வீடு தேடிவரும் EB ரீடிங் எடுப்பவர்கள், மற்றும் வீட்டிற்கு தண்ணீர் ,பால், பேப்பர் போடுபவர்கள் என யார் வந்தாலும் தயவுசெய்து வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள்.யாரும் இல்லாத நேரத்தில் வாயிற்கதவை பூட்டிவிட்டு குளிப்பது போன்ற அந்தரங்க வேலைகளை செய்யுங்கள்.
ஏனென்றால் , திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுப்புற கிராமங்களின் வீடுகளில் EB ரீடிங் எடுக்க வந்த ஒரு அயோக்கியன், ஒரு பெண் குளிக்கும் போது வீடியோ பதிவு செய்து வைத்துகொண்டு , தினந்தோறும் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பல மாதங்களாக கொடூரமான வன்கொடுமைகளுக்கு ஆளாகி வந்த சூழ்நிலையில் தற்போது அவனது கொடூர தாக்குதலால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ,நமது சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்க உதவியுடன் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, சென்னை GH மருத்துவ மனையில் அவசர பிரிவில்அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் எத்தனை பெண்கள் அவனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவில்லை.இருந்தால் தயவுசெய்து கீழேஉள்ள எண்களை பயன்படுத்திகொள்ளவும். பிரச்சனைகளின் இரகசியம் காக்கப்படும்.
இந்த நிலை யாருக்கும் நேராமல் இருக்க பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். யாராவது ஏதாவது வீடியோ அல்லது புகைப்படங்களை வைத்துக்கொண்டு வாட்ஸ்அப்,நெட், முகநூல் போன்றவற்றில் விடுவதாக மிரட்டினால் பயப்படாமல் வீட்டில் உள்ளவர்களிடமோ, நம்பகமான தோழி, அல்லது காவல் துறை எண் 100 ,அல்லது அரசின் அவசரகால ஆலோசனை எண் 104 போன்றவற்றை பயன்படுத்தி உங்களது பிரச்சனைகளை உடனே சொல்லுங்கள்.
இல்லையேல் பிரச்சினை பெரிதாகி அனைவருக்கும் சிக்கலே.
அறிவை பயன்படுத்தி குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க முயலுங்கள்.
விலை மதிப்பற்ற உயிரை காப்போம்.விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.
பெண்களுக்கான இலவச சட்ட ஆலோசனை எண்
9884888629.