ஐந்திற்குள் அடங்கிய (இயற்கையின் ஐந்து நிலைக்குள்) அனைத்தும் என்னென்று பார்ப்போம்.
ஐந்தாக அமைந்தவைகள்
* பஞ்சபுராணம் - தேவாரம்,திருவாசகம்,திருவிசைப்பா,திருப்பல்லாண்டு,பெரியபுராணம்.
* பஞ்ச கங்கை - ரத்ன கங்கை,தேவ கங்கை,கயிலாய கங்கை,உத்ர கங்கை,பிரம்ம கங்கை.
* பஞ்சாங்கம் - திதி, வாரம், நட்சத்திரம்,யோகம்,கரணம்.
* பஞ்ச ரிஷிகள் - அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.
* பஞ்ச குமாரர்கள் - விநாயகர்,முருகர்,வீரபத்திரர்,பைரவர்,சாஸ்தா.
* பஞ்ச நந்திகள் - போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி,தர்ம நந்தி,
* பஞ்ச மூர்த்திகள் - விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.
* பஞ்சாபிஷேகம் - வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர்,பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர் , கிராம்பு,கொரோசனம் கலந்த நீர் ,விளாமிச்சை வேர் , சந்தனாதி தைலம் ஆகியவாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம்.
* பஞ்ச பல்லவம் - அரசு,அத்தி,வில்வம்,மா,நெல்லி.
* பஞ்ச இலைகள் - வில்வம்,நொச்சி,விளா,துளசி,கிளுகை.
* பஞ்ச உற்சவம் - நித்ய உற்சவம்,வார உற்சவம்,பட்ச(மாதம் இருமுறை)உற்சவம்,மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.
* பஞ்ச பருவ உற்சவம் - அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி,மாதப்பிறப்பு.
* பஞ்ச பூதங்கள் - நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்.
* பஞ்ச சபைகள் - ரத்தின சபை,கனக சபை,வெள்ளி சபை,தாமிர சபை,சித்திர சபை.
* பஞ்ச ஆரண்யம் - உஷத் காலம்,கால சாந்தி,உச்சிக் காலம்,சாயரட்சை,அர்த்தஜாமம்.
* பஞ்ச முகங்கள் (சிவன்)- தத் புருஷம்,அகோரம்,சத்யோஜாதம்,வாமதேவம்,ஈசானனம்.
* பஞ்ச முகங்கள் (காயத்திரி)- பிரம்மன்,விஷ்ணு,சதாசிவன்,ருத்ரன்,ஈஸ்வரன்.
* பஞ்ச மாலைகள் - இண்டை,தொடை,தொங்கல்,கண்ணி,தாமம்.
* பஞ்சமா யக்ஞம் - பிரம்ம யக்ஞம்,பிதுர் யக்ஞம்,தேவ யக்ஞம்,பூத யக்ஞம்,மானுஷ்ய யக்ஞம்.
* பஞ்ச ரத்தினங்கள் - வைரம்,முத்து,மாணிக்கம்,நீலம்,மரகதம்.
* பஞ்ச தந்திரங்கள் - மித்ரபேதம்,சுகிர்லாபம்,சந்திவிக்ரஹம்,லப்தகானி,அசம்ரேசிய காரித்வலம்.
* பஞ்ச வர்ணங்கள் - வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.
* பஞ்ச ஈஸ்வரர்கள் - பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,மகேஸ்வரன்,சதாசிவன்.
* பஞ்ச கன்னியர்கள் - அகலிகை,திரௌபதி,சீதை,மண்டோதரி,தாரை.
* பஞ்ச பாண்டவர்கள் - தர்மன்,அர்ச்சுனன்,பீமன்,சகாதேவன்,நகுலன்.
* பஞ்ச ஹோமங்கள் - கணபதி ஹோமம்,சண்டி ஹோமம்,நவக்ரஹ ஹோமம்,மகா சுதர்சன ஹோமம்,ருத்ர ஏகாதச ஹோமம்.
* பஞ்ச சுத்திகள் - ஆத்ம சுத்தி,ஸ்தான சுத்தி,திரவிய சுத்தி,மந்த்ர சுத்தி,லிங்க சுத்தி.
* பஞ்ச கோசம் - அன்னமய கோசம்,பிராணமய கோசம்,ஆனந்தமய கோசம்,மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.
* பஞ்ச காவ்யம் (பசு)- பால்,தயிர்,நெய்,கோமியம்,சாணம்.
* பஞ்ச லோகம் - தங்கம்,வெள்ளி,பித்தளை,செம்பு,ஈயம்.
* பஞ்ச ஜீவநதிகள் - ஜீலம்,ரவி,சட்லெட்ஜ்,பீஸ்(பீயாஸ்),ரசனாப்.
* பஞ்ச ஆயுதங்கள்(மகாவிஷ்ணு)சங்கு, சக்கரம்,கதை,வாள், வில்.
* பஞ்ச நிலங்கள் - குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல், பாலை.
* பஞ்ச காப்பியங்கள் - மணிமேகலை,சீவக சிந்தாமணி,வளையாபதி,குண்டலகேசி,சிலப்பதிகாரம்.
* பஞ்சமா பாதகங்கள் - காமம்,கள்ளுண்டல்,களவு,கொலை,பொய்.
* பஞ்ச சயனம் - அழகு,குளிர்ச்சி,வெண்மை,மென்மை,மணம்.
* பஞ்ச புராண ஆசிரியர்கள் - நால்வர்,கரு ஆருத்தேவர்,சேத்தனார்,சேக்கிழார்,
கச்சியப்பர்
கச்சியப்பர்
No comments:
Post a Comment