Saturday 10 December 2016

மனைவிக்காக தியாகம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்





ஒரு பெண் ஷாப்பிங் போனார் ..!!

கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்குஆச்சரியம்!

நீங்க டி.வி ரிமோட்டை எப்பவுமே உங்க பையிலதான் வச்சிருப்பீங்களா ..?!?என்று கேட்டார்அதற்கு அந்தப் பெண்இல்லை இல்லை என் கூடஷாப்பிங் வரமாட்டேன்னுஎன் ஹஸ்பண்ட் சொல்லிடாரு,
அதான் அவர் டி.வி பார்க்காமஇருக்கறதுக்காக ரிமோட்டை கையோட தூக்கிட்டு வந்துட்டன் என்றாள் ..!!


கருத்து
மனைவி எங்கேகூப்பிட்டாலும்செல்ல மறுக்காதீர்கள் ..!!

இதைக்கேட்டு கடைக்காரர்சிரித்தபடிஅந்த பெண் வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்து உள்ளே வைத்தார்..

!!என்னாச்சு என்று ஆச்சரியத்தோடுஅந்த பெண் கேட்டார் 

..அதற்கு அந்த கடைக்காரர் சொன்னார் உங்க கிரடிட் கார்டை உங்க ஹஸ்பண்ட் பிளாக் பண்ணிருக்கார் என்று ..!!

கருத்து
உங்கள் கணவரின் ஆசைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் ..!!

அந்த பெண் உடனே தன் பையிலிருந்து தனது கணவனின்கிரடிட் கார்டை எடுத்து நீட்டினார் ..!!அது பிளாக் செய்யப்படாமலிருந்தது. இப்போது அந்த பெண்கடைக்காரரைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்பு சிரித்தார் ..!!

கருத்து
மனைவியின் பவரை குறைத்து மதிப்பிடாதீர்கள் ..!!

அந்த கிரடிட் கார்டை ஸ்வைப் செய்தவுடன் ..ஒன் டைம் பாஸ்வேர்டை என்டர் செய்யவும் ..அது உங்கள் மொபைலுக்குஅனுப்பப்பட்டிருக்கிறது என்றுமெஷின் ஒளிர்ந்தது ..!!

கருத்து

ஆண்கள் சமத்தாக இருந்தாலும் கூட மெஷின்கள் அவர்களைசாமர்த்தியமாக காப்பாற்றும் ..!!அந்த பெண் பொருட்கள் எதுவும் வாங்காமல் மனம் நொந்து போய்கடையிலிருந்து வெளியேவந்தார் ..!!

அப்போது அவளுடைய மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்ததுஅது ஒரு ஃபார்வர்டு மெஸேஜ்அதில் #உங்கள்_ஒன்_டைம்_பாஸ்வேர்டுஎன்றிருந்தது .

..அது அவளுடைய கணவர் அனுப்பியது 

..உடனே அவள் முகம்மலர்ந்தது ..!!

ஆனால், அவள் கண்களில்கண்ணீர் மட்டும் தேங்கி நின்றது..!!மீண்டும் கடைக்குள் நுழைந்தவள்வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்கினாள் 

கருத்து

உங்கள் கணவரைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும்நினைத்துக்கொள்ளுங்கள் ..!!

ஆனால்அவர்கள் எப்போதும் தன் மனைவிக்காக தியாகம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள் இருப்பார்கள் ..!!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing