----------------------------------------------
உடல்நலனில் அக்கறை உள்ளவர்கள் அவசியம் படித்து பகிரவும்.
----------------------------------------------
அமெரிக்காவில் 6 மாதங்கள் பதப் படுத்தப்பட்டு, மரபணு மாற்றப்பட்ட உணவுகளை உண்ட, கோழிகளின் இறைச்சியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய நம் இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது மிகவும் துரதிஷ்டவசமானது.
இந்தியர்களின் ஆரோக்கிய விஷயத்தில் அமெரிக்காவிடம் அடி பணிந்து செயல்படும் விதமாக, கடந்த 2007 முதல் தடை செய்யப்பட்ட அமெரிக்க கோழி இறைச்சியை, தற்போது இறக்குமதி செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்கர்கள் கொழுப்புகள் நிறைந்த கோழிகளின் கால்களை சாப்பிட மாட்டார்கள். நெஞ்சு பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் அந்த நாட்டில் கோழிகளின் கால்கள் மித மிஞ்சம் அடைகிறது.
இதை குப்பையில் கொட்ட முடியாது என்பதால், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய, WTO மூலம் தொடர்ந்து இந்திய அரசை நிர்பந்தித்து வந்தது அமெரிக்கா. இதற்கு காரணம், உலகளவில் கோழி உற்பத்தியில் நான்காவது பெரிய நாடு இந்தியா.
இந்தியாவில் கோழி இறைச்சி கிலோ ரூ.200 க்கு விற்கப்படுகிறது. ஆனால் விலை குறைந்த மரபணு மாற்றப்பட்ட உணவை உண்ணும் அமெரிக்க கோழிகளின் இறைச்சி கிலோ ரூ.70 மட்டுமே!!.
தங்கள் நாட்டில் சாப்பிடாத கோழி இறைச்சியை இந்தியர்களுக்கு இரையாக்கி பணமாக்க நினைக்கிறது அமெரிக்கா.
இந்த இறைச்சியை உண்ணும் இந்தியர்களுக்கு மிகப் பெரிய உடல் உபாதைகள் ஏற்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
இந்திய மக்கள் நேரடியாக கடைக்களுக்கு சென்று கோழிகளை வாங்குவதால், இந்த வகை கறிகள் பெரும்பாலும் ஹோட்டல்களில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
எனவே இனி கடைகளில் சாப்பிடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏற்கனவே நாம் இயற்கை பாரம்பரிய விவசாயத்தை மறந்து விட்டதால், நோயாளிகள் இல்லாத குடும்பமே கிடையாது என்ற கோர நிலை உருவாகி விட்டது.
இப்போது இது போன்ற தரமில்லாத உணவுகளை இறக்குமதி செய்வதால் இந்தியர்களின் ஆரோக்கியம் என்றும் இனி கேள்வி குறி ஆக்கப்படும்.
எனவே இந்திய அரசு, அமெரிக்கா மற்றும் WTO நிர்பந்தத்திற்கு அடி பணியாமல், இந்த இறைச்சிக்கு தடை விதிக்க
வேண்டும்.
😭😭😭😭😭😭😭😭
No comments:
Post a Comment