Tuesday 23 August 2016

குழந்தைகள்தினவாழ்த்துகள்

#குழந்தைகள்தினம்

கண்ணனின் லீலைகளில் சொக்காத மனம் உண்டா?
ஆழ்வார்கள் ,ஆசார்யர்கள் முதல் யோகீஸ்வரர்கள், முற்றும் துறந்த பரம பவித்ரமான ரிஷிகள் வரை மனம் பேதலித்துப் போகின்றனரே!!

கேட்கக் கேட்க செவிகள் இனிக்கும்!
சொல்லச் சொல்ல நாவினிக்கும்!
போதுமென்றே தோன்றாதே!

இப்படி எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட இடைப்பிள்ளையின் பிறந்த நாளன்றோ உண்மையாகவே குழந்தைகள் தினமாகப் போற்றத் தக்கது.

கண்ணனின் அவதாரதினம் கோகுலாஷ்டமி எனவும் ஸ்ரீ ஜெயந்தி எனவும் இரண்டு மூன்று விதமாகக் கொண்டாடுவதேன் என்று கேட்கிறார்கள்.

தெரியாதவர்களுக்கான பதில் இது

கண்ணன் ஆவணி மாதம் ரோகிணி நஷத்திரத்தில் அஷ்டமி திதியன்று ஆவணி அவிட்டம் முடிந்த எட்டாவது நாள் அவதரித்தான்.

ஆகவே வட்டம் (பௌர்ணமி) முடிந்த எட்டாம் நாளைக் கோகுலாஷ்டமியாகக் கொண்டாடுவது ஒரு மரபு

ரோகிணி நஷத்திரத்தை அடிப்படையாகக் கொண்டாடுவது ஒரு மரபு

அஷ்டமியைப் பிரதானமாகக் கொண்டாடுவது ஒரு மரபு

ஆகவேதான் கோகுலாஷ்டமி ஸ்ரீஜெயந்தி என்றெல்லாம் கொண்டாடுகிறோம்.

குழந்தையாய் செய்த லீலைகள் மட்டுமா?
பாரதப் போரில் அவனது ஒவ்வொரு காரியமும் பிரமிக்க வைக்குமே.

எல்லாம் தவிர கீதோபதேசம் எனும் ஹிதோபதேசமல்வா
(ஹிதம் என்றால் நன்மையளிக்கக் கூடிய)
அர்ஜுனனை முன்னிறுத்தி நம் அனைவருக்கும் ஆசார்யனாய் இருந்து போதித்தான்.

அளப்பரிய பெருமையுடைய கண்ணனின் அவதார தினமன்றோ
#குழந்தைகள்தினம்

கண்ணனின் படத்துடன் குழந்தைகள் தினமென்று பெயரிட்டு நிறைய மீம்ஸ் வெளியிடுங்கள்

மக்கள் மனதில் குழந்தைகள் தினமென்றால் கோகுலாஷ்டமி எனப் பதிய வேண்டும்.

#குழந்தைகள்தினவாழ்த்துகள்

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing