ஒரு மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு பலவித துவக்கநிலை செயல்பாடுகள்
அவசியமாகின்றன. பலவித நியதி, நியமங்களும் தேவைப்படுகின்றன. அதன்பிறகே அதன்
பயன்கள் நடைமுறைக்கு வரும். ஒரு சாதாரணச் சொல்லிற்கும் மந்திரத்திற்கும்
உள்ள வித்தியாசம் அது பயன்படுத்தப்படும் விதத்தில்தான் உள்ளது.
சாதாரணமாக நாம் சொல்லும் சொற்கள் காற்று என்ற ஊடகம் வாயிலாகவே நம் காதுகளை
அடைகிறது. அது சொல்பவருக்கும், அதைக் கேட்பவருக்கும் இடையில் உள்ள ஒரே
தொடர்பு மட்டுமே. ஆனால், மந்திரங்கள் பஞ்சபூதங்களோடும் தொடர்பு படுத்தப்படுகின்றன.
அதாவது, சாதாரண ஜபம் என்றால் ஒரு தீபம் ஏற்றி வைத்து, அந்த
மந்திரத்திற்குரிய தேவதாமூர்த்தியை வணங்கிய பின்பு, ஒரு குறிப்பிட்ட
எண்ணிக்கையில் ஜபம் செய்ய வேண்டும் என்பதே முறையாகும்.
அதுவே ஒரு
யாகமாகவோ, ஹோமமாகவோ இருந்தால், ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட
நேரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் அக்னி வளர்க்கப்பட்டு, மந்திர
உருவுடன் அக்னி பகவானுக்கு ஆகுதியும் அளிக்கப்படும். இவ்வாறு பஞ்ச
பூதங்களோடு தொடர்புபடுத்தப்படும் ஒரு சொல் மந்திரமாகிறது.
அல்லது,
இயற்கையிலேயே உள்ள சப்த அதிர்வுகளைக் குறிப்பிட்ட அலையியக்கத்திற்கு
உட்படுத்தி, அதன் அதிர்வெண்ணிக்கைகளால் புற இயற்கையிலும் அவ்வெளிப்பாட்டை
உணர வைப்பதும் மந்திரமாகும்
No comments:
Post a Comment