Wednesday, 9 November 2016

மோடி அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் அனைவரும் இதை படிக்கவும

கருப்பு பணத்தை ஒழிக்க மோடி அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் அனைவரும் இதை படிக்கவும்...

மோடி அரசின் இந்த செயல் மூலம் பெரிய கருப்பு பண முதலைகள் மாட்டலாம்... ஆனால்???

மக்களாகிய நாம் திருந்துவது எப்போது? நாம் என்ன தவறு செய்கிறோம் என கேட்கிறீர்களா?

1. 99.99 சதவீத மக்கள் வீடு, மனை போன்றவற்றை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியும் போது, அரசாங்கத்தை ஏமாற்றி குறைந்த மதிப்பில் வீட்டை பதிவு செய்து, கணக்கில் வராத பணத்தை கருப்பு பணமாக மாற நாமே வழி செய்கிறோம்...

2. தனியார் / அரசு துறையில் பணிபுரியும் 95 சதவீத மக்கள் HRA எனப்படும் வாடகை வீட்டிற்கு வரி தள்ளுபடி என்பதை தவறாக பயன்படுத்துகின்றனர். அதாவது சொந்த வீட்டில் இருப்பவர், வாடகை வீட்டில் இருப்பதாக போலி ரசீதை சமர்பிப்பார். கம்மியாக வாடகை செலுத்துபவர், போலி தகவல் மூலம் அதிகம் வாடகை செலுத்துவதாக கணக்கு காட்டுவார்..

3. நகை கடைக்கு செல்லும் போது, விலை குறைவு என்பதால் பில் போடாமல் நகைகளை வாங்குவதால் கருப்பு பணம் உருவாக நாமே காரணம் ஆகிறோம்..

4. சொந்த தொழில் செய்யும் 90% மக்கள் அரசாங்கத்திற்கு குறைந்த வருவாயை கணக்கு காட்டுகின்றனர். இதற்கு முழு உடந்தை ஆடிட்டர்கள். உதாரணம்: வருடம் 24 லட்சம் வருமானம் வந்தாலும், 3 லட்சம் என கணக்கு காட்டுவர்..

5. முறையாக வீட்டு வரி, குடிநீர் வரி போன்ற பல வரிகளை முறையாக செலுத்துவதில்லை.. எப்படி அரசை ஏமாற்றலாம் என தான் நினைக்கிறோம்..

6. 10 லட்சம் மேல் சம்பளம் பெறுபவர், காஸ் மானியத்தை விட்டு கொடுக்க கோரிக்கையை எத்தனை பேர் செய்தோம் என தெரியவில்லை..

இது போன்ற பல வகையில் நாம் அரசை ஏமாற்றி கொண்டு தான் உள்ளோம்.. மக்களிடம் கேட்டால்; நேர்மையான அரசு அமையவில்லை என நொண்டி சாக்கு சொல்லி தனது தப்பை நியாயம் சொல்வது தான் அனைவருக்கும் வாடிக்கையாகி விட்டது..

என்னுடைய சிறு சிறு தவறு மூலம் பொருளாதாரம் எவ்வாறு பாதிப்படைய போகிறது என நினைக்க வேண்டாம். உதாரணம்: அந்நியன் படத்தில் வரும் 5 பைசா கதை தான். இது போன்று மக்கள் ஏமாற்றும் பணத்தை கூட்டினால், கருப்பு பண முதலைகளிடம் உள்ளதை விட 100 மடங்கு இருக்கும். நாம் அனைவரும் திருந்தினால் மிக பெரிய மாற்றம் உருவாகும்..

நாட்டு மக்கள் அனைவரும் நேர்மையாக இருக்கும் போது, நேர்மையான அரசு தானாக உருவாகும்..

மாறுவோமா?

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing