மண்ணில் பிறக்க முடியும் ...

ஈசனையும் /பெருமாளையும் / சக்தியையும் வணங்கி போற்றிய , தேவர்கள் வாழ்ந்த பூமி ...

இங்க இருக்கும் சிலருக்கு இதன் அருமை புரியாது ...

எம் மண் ...பெருமை கொள்ளவோம் ...

#இந்தியா🇮🇳❤️

#Corona
#Lockdown

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing