Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Tuesday, 29 November 2016
#சர்க்கரை வியாதிக்கு மூலிகை மருத்துவம்
நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ?
இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது
நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ?
இந்தப் பழக்கம்
ஏன் வழக்கமானது ?
ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.
மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்.
மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..
அப்போதெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது . . . கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள்கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும் .
அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.
இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக ?
வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது .
மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .
நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!
நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!
நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!
தாய் பாசம் என்பதை விட தாயின் வாசமே நம் சுவாசம
தாய் வாசம்...
தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்...
அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.
அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்
தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.
அதைப் பற்றி இப்ப என்ன?. என்னுடைய கடமையைத்தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?.
இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள். ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,
சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் – என்றாள்.
மகனுக்கு ஒரே சந்தோஷம்.
அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,
ஒன்றுமில்லை மக்னே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.
அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.
தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக,
என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட விட மாட்டேன் என்கிறாய்?. ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.
அப்போது தாய் அமைதியாக சொன்னாள்:
மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடு கட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும் போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய்.
மகன் திகைத்து நின்றான்.
இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன் – என்றாள் தாய்.
நண்பர்களே!...
உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும்.
ஒன்றைத் தவிர.
அதுதான் தாயின் தியாகம்.
தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது.
தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்?.
நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும். தாயில்லாமல் நான் இல்லை என்பதை நினைவில் கொள்.
ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.
எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான்.
அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள்.
என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பதும் நிதர்சமான உண்மை.
சிவனில் பாதியே சக்திதானே.
சக்தி இன்றி சிவமே இல்லை.
நினைத்த போது இறைவனைக் காணத்தான் இறைவன் தாயைப் படைத்தான்
பாசம் உங்களை இழக்கலாம்.
ஆனால் நீங்கள் என்றும் பெற்ற தாய் பாசத்தை இழக்காதீர்கள்...
தாய் பாசம் என்பதை விட தாயின் வாசமே நம் சுவாசம்.
#பல்லாண்டுகள் பிணிகளின்றி இளமையுடன் நலமுடன் வாழலாம்
அதிகாலையில் எழுபவன்
பசித்த பின் உணவை உண்டு வாழ்கிறவன்
தாகமெடுத்த பின் நீர் அருந்துபவன்
இரவு 09.00 முதல் அதிகாலை 04.00 வரை உறங்குபவன்
முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்
மண்பானைச் சமையலை உண்பவன்
உணவை நன்கு மென்று உண்பவன்!
உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்
வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்
குளிர்பானங்களை உபயோகிக்காதவன்
மலச்சிக்கல் இல்லாதவன்
Monday, 28 November 2016
சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள
#இந்தியாவில் இனிமேல் இதெல்லாம் இருக்காத
இன்று உலக நட்பு நாள
👉🌺💐🌺💐🌺💐🌺💐👈
🍎 *இன்று உலக நட்பு நாள்.*
👉 *வாழ்த்து செய்தி.*
🌻"அழகிய உறவுகள் கிடைப்பது எளிது,
🌻அதில் அன்பான உள்ளம் இருப்பது அரிது"...
🌻வாழ்க்கையின் இனிமையான பல நேரங்கள் நம் நல்ல நண்பர்களால் மட்டுமே...
🌻எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது நம்மை மகிழ்விப்பது அவர்களால் மட்டுமே முடியும்....
🌻உடலால் வேறாக உள்ளங்களால் ஒன்றாகி வாழும் நண்பர்களுக்கு
🌻 இந்த நாள் சமர்ப்பணம்...
🌻என்னோடு தொடர்ந்து பயணிக்கும் என்
தோழமைகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்...
👉💐🌺💐🌺💐🌺💐🌺👈
Sunday, 27 November 2016
#ISupportMODIJi
🇮🇳🇮🇳🙏🙏kskumar 🇳🇮🇳please தயவு செச்சு ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படிக்கலாமே......
மோடி மோடி மோடி மோடி மோடி
இனி காகித பணதிற்கு வேலையில்லை இனி எல்லாம் E payments தான் வாழைக்காய் வியாபரிக்கும் வெங்காய வியாபரிக்கும் மாட்டு ஆடு வியாபரிக்கும் சேர்த்தே
இனி மேல் இந்தியாவில் பணதிற்காக
1.ஆள் கடத்தல் இருக்காது,மணல் கடத்தல் இருக்காது பெரிய தொகையாக காகித பணம் இனி யார் கையிலும் இருக்காது
2.அரிசி கடத்தல் இருக்காது
3.கஞ்சா அபின் கடத்தல் இருக்காது
4.தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை இருக்காது
5.அரசியல்வாதிகளுக்கு அல்லகை இருக்காது
6.கருப்பு பணத்தில் அரசியல் மாநாடு இருக்காது
7.மதமாற்றம் இருக்காது
8.தினம் தினம் அரசியல் கட்சி போராட்டங்கள் இருக்காது
9.கந்துவட்டி இருக்காது 2 பில் புக் இருக்காது
10.ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் இருக்காது
11.அரசு அதிகாரிகள் லஞ்சம் இருக்காது
12.ஹவாலா பண பறிமாற்றம் இருக்காது
13.பணதிற்கு அரசு அதிகாரிகள் வளையமாட்டார்கள்
14.நிலத்தின் அரசு கைடுலைன் வேல்யூஸ் ஒன்று மார்கெட் விலை ஒன்று இருக்காது
15.பிளாட் விலை 1 கோடி 50 லட்சம் என இருக்காது
16.ரியல் எஸ்டேட் விலை கன்னாபின்ன என இருக்காது
18.மீட்டர் வட்டி கந்து வட்டி கொடுமை இருக்காது
19.இனி கருப்பு பணத்தை வைத்து வெட்டி அரசியல் இருக்காது
20.பணக்காரங்க ஏழை வித்தியாசம் இருக்காது
21.வரவு செலவை பொய்யாக கணக்குகாட்டும் ஆடிட்டர் தொழில்லே இருக்காது எல்லாம் ஆன் லைனில் வருமான வரி கண்காணிப்பாளர் இருப்பர்
23.இனி அனைவருக்கும் வீடு சாத்தியமாகும்
24.அரசில் கட்சிக்கு தொண்டர் படையே இருக்காது
25. அரசியலுக்கு பணதிற்கு வராமல் உண்மையான தேச பணியாற்ற வருபவர்களுக்கு வழி பிறக்கும்
26. பொருளாதார குற்றங்கள் இருக்காது
27. காவல் நிலையத்தில் திருட்டு வழிப்பறி குற்றங்கள் இருக்காது
28.செயற்கையாக விலையேற்றம் செய்யும் பதுக்கல்கார்ர்கள் இருக்கமாட்டார்கள்
29. கன்டெய்னர் பணம் கடத்தல் இருக்காது அதை பிடிக்க தேர்தல் பறக்கும் படை இருக்காது
30. பணதிற்கு நாடு ஆண்ட அரசியல்வாதி இனி இருக்கமாட்டார்கள் ஓட்டுக்கு பணம் வழங்க முடியாது
31.பள்ளியில் கட்டணங்கள் இனி டொனேசனாக லட்சம் கருப்பாக வாங்க முடியாது
32.கல்வி கட்டணம் குறையும் எல்லாம் வங்கி மூலமே பீஸ் கட்ட வேண்டும்
33.கருப்பு பணத்தில் கோடிகளுக்கு விற்கப்படும் மெடிக்கள் மற்றும் இன்ஞினியர் படிப்பு சீட்டுகள் இனி அரசு விலையில் ஏழைக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும்
34.தனியார் மருத்துவ மனைகளில் டாக்டர்கள் போடுவது தான் பில் இது மறும்
35.இனி யார் கைகளிலும் பெரிய தொகையாக பணம் பணம் இருக்காது இனி அனைத்தும் வங்கி பறிமாற்றம் மூலமே அரசு அனுமதி அளிக்க இருக்கிறது.
36.சாமானிய மக்கள் இதை வரவேற்க வங்கியியல் வரிசையில் நிற்கிறார்கள் நல்ல அறிகுறி
37.பணக்காரன் வங்கிக்குள் நுழைய முடியவில்லை மக்கள் கூட்டம் . வரிசையில் நிற்க கர்வம் தடுக்கிறது. இன்னும் 45 நாட்களில் அவர்கள் கருப்பு பணம் காலி
38.இனி உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு போட்டி இருக்காது
39. அரசு பதவி புரமோசன் விலை பேசப்பட்டது
40. அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படும்
41. வெட்டியாக பேசி கொண்டிருந்தவர் வேலை தேட வேண்டும்
42. வீட்டுக்கு வாடகை குறையும்
43. திருமண மண்டபத்தில் வாடகை கருப்பாக லட்ச கணக்கில் வசூலிக்க முடியாது
44.விவசாயிக்கு உண்மையான விலை கிடைக்கும்
45.ரேசன் கடையில் ஏழைக்கு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட பொருள் கள்ள சந்தையில் விற்க முடியாது
46இனி அரசியல் சாக்கடை புனிதமாகும்
47.அனைத்து நிலங்களும் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மக்களுக்கு கிடைக்கும்
48.அரசியல் ஒரு சாக்கடை என ஒதுங்கிய நல்லவர்கள் இனி அரசியலுக்கு வந்து மக்களுக்காக சேவையாற்றும் வாய்ப்பு வந்துள்ளத
டிசம்பர் 30 க்கு பிறகு மொத்தத்தில் மக்களின் கையில் பெரிய தொகை பணமாக இருக்காது
பிறகு எப்படி DD , செக் , டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு Neft / RTGS என லட்சம் எல்லாம் வங்கிகள் பரிவர்த்தனைகளின் மூலம் மட்டுமே இருக்கும் நமக்கு பணமாக பாக்கட் மணி மட்டுமே குறைந்த அளவு வழங்கப்படும்
அதற்காகவே ₹500 ,₹1000 என்ற மெயின் பீசு முதலில் பிடிங்கியாச்சு இனி தூய்மையான பெரிய பணம் பரிமாற்றம் எல்லாம் வருமான வரி வளைத்தில் ஆன் லைனிலும் சுமார்ட் போனிலும டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மக்களுக்கு கிடைக்கும்
மக்களின் ஒவ்வொரு பண பரிவர்தனையும் வருமான வரி துறையின் கண்காப்பு வளையத்திலிருந்து தப்பாது
அடுத்து பினாமி சட்டம் வருகிறது சொத்துகளை காட்டி வரி கட்ட வாய்ப்பு கொடுத்தும் ஏமாற்றிய பணக்காரனுக்கு நிச்சயமாக சவுக்கடி கொடுக்கப்படும்
தேர்தலில் நிக்க சொத்து கணக்கு காட்டிய அரசியல்வாதிகள் அஅத்தனையும் பினாமி பெயரில் வைத்துவிட்டு எனக்கு சொந்தமாக கார் இல்லை வீடு இல்லை தோட்டம் இல்லை என் பெயரில் எதுவும் இல்லை என கப்சாவிட்ட அரசியல்வாதியும் அவர்களின் அறக்கட்டளையும் இனி காலி..
70 ஆண்டுகள் நாடாண்டு மக்கள் பணத்தை கொள்ளையடித்த காங்கிரஸ் மற்றும் கழகங்களின் நிலை என்ன
சோனியாவிடம் சொத்து இல்லையாம் கருணாநிதி ஸ்டான்லியிடம் சொந்தமாக கார் கூட இல்லையாம் ராகுல் காந்தி அம்மாவிடம் 2 லட்சம் கடனாக வாங்கிய பணம் மட்டும் உள்ளதாம், மக்களே அது இனி நிஜமாகும்.
டிசம்பர் 30 க்கு பிறகு அத்தனை அரசியலில் வியாதிகளும் நடு தெருவிற்கு வர போகிறார்கள்
GST மசோதா நடைமுறைக்கு வரும்போது அனைத்து பொருள்கள் விலை பாதியாக குறைந்து மக்களுக்கு தரமான பொருள்கள் கருப்பு பணம் இன்றி ஞாயமான விலைக்கு கிடைக்கும்
இது போல இன்னும் கணக்கில் வராத லட்சம் பிரச்சனைகளுக்கான தீர்வு ஒரே நாளில் வர இருக்கிறது
இன்னும் டிசம்பர் 30 வரை காத்திருங்கள், 2020 ல் இந்தியா வல்லரசு ஆக மாற மிகப்பெரும் மாற்றதிற்கு தன்னை தயார் படுத்திவிட்டது...
இப்போது எதிர்பவர்களின் குரல் மெல்ல அடங்கி
பாஜக மோடி பாஜக மோடி மோடி மோடி என்ற கோசம் அடுத்த தேர்தலில் மிக பலமாக ஒலிக்கும்
காந்தி கண்ட கனவு காங்கிரஸ் கலைந்து போகும் இப்போது அழிவது கருப்பு பணம் மட்டும் இல்லை கருப்பு அரசியல்வாதியும் தான்
இதை அதிகம் பகிருங்கள் நாமும் மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம்
I Support MODI Ji
👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍
Friday, 25 November 2016
அரசை ஆதரிப்போம் நமது தேசத்திற்காக ! நமது நன்மைக்காக !
இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களுக்கு சென்றிருக்கிறேன் . இந்தியாவின் தலை முதல் கால் வரை நான் கண்ட பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால் நட்சத்திர ஹோட்டல் , தனியார் மருத்துவமனை ,விமான நிலையம் இந்த மூன்று இடங்களைத்தவிர வேறு இடங்களில் கழிவறை சுத்தமாகவே இருக்காது .
இந்தியாவின் எந்த மூலைக்கு சென்றாலும் இது தான் நிலைமை .. சுத்தமில்லாத ,சுகாதாரமில்லாத கழிவறைகள் மட்டும்
இந்தியாவின் சாபக்கேடு . ஒவ்வொருவரும் நம்முடைய கடமையிலிருந்து எதோ ஒரு விதத்தில் தவறும் பொழுது தான் நாடு கடனாளி ஆகிறது.சுத்தம் சுகாதாரத்திற்கு அதிகம் செலவு செய்ய முடியாமல் போகிறது . கருப்பு பணம் பதுக்கல் லஞ்சம் , ஊழல் ஆகிய எல்லா வேலைகளுக்கும் நாம் உடந்தையாக இருக்கிறோம். நம் அளவிற்கு எல்லாம் சரியாக இருந்தால் போதும் என்று நினைக்கிறோம் .அதனால் மற்ற விஷயங்களில் பெரும் சிரமத்திற்கு உட்ப்படுகிறோம்
கொழுத்த பணம் வைத்திருப்பவர்களுக்கு இந்தியாவில் இருக்கும் எந்த சங்கடங்களும் பாதிப்பு ஏற்படுத்தாது. விமானத்தில் பறந்து , நட்சத்திர ஹோட்டலில் தங்குவதால் யாருக்கும் சாதாரண மக்கள் படும் சிரமம் தெரிய வாய்ப்பில்லை. கருப்பு பணம் சேர சேர ஒவ்வொருவரும் மக்களிடமிருந்து விலகி பெரிய கடவுளாக வளம் வர ஆரம்பிக்கிறார்கள் .
அரசு அவர்களை கட்டுப்படுத்த ஒரு நடவடிக்கை எடுக்கும் பொழுது அதனால் நமக்கும் சிறிது சிரமம் இருக்கத்தான் செய்யும் .சில குளறுபடிகளும் இருக்கலாம். ஏனெனில் இந்தியா உலகத்தில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது . இத்துணை பேர் இருக்கும் ஒரு நாட்டில் கிட்டதட்ட எல்லா மதத்தினரும் இருக்கும் நாட்டில் ஏகோபித்த ஆதரவுடன் ஒரு திட்டம் நிறைவேறும் என்று எதிர்பார்க்க முடியாது . எதிர்ப்பு இருக்க தான் செய்யும். ஆனால் Demonetisation நடவடிக்கையால்வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் யாருமே பாதிப்பு அடையவில்லை .பாதிப்பு எல்லாம் கருப்பு பணம் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே .
ஒவ்வொரு கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கும் பொது மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். நம்மிடம் மடியில் கணம் இல்லை அதனால் வழியில் பயம் எதற்கு. நாம் எதிர்ப்பு தெரிவித்தால் நம்முடைய இந்த சிறு எதிர்ப்பை பயன் படுத்தி கருப்பு முதலைகளுக்கு கருப்பு பணத்தை பதுக்கி வைக்க சாக்காக போய்விடும்.
மீண்டும் கழிவறை விஷயத்திற்கே வருகிறேன் . ஒரு கண்காட்சி , உயிரியல் பூங்கா , அருவி, கோயில் , பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ,அரசு அலுவலகம் ஆகிய பொது மக்கள் கூடும் இடங்களில் கழிவறை , மேலை நாடுகளில் இருப்பது போல் சுத்தமாக இருக்க வேண்டும் அதற்கு இந்தியாவை முதலில் சுத்தப்படுத்த வேண்டும். பணமதிப்பிறக்கம் நடவடிக்கைக்கும் கழிவறை சுத்தத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்பவர்களுக்கு ....உங்கள் மூளைக்கும் கிட்னிக்கு எந்த அளவு சம்மந்தம் இருக்கிறதோ அதே அளவு சம்மந்தம் கருப்பு பணம் ஒழிப்புக்கு கழிவறைக்கு இருக்கு . அரசை ஆதரிப்போம் நமது தேசத்திற்காக ! நமது நன்மைக்காக !
சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய வித்தியாசமான ஆய்வு
வாசித்து பாருங்கள் .... வியந்து போவீர்கள் .......
ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.
தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு. வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூதஉடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற
சிறப்புப் பெயரும் உண்டு. மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்; இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.
அகத்தியர், போகர், ஔவையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத
தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை. முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.
"தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும்
அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் பார்ப்போம் .அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும். மகான் ஸ்ரீமத்சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.
"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"
சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது
ஆகும். இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.
இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்
1.நெற்றி (பிரம்மந்திரா)
2.தொண்டைக் குழி (ஆங்ஞை)
3.மார்புக்குழி (விசுத்தி)
4.தொப்புள் குழி (மனிப்புரம்)
5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
6.மலக்குழி (மூலாதாரம்)
இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த சுழுமுனை புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப்பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் அழைப்பர். மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும். முருகன் கையிலுள்ள வேலும் இந்த
சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது. மருத்துவர்களின் லோகோவில் இடது
புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பினைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.இதைத்தான் கந்தகுருகவசத்தில் ஸ்ரீமத்
சத்குரு சாந்தானந்த சுவாமிகள் சொல்லுகிறார்.
"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"
எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த
சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழுமுனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான். ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன்
உள்ளான். இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்
"உள்ளொளியாய் இருந்து
உன்னில் அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி
உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி
எங்குமுனைக் காட்டிடுவான்"
சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என திட்ட வேண்டாம். ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும்
வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. ஆனால், மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
இறுதியாக ஒன்று கடவுள் ஒருவரேஅவர் எவராலும் பெறப்படவும் இல்லை. அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை. எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை. முருகன் என்பது மனிதன் இல்லை சத்தம் ஓசை சிவன் படைப்புக்களை சத்தமாகி முருகன் ஊடாகவே உருவாக்குகிறான் உருவாக்கி கொண்டு இருக்கிறான் அதனாலே ஓசையனசத்ததின் ஊடாக உருவாகும் தமிழ் மொழிக்குகடவுள் முருகன் என்றார் . எமது உடலில் இதயத்தில் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கிறது அது சத்தம் ஓசை முருகன் அந்த சத்தம் எமது இதையத்தில் இல்லை என்றால் உயிர் இறந்து விட்டது உயிர் இருந்தால் தான் படைப்பு உருவாகும் .
ஒரு மொழிக்கு ஓசை கொடுப்பதை என்றால் உலக அறிவான தகவல்களை ஆவனப்படுத்த வேண்டும் எனவே ஆவணப்படுத்தாத அறிவான தகவல் மனித ஆயுலுடன் முடிந்து போகும் எனவே எனவே என்னதான் ஓசை படைப்பாக இருந்தாலும் அதை ஆவணப்படுத்தாட்டி வெறும் ஓசையாக அதன் அர்த்தம் கருத்து தெரியாத வெறும் ஓசையாகவே உணர்வோம். எனவே ஆவணப்படுத்தும் எழுத்து வடிவத்தை
பிள்ளையார் என்று அழைத்தார்
அகத்தியர் & இராவணன் போன்ற மகாண்கள். சிவன் அணுத்துகள் atom , என்பதை உணர்ந்த அதந்தியர் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் சிவனை சிவசத்தியன சிவலிங்கத்தை வழிப்பட சிவ பக்தர்கள். முதல் தமிழ் சங்க தமிழ் மொழி ஓசை ஊடக உருவாக்க பட்டமையல் ஓசை முருகன் என்றனர் நடராசர் கையில் உள்ள உடுக்கு ஓசையை குறிக்கிறது. முருகனிடம் உள்ள வேல் மனித மூளைக்குல் இருக்கு செவ்வேல் குறிக்கும் அதவது pinnal இதில் இருந்துதான் மெலட்னோன் என்ற சுரப்பு இரவு சுரந்து உடலை சமநிலை சீர் செய்கிறது. இதை மூன்றாம் கண் என்றும் சொல்வார்கள். இதனாலே தான் சிவனின் மூன்றாம் கண்ணில் இருந்து முருகன் தோன்றினார்கள் என்றும் சொல்கிளார்கள் சிவன் மனித உடலில் தலையில் உருவாக்கி இருப்பது தான் செவ்வேல் இதை முருகனுக்கு சூரனை அழிக்க சக்தி கொடுத்தார் என்பதன் பொருள் அறியாமை இருளில் மனிதன் மிருகங்கள் போன்று வாழமல் மனித மூளையில் உள்ள செவ்வேலை பயன்படுத்தி அறியாமை என்ற சூரனை வதம் செய்து அறிவுடன் வாழ செல்லும் வரலாறு விந்து கட்டுதல் என்றொரு பயிற்சி நிலை யோகத்தின்கண் உள்ளதுதான், என்ற உண்மையும், அது சாதாரண மக்களுக்கு சொல்லப்பட்டதல்ல என்றும் உணர்வதுடன் அதன் தன்மையையும் உணர்ந்திடலாம்.
ஞானம் பெறுதலின் ஒரு படிநிலையே விந்து கட்டுதலாகும் என்றும் அதுவே முடிவானது அல்ல என்றும் அதை மூன்றாம் படி நிலையாகிய யோகநிலைதனை ஆறுமுகனார் அருளினால் பெற்றிட்ட யோகிகளால்தான் செய்திட இயலும் என்றும் அறியலாம். பெண்பாலிலுள்ள சுரோணிதமும், ஆண்பாலிலுள்ள சுக்கிலமும் சேர்ந்து கருத்தரித்து உடம்பும் உயிரும் உண்டாகிறது. தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடம்பும் தோன்றினாலும் தோன்றிய அந்த உடம்பும் உயிரும், நூறு ஆண்டுகள் வரை நட்புடன் இருந்து உடம்பும் உயிரும் பிரியாமல் நட்போடு வாழ்ந்தாலும் ஒரு காலத்தில் எப்படியாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய் விடுகிறது. இதுவே இயற்கையின் நியதியாகும். பரு தேகமான ஆணும், பெண்ணும் கூடினால், உயிரும் பிரிந்துப் போகக்கூடிய பரு உடம்பும் உண்டாகிறது. ஆனால் சூட்சும தேகத்தை உண்டாக்கவல்ல இடது கலையாகிய பெண்ணும், வலது கலையாகிய ஆணும் சேர்ந்தால் சூட்சும தேகம் உண்டாகும்.
ஆனால் இடது கலையும் வலது கலையும் ஒருபோதும் சாதாரணமாக ஒன்று சேராது. ஆனால் ஒன்று சேராத இடது கலையையும் வலது கலையாகிய சூரிய கலையையும் சுழிமுனையாகிய புருவ மத்தியில் ஒன்று சேர்த்தால் அழிகின்ற பரு உடம்பும் அழியாது, அழியாத சூட்சும தேகமும் தோன்றும், உயிரும் தோன்றி எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் கலந்து என்றும் அழிவற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்று மாறாத இளமை கொண்ட ஒளிதேகமாக மாறி விடும். இந்த மாபெரும் இரகசியத்தை முதலில் அறிந்த முதுபெரும் தலைவன் முருகப்பெருமான் தான் பெற்ற அந்த பேரின்பத்தை தனது சீடனான அகத்தியம் பெருமானைச் சார்ந்து சேராத இடது வலது கலைகளை சுழிமுனையில் ஒடுக்கி சேர்ந்திட செய்து அகத்தியம் பெருமானையும் மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்தார் என்பதையும் அறியலாம். cont ........
Excuse
Note: Dear Friends….Excuse any mistake in my writing