Friday, 15 June 2018

My heartful Ramalan wishes to all my Islamic relatives and friends

"மனிதர்களைப் படைத்து வாழ்வாதாரம் வழங்கியதோடு நின்றுவிடாமல், தன் தூதர்கள் வாயிலாக அவர்களை நேர்வழியில் செலுத்தும் பொறுப்பையும் இறைவனே ஏற்றுக் கொண்டான். நேர்வழியை அருள்வதும் இறைப் பண்புகளில் ஒன்றாகும்"

"இறைவனின் கருணை பற்றி நம்பிக்கை இழந்து விடாதீர்கள். திண்ணமாக, இறைவன் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான். திரும்பி விடுங்கள் உங்கள் இறைவனின் பக்கம்!"

நபிகள் நாயகம் சொல்லும் நல்ல அறிவுரைகளைக் கேளுங்கள்.
* இறைவனுக்கு இணையாக யாரையும் இணையாக்காதீர்கள்.
* பெற்றோருக்கு என்றும் பெருமதிப்பு கொடுங்கள்.
* அறிஞர்களின் தொடர்பால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.
* விருந்தினர்களை விருப்பத்துடன் உபசரியுங்கள்.
* சென்றதை நினைத்து மனம் வருந்தாதீர்கள்
* இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசாதீர்கள்.
* உடலை அலங்கரிப்பதிலும், உடை அணிவதிலும் மிதமான போக்கை கைக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள். என் இஸ்லாமிய உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துக்கள். My heartful Ramalan wishes to all my Islamic relatives and friends!!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing