மோடியின் தலைமையில் பாஜக பெற்றுள்ள வரலாறு காணாத பிரும்மாண்டமான வெற்றி,
திகைக்கவைக்கிறது. அவரது அசுர வெற்றிக்கு ஆயிரம் காரணங்கள், வியாக்கானங்கள்
கொடுக்கலாம். பலர், அடால்ப் ஹிட்லர் கூட தேர்தலில் பெரும் வெற்றி பெற்று
வந்து, இரண்டாவது உலகப்போரைத் திணித்து, உலகையே மயானமாக்கத் துணிந்தார்
என்று அவரது எதிர்ப்பாளர்கள் (நானும்) பேசுகிறார்கள். Power corrupts and
absolute power corrupts absolutely என்பார்கள்.
ஆனால், சாதி, மதம் தாண்டி, அவருக்கு பெருவாரியான மக்கள்
வேட்பளித்துள்ளார்கள் என்று நம்புகிறேன். வதோதராவில் அவரது வெற்றி
சொற்பொழிவின்போது, மக்கள் மோடி, மோடி, மோடி என்று பஜனை செய்தது. ஜெர்மானிய
ஹிட்லரை ஒரு கொடுங்கோலனாக மாற்றிய தொண்டர்களை நினைவுபடுத்தியது. மோடியின்
பேச்சில் நிறைய கோஷங்கள் இருந்தன. ஆயினும், அவரது பேச்சு ஒரு உண்மையான,
முதிர்ந்த, அதே சமயம் உறுதியான தலைவரின் பேச்சாக இருந்தது.
மோடி, இனி நமது பிரதமர். அவர் மீதும், நமது
ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வைத்து நம் கடமைகளைச் செய்வோம். மோடி
தலைமையில் இந்தியா எல்லோருக்குமான இந்தியாவாக முன்னேறும் இந்தியாவாக
இருக்கும் என்று நம்புவோம். அவர் மீது, முழு நம்பிக்கை வைப்போம். ஆயினும், தொடர் கண்காணிப்பே, ஜனநாயகத்திற்கான விலை என்பதை நினைவு கொண்டு விழிப்புடன் இருப்போம். நமது பிரதமர் மோடிக்கும்,அவரது அமைச்சரவைக்கும், இந்திய அடுத்த தலைமுறைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
BJP under Narendra Modi has got a monumental
victory, unbelievable. People will now dissect the victory and find out
thousand reasons and explanations. Many detractors (I am one) will say,
even Adolf Hitler got a great mandate through elections and went on
inflict the second world war and brought death and misery on millions to
convert the world into a graveyard. Then there are who say, Power
corrupts and absolute power corrupts absolutely.
But, I believe, people of India, cutting across
caste and communal lines have given him a great mandate to run the
country. During his victory speech in Vadodara, people were chanting
Modi, Modi , Modi and it reminded the adoring followers of Adolf Hitler
who hailed him into a great dictator. However, his speech reflected a
decisive, earnest and matured leader.
Modi is now our Prime Minister. Let us put trust in
him and our democracy and continue our duties. Let us believe that India
will progress and India will be for all under his Leadership. Let us
put complete faith in him. However, let us remember and be alive to the truth that 'Eternal vigil is the price of democracy'. Best wishes to Our Prime Minister, his cabinet ministers and the younger generation of India .
No comments:
Post a Comment