
 ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும், ஒவ்வொரு குல தெய்வம் இருக்கும். 
இவர்களுக்கு காவல் தெய்வம், குல தெய்வம் வழிபாடு இருக்கும். பிறக்கும் 
குழந்தைகளுக்கு, முதல் முடி குல தெய்வம் கோயிலில் சென்று மொட்டை 
போடுவார்கள். சில்ர் காது குத்துவார்கள். 
 குலதெய்வம் வழிபாடு இந்து
 சமயத்தினருக்கும் முக்கியமான ஒன்றாகும்.அடிப்படையில் நம்முடைய இந்து மதம் 
பற்றற்ற தன்மையை போதிக்கிறது. குல தெய்வ வழிபாடு மனிதனின் லௌதீக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது. 
 அப்படியானால் குலதெய்வமும், இறைநிலையும் வேறுவேறா? அப்படி கிடையாது, 
அதாவது பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணரே இதை தெளிவாக சொல்லியிருக்கிறார். 
உலகத்தில் இன்பத்தையும், பற்றையும் ஒதுக்கிவிட்டு வாழ்வதற்கு எல்லொராலும் 
முடியாது, லௌதீக வாழ்வு வாழ்வபவர்களுக்குதான் இறைதூதர்களையும், தேவதைகளயும்
 இறைவன் படைத்திருக்கிறார். 
 அவர்களே குலதெய்வங்கள் ஆவார்கள். குல 
தெய்வத்தை கும்பிடும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்கள், முழுவதும் பங்காளி 
ஆவார்கள். இவர்கள் அண்ணன், தம்பி உறவு முறையாக கருதுபவர்கள். இவர்களுக்குள்
 பெண் கொடுக்கவோ, எடுக்கவோ மாட்டார்கள். மேலும் நம்முடைய வீட்டில் எந்த 
சுபகாரியங்கள் செய்தாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் 
ஆரம்பிக்கவேண்டும். 
 எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ 
வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக 
முடியும். மேலும் வருடந்தோறும் நம்முடைய குலதெய்வத்தை வழிபடுவதால் 
நன்மைகளும், சந்தோசங்களும் குடும்பத்தில் நிலவும் என்பது உண்மை. 
 
குலதெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்றுவிக்கப்பட்டதோ, 
ஆகாசத்திலிருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள். தங்களை 
காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் 
பெரியவர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு 
வந்திருக்கின்றார்கள். 
 குலத்தைக் காப்பதால் தான் குலக் கடவுள். 
மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்புப்பெயர் குலதெய்வத்திற்கு மட்டும் தான் 
உண்டு. `குலம் தழைக்க வேண்டும், முன்னோர் சாந்தி அடையவேண்டும், பின்னோர் 
செழிக்க வேண்டும்' என்று நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் 
அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும். 
 பல பிரச்சினைகளில் 
சிக்கி உழல்பவர்கள், பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் 
குலதெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும்
No comments:
Post a Comment