சர்வ சாதாரணமாகவோ ஆட்சியை பிடித்த ஆர்வத்திலோ எடுத்த முடிவல்ல இது.
இன்று வேண்டுமானால் நாட்டு மக்களுக்காக ஆற்றிய உரையில் தடாலென அறிவித்துவிட்டார்.
ஆனால் இதன் பின்புலத்தை ஆராயும் போது எவ்வளவு பெரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது கண்கூடாக தெரிகிறது.
1.ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் கருப்பணத்தை கண்டறிய குழு அமைத்தது.
2.பிரதமர் சென்ற நாடுகளில் எல்லாம் கருப்புபண பதுக்கலை பற்றி விவாதித்தது.
3.சுவிஸ் உட்பட அனைத்து நாடுகளில் இருந்து கருப்பு பணத்தை வெளியேற்றி வேறுவழி இல்லாமல் இந்தியாவுக்குள் கொண்டுவர வைத்தது.
4.இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் பாதிக்ககூடாது என்று ஜன் தன் யோஜனா திட்டம் மூலம் வங்கி கணக்கை உருவாக்கியது.
5.இந்தியாவுக்குள் வந்த கருப்பு பணத்தை பினாமிகள் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் முடக்க முடியாத அளவுக்கு அத்துறையில் சட்டங்களை கடுமையாக்கியது.
6.பணமுதலைகள் தாமாக முன்வந்து ஒப்படைத்தால் அதற்கு அபராதம் மட்டும் விதித்தது.
7.அதற்கு காரணம் இவர்களும் முந்தய காங்கிரஸ் ஆட்சி போலவே விட்டுவிடுவார்கள் என்று அப்போதும் அலட்சியமாகவே இருந்து விட்டனர் கருப்பு முதலைகள்.
8.மிகச்சரியான தருணம் அமெரிக்க தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் தருணத்தில் ஒரு பொருளாதார தேக்க நிலை உருவாகும் அப்போது நாம் சுதாகரித்து விடலாம் ஆகையால் இப்போது அறிவித்துள்ளார் நமது பிரதமர்.
ஏழை மக்களுக்காக எவ்வளவு உழைப்பு. இது போன்ற தலைவர் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது.
No comments:
Post a Comment