GDP என்பது Gross domestic product (GDP) is the monetary value of all the finished goods and services produced within a country's borders in a specific time period
அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியை குறிப்பது. ஒரு வருடத்தில் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பதை வைத்து அதன் பொருளாதாரம் அளவிடப்படுகிறது.
நாட்டில் மொத்தமும் 100 ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்...
பொருட்கள் வாங்க விற்க என்ற வர்த்தகத்தில் இந்த 100 ரூபாய் ஒரு வருடத்தில் 6 முறை கை மாறுகிறது என வைத்துக் கொள்வோம், அப்பொழுது இந்தியாவின் GDP என்பது 6 X 100 = 600 என்று கணக்கீடப்படும். இந்த கைமாறும் முறை "பணத்தின் திசைவேகம்" (VELOCITY of Money) எனப்படும்.
இதில் வேறு ஒரு விதமான வியாபாரமும், அதனால் இந்தியாவின் GDP எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் பார்ப்போம். மேலே சொன்னது போல 6 முறையும் 100 ரூபாயாகவே சுற்றி வந்தது. இந்த முறை பில் இல்லாமல் அல்லது மற்ற வர்த்தகத்தில் சுற்றி வருகிறதாக சின்னதாக ஒரு கணக்கை பார்ப்போம்
இந்த முறை
அதே 100 ரூபாய் கள்ளப் பண வர்த்தகத்தில் 2 ஆக பிரிந்து இருப்பதாக எடுத்துக் கொள்வோம்...
40 என்பதை கள்ளப் பணம் வர்த்தகம் என்று கொண்டால் அதிகபட்சமாக 2 முறை அது கை மாறும். நல்ல பணம் கை மாறிக் கொண்டிருக்கும்.
ஆனால் கள்ளப்பணம் அப்படி மாறாது.
அதன் படி
40 ரூபாய் 2 முறையாக கைமாறியதாக வைத்துக் கொள்வோம்: 40 X 2 = 80
60 ருபாய் முன்பு சொன்னது போல 6 முறை கை மாறியதாக வைத்துக் கொள்வோம் 60 x 6 = 360
இப்பொழது இந்தியாவின் GDP என்பது 80 + 360 = 440
கணக்கில் மாறிய பணத்திற்கு கிடைத்த GDP 600
கள்ள பணத்தால் நடந்த பரிவர்த்தனைகளால் GDP 360.
இதை சரி செய்ய முக்கியமான வழி கையில் இருக்கும் அல்லது புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவை ஒரு கணக்கில் கொண்டு வருவதே. இதன் மூலம் இது வரை முடங்கி இருந்த பணமும் ஏதோ ஒரு வகையில் கணக்கில் வந்து விடும். மீண்டும் கள்ள சந்தைகள் கோலோச்சும் முன் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுக்க இதுதான் ஆரம்ப கட்டம்.
GDP என்பது
பணத்தின் அளவு * பணத்தின் திசை வேகம். இந்த பணத்தின் திசை வேகம் சீராக இருந்தால் மட்டுமே மக்களின் பண புழக்கம் சரியாக இருக்கும் இல்லையேல் குறிப்பிட்ட இடத்தில் இந்த பணம் முடங்கி பண புழக்கம் குறைந்து விடும்.
இப்பொழுது புரிகிறதா?.
இந்திய மோடிஜி அரசின் நடவடிக்கை எதை நோக்கி பயணிக்கிறது என்று?!.
இனியொரு விதி செய்வோம்...
No comments:
Post a Comment