சாயாவாலா பிரதமர்
சரியான நடவடிக்கை - கருப்பு பண பதுக்கல்காரர்களுக்கு, கள்ள நோட்டு புழக்க வாதிகளுக்கு, சரியான ஆப்பு.
இது ஒரு தேவையான நடவடிக்கை தான். அதற்கு பிரதமருக்கு பாராட்டுக்கள்.
ஆனால் செயல் படுத்திய விதம், இனிவர இருக்கிற புது வித ரூ 500, ரூ 2000 நோட்டுகள் தான் 500, 1000 ரூ நோட்டு ஒழிப்பை செயல் படுத்திய செயலை நியாயப்படுத்த வில்லை. இது கருப்பு பணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கை என்று முழவதுமாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
இன்றைய ஊழல் வாதிகளை, கருப்பு பண பதுக்கல் வாதிகளை ஒழித்து விட்டு, இனிமேல் கண்டெய்னர் தேவையில்லை ரூ 2000 மாக லஞ்சத்தை வாங்கி, அதை ஷேர் ஆட்டோவிலேயே வைத்து கடத்தி கொள்ள வழிவகை செய்யும் புது ஊழல் வாதிகளை உருவாக்க அடித்தளமிட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது.
இது இன்றைக்கு கொள்ளை அடித்து கருப்பு பணத்தை குவித்து வைத்திருக்கும் ஊழல்வாதிகளை, அரசியல் வாதிகளை, அமைச்சர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும். ஆனால் எல்லோர் கண்களிலும் மண்ணைத்தூவிவிட்டு ஒட்டுக்கு பணத்தை சரியாக கொடுக்க தெரிந்த அரசியல் வாதிகள், மக்களிடமே ஆளுக்கு 10,000 கருப்பு பணத்தை கொடுத்து வங்கியில் கொடுத்து அதை 8000 மாக வாங்க எவ்வளவு நேரம் ஆகும்.
இது நடக்க போகிறது. பார்க்கதான் போகிறோம்.
ஆனால், இதிலும் பாதிக்கப்பட்டது, பாதிக்கபட போவது சாதாரண மக்கள், சிறு மற்றும் குறு வியாபாரிகள், நடுத்தரவர்கம், மற்ற பதிவு செய்யப்படாத தொழில்கள், விவசாயிகள், பணத்தை மட்டுமே வைத்து இயங்கும் சிறு, மற்றும் குறும் தொழில்கள் பாதிக்கப்பட போகிறது. கருப்பு பணமே உருவாகாத நிலையை, அதற்குறிய கட்டமைப்பை, கொள்கையை, நிதி நிலை கொள்கை எங்கே வழிவகுக்கப்பட்டிருக்கிறது.
இதை எதுவுமே செய்யாமல், வருமான வரி, சேவை வரி மற்றும் ஜி.எஸ்.டி வரி என்று வருமானத்தில் 40 சதவிகத்திற்கும் மேல் வரியை வசூலித்தால் எப்படி மக்கள் ஒழிவு மறைவு இல்லாமல் பணப்பரிமாற்றத்தை செய்வார்கள்.
சொத்தை விற்றால் வழிகாட்டு மதிப்பு, மார்க்கெட் மதிப்பு என்று இரண்டு மதிப்பிருந்தால், கருப்பு பணம் எப்படி ஒழியும்.
உண்மையாக கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டுமா, மீண்டும் எதற்கு ரூ 500, ரூ 2000 நோட்டுகள் பிரிண்ட் செய்ய வேண்டும். தேவையில்லை. ரூ 100 நோட்டுகளை மட்டும் புழக்கத்திற்கு வைத்து விட்டு, அதற்கு மேல் அனைத்தையும் வங்கி பரிவர்த்தனை மூலம் செயல் பட நடவடிக்கை எடுத்து டிஜிட்டல் கரண்சி திட்டத்தை அமுல் படுத்தியிருந்தால் இது இதய சுத்தியோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று என்ன இடமுண்டு.
Ease of Doing Business Index 130 ல் இருந்து 10 க்குள் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்த நடவடிக்கை எப்படி கருப்பு பணத்தை, லஞ்சப் பணத்தை ஒழிக்கும்.
சினிமா தொழில், ரியல் எஸ்டேட் தொழில், கந்து வட்டி தொழில், வரதட்சிணை, தங்கம் விற்பனை, பர்மா பஜார், ஒட்டல் தொழில், கடை வியாபாரம், தின வியாபாரம் என்று வரைமுறை படுத்த படாத பல்வேறு தொழில்களை மக்களில் பெரும்பாலோர் செய்யும் நிலைமையை மாற்றாமல், அவர்கள் வரி விதிப்பின் கொடூட பிடியில் இருந்து பயப்படாமல் தொழில் செய்து, அரசிற்கு நியாயமான வரியை கட்ட நாங்கள் தயார் என்று சொல்ல கூடிய நிலைமையை உருவாக்காமல், ரூ 500, ரூ 1000 த்தை ஒழித்து எப்படி கருப்பு பணத்தை ஒழிக்க போகிறீர்கள்.
ஒரு உதாரணத்திற்கு சினிமா தொழிலை எடுத்துக்கொள்வோம். சினிமாவில் ஒருவன் தன் திறமையை நீரூபித்து, வாழ்க்கையில் வெற்றி பெற போட்டி போடும் நூற்றுக்கணக்கான பேர்களில், வெற்றி பெரும் வல்லமை பெற்ற ஒருவன், வெற்றி பெற்று அவன் பணம் சம்பாதிக்கும் வரை அவனை கண்டு கொள்ளாத அரசாங்கம், அவன் ஒரு படத்தில் வெற்றி பெற்ற உடன் வருமான வரி கட்டு என்று கழுத்தை நெரிக்கும் நிலையில் இருந்தால், அவன் அடுத்த படத்தில் தோல்வியடைந்தால், அவனை கண்டு கொள்ளாத அரசாங்கத்திற்கு எதற்கு வரி கட்ட வேண்டும் என்று நினைப்பான இல்லையா.
இது போல் எத்தனை தொழில்கள், எத்தனை தனித்திறமைகளை அங்கீகரிக்காத, எந்த உதவியுமே செய்யாத அரசாங்கம், அவன் சம்பாதித்தவுடன் சட்டத்தை தூக்கிக்கொண்டு வரி வசூல் செய்யதால் அவன் எதற்கு வரி கட்ட வேண்டும் என்று நினைப்பானா இல்லையா.
எனவே இப்படி பல்வேறு மேடு பள்ளங்களை வைத்துக்கொண்டு கருப்பு பணத்தை பிரதமர் மோடி ஒழித்து விடுவார் என்ற நம்பிக்கை இல்லை.
அவர் உண்மையிலேயே கருப்பு பணத்தை ஒழித்து, மக்களை வரி கட்ட வைக்க வேண்டுமென்றால், வருமான வரியை ஒழித்து விட்டு, செய்யும் செலவிலே வரி வசூலிக்கும் சட்டம் இயற்ற வேண்டும். டிஜிட்டல் கரன்சி திட்டம் கொண்டு வரவேண்டும். ரூ 100 க்கு மேல் ரூ நோட்டு இருக்க கூடாது. கருப்பு பணம் உரவாக்க வழி வகுக்கும் சட்டங்களை ஒழித்து விட்டு மக்களை உழைத்து பிழைக்க வழி வகை செய்ய வேண்டும், அனைவரும் மகிழ்ச்சியாக வரி கட்டும் நிலைமையை ஏற்படுத்தினால் உண்மையிலேயே மாற்றும் வரும்.
சாயா கொடுக்காமலேயே அனைவரையும் விடிய விடிய விழிக்க வைத்த பாரத பிரதமர் சாயா குடித்து விட்டு இந்த யோசனையை செயல் படுத்துவாரா. 🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
No comments:
Post a Comment