மோடி நல்லது செய்றார் கெட்டது செய்றார்..அவருக்கு திறமை இருக்கு இல்லை என்பது அல்ல விசயம்.அவர் மக்கள் மனதை நெருங்கும் சூட்சுமம் அறிந்து இருக்கிறார்.
கை தட்ட சொன்னார் விளக்கு ஏற்ற சொன்னார் கொரானா போயிடுச்சா என்பதல்ல விசயம்.நாம் ஒற்றுமையாக இருப்போம் என்ற வார்த்தைகளுக்குள் நான் உங்களில் ஒருவன் நான் உங்களுடன் இணைந்து இருக்கிறேன்.. என இந்திய மக்களின் ஆழ் மனதில் பதிய வைத்துவிட்டார்.
பயத்தில் இருக்கும் மக்களை ஒரு சின்ன நிகழ்வின் மூலம் ஒருங்கிணைத்து நம்பிக்கை கொடுத்து, நம் எண்ண அலைகளை ஒரு சேரகுவித்து, இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவும் வலிமையான பிரார்த்தனையாக இந்த நிகழ்வு மாற்றி இருக்கிறார்
.அதிக மக்களின் எண்ண அலைகளுக்கு நிச்சயம் வலிமை உண்டு.நாம் இதில் இருந்து நிச்சயம் விரைவில் மீள்வோம் என்ற நம்பிக்கை உண்டாகி இருக்கிறது.
இந்தியாவில் அவருக்கு எதிர்ப்பு இருக்கும் மக்கள் மட்டுமில்லாது அவர் என்ன பேசுகிறார் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத சாதாரண கிராம மக்கள் கூட விளக்கு ஏற்றுவோம் பிரதமருக்கு துணை நிற்போம் எனும் எண்ணத்தை உண்டாக்கி விட்டார் .ஒரு மக்கள் தலைவருக்கு உண்டான அடையாளம் இது.
வெற்றிகரமான தலைவர்கள் மக்கள் மனதை நெருங்கியவர்களாக இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment