Sunday 4 February 2018

சைவமும், வைணவமும் ஒன்றாக கலந்து ஒரு சுற்றுலா

*செங்கல்பட்டில் திருப்பதி. ஆம், ஆச்சரியம்... ஆனால் உண்மை.*

இனிமேல் யாரும் திருப்பதி பெருமாளை 5நிமிடம், 10 நிமிடம் என தரிசிக்க முடியவில்லையே என ஏமாற்றம்
அடையாமல் இருங்கள்.
நேராக செங்கல்பட்டிற்கு
செல்லுங்கள், 50ம் எண்
கொண்ட திருப்போரூர் செல்லும்
அரசு பேருந்தில் ஏறி திருவடிசூலம் என்னும் மிக அழகிய குக்கிராமத்தில்இறங்குங்கள். 2 கிலோமீட்டர் நடக்க வேண்டும். வழியில்
மிகப் பழமையான திருஞானசம்பந்தரால்
பாடல் பெற்ற தொண்டை
நாட்டு திருத்தலமான இடைச்சுரநாதர்
(சிவன்) ஆலயம் வரும். இவரையும்
அம்பாளையும் தரிசித்து விட்டு இடது புறமாக மறுபடியும் நடங்கள். மலை ஒன்று ஆரம்பமாகும். அப்படியே வலது புறம் திரும்பி நடங்கள். நீங்கள் 7 அழகிய மலைகளைக்
காண்பீர்கள். உங்கள் கண்களுக்கு இரு
சிறிய கோயில்கள் தென்படும். இடது
புறமாக ஒரு சாலை பிரியும், அதைப் பின்பற்றி சென்றீர்கள் என்றால்...
உலகிலேயே மிக உயரமான 51 அடி
அற்புதமான தரிசனம் தரும் கருமாரி
அம்மனை சேவிக்கலாம். அப்படி ஒரு அழகு, தெய்வாம்சம், காண கண்கள் கோடி
வேண்டும். மிகவும் விஸ்தாரமான இடத்தில்,
கோழியும், கெளதாரியும், வான்கோழியும்
சுற்றி திரியும் இயற்கை எழில் கொஞ்சும்
அழகுள்ள இடத்தில் இந்த கருமாரி
வீற்றிருக்கிறாள். நீங்கள் உங்களையே
மறந்துவிடுவீர்கள்.
கருமாரி அன்னையின் பின்புறமே அவர்
அண்ணன் பெருமாள் ஸ்ரீ
நிவாசனாக மிகப் பெரிய அளவில்
வீற்றிருக்கிறார். திருப்பதி சென்று
சரியாக கடவுளை காண முடியாத
ஏக்கத்தில் இருப்பவர்கள் இங்கே நம்மூரிலேயே, சென்னைக்கு அருகிலேயே, செங்கல்பட்டிலிருந்து ஒரு 10 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த அதி அற்புத தரிசனம் செய்யலாம். அண்ணனையும், தங்கையையும் ஒரு சேர காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இவர்கள் இருவரையும் தரிசித்து விட்டு, இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் அஷ்டபைரவர் கோயிலைப் பார்க்காலாம். இங்கே உலகத்தில் வேறெங்கும் காணமுடியாத மிகப்பெரும் கோயிலினுள் அஷ்டபைரவர்களை தரிசிக்கலாம். கோயில் நுழைவு
வாயிலில் பௌர்ணமி குகை கோயில் உள்ளது. ஆனால் இந்த குகை கோயிலில் இருக்கும் சிவனைக்
காண நீங்கள் பௌர்ணமிக்கு 3 நாட்கள்
அல்லது பூரட்டாதிக்கு 3 நாட்கள் முன்பே பதிவு செய்துவிட்டுத் தான் செல்ல முடியும். சிவனை இங்கு பாதாளத்தில் காணலாம். *முக்கிய குறிப்பு - சிவனைப் பார்க்க வேண்டுமெனில் நீல நிற ஆடைஅணிந்து தான் செல்ல வேண்டும்.*

சிவனடியார்களே, சிவபக்தர்களே, தயவு
செய்து இந்தக் கோயிலைப் பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களிடத்தில் சொல்லவும். இந்தப் பதிவை அதிகம் பகிரவும்.

வசதியுள்ளவர்கள் கார், பைக், வேன் போன்ற வாகனங்களில் வருகிறார்கள்.
வசதியில்லாதவர்கள் நடந்துதான்
வரவேண்டும். இது ஒரு குக்கிராமம்
என்பதால் ஆட்டோவோ, ஷேர் ஆட்டோவோ இல்லை.

ஆள் அரவவமற்ற பகுதி என்பதால்
காலையில் சென்று மதியமோ அல்லது
மாலை இருட்டுவதற்குள் திரும்பி
வந்து விடுவது போல் உங்கள் பிரயாணம்
இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

சைவமும், வைணவமும் ஒன்றாக கலந்து ஒரு சுற்றுலா சென்ற மகிழ்ச்சியும் கிடைக்கும்...
🙏🙏🙏🙏🙏

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing