Thursday, 29 January 2015

1 லட்சம் பணியாளர்களை ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்கிறதா ஐபிஎம்?


ஐடி ஊழியர்கள் அச்சம்
டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களை வேலையை விட்டு தூக்கியடித்த நிலையில், மற்றொரு முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான, ஐபிஎம் நிறுவனம் 1 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும்

 
1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.
4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.
6. போகும்போதா வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண்டாம்.
7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.
8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.
10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
11. சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.
12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.
13. ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.
14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.
15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.
16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.
17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும்.
18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.
19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.
20. தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.
21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.
22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.
23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.
24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.
25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.
26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.
27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது.
28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.
29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.
30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.
31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு, மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.
32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழவகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை, அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.
33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.
34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.
35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.
36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.
37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.
38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.
39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.
40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.
41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.
42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.
43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதியான தரிசனம் கிடைக்கும்.
44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.
45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.
46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.
47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.
48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.
49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.
50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம். சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.
51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.
52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது.
53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.
54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.
55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.
56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக்கூடாது.
57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத்துடன் பிரதட்சணம் வருவது தவறு.
59. ஒரு கையில் விபூதி குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌயமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.
60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.
61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.
62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.
63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.
64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.
65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.
66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.
67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.
68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.
69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை.
70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.
71. சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.
72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.
73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.
74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.
75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.
76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.
77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.
78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.
79. செல்போன்களைத் தவிர்க்கவும்.
80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.
81. சங்கல்பம் மிக முக்கியம்.
82. கோபுர தரிசனம் கோடி நன்மை.
83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.
84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.
85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.
86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.
87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.
88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.
89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.
90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3. விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.
91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.
92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள்.
93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதிற்குள் செய்து விடுங்கள்.
94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.
95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.
96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ்திரம், மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.
98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறையான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.
99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.
100. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.

வைகுண்ட ஏகாதசி

 
"காயத்ரிக்கு நிகரான ம்ந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; காசியை மிஞ்சிய தீர்த்தமுமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமுமில்லை!" என்பது ஆன்றோரின் அருள்வாக்கு.
கிருஷ்ண பரமாத்மா ‘மாதங்களில் தான் மார்கழியாய் இருப்பேன்’ என்கிறார். அதனால் வைணவத் தலங்களில் மார்கழி மாதத்திற்கு என தனிச்சிறப்பு உண்டு. உலகிற்கெல்லாம் படியளக்கும் பரந்தாமன் வீற்றிருக்கும் வைகுண்டத்தின் கதவுகள் திறந்து வைகுண்டநாதனின் தரிசனம் கிடைப்பதும் இம்மாதத்தில்தான் என்பதால் மார்கழி மாதம் வைணவர்களுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகிறது. அதில் தை முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாதங்களும் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாதங்களும் ஒரு இரவு என்றும் கணக்கிடப்படுகிறது. மார்கழி மாதத்தில் அதாவது தேவர்களின் இருட்டுப் பொழுதில் உஷக் காலம் எனும் அதிகாலை நேரத்தில் நான்கு மணி முதல் ஆறு மணி வரை உள்ள முகூர்த்த வேளையில் வைகுந்த வாசல் திறக்கப்படுகின்றது. அச்சமயத்தில் ஆலயங்களில் திருப்பள்ளியெழுச்சியும், திருப்பாவையும் படித்து மகாவிஷ்ணுவிற்கு பொங்கல் பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம். தேவர்களின் அதிகாலை நேரத்தில் வைகுந்த வாசல்கள் திறந்தே இருந்தாலும் அரங்கன் அவ்வழியாக வெளியே வந்து தரிசனம் தரும் நாள் வைகுண்ட ஏகாதசி. தெற்கே பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கன் அதிகாலையில் சொர்க்கவாசல் எனும் வடக்கு வாசல் வழியாக வருகின்றார். இந்த வைபவத்தை தாம் நாம் சொர்க்க வாசல் திறப்பு விழாவாக கொண்டாடுகின்றோம். ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருப்போர் வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் ஏகாதசி விரதம் இருக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் அனுஷ்டிப்பது மேலானப் பலன்களைத் தரும்.
அதெல்லாம் சரி. ஏகாதசிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்புகள் என்று கேட்கிறீர்களா? ஒரு இலையை அசைப்பதற்கு கூட ஆயிரம் அர்த்தங்களை வைத்திருக்கும் அந்த பரம்பொருள் ஏகாதசி விரதத்திற்கு தகுந்த காரணம் இல்லாமல் வைத்திருப்பாரா என்ன? முரன் என்ற அசுரன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அதனால் விஷ்ணு முரனுடன் போரிட்டு அவனது படைகளை அழித்தார். பின்னர் ஒரு குகையில் சென்று படுத்துக் கொண்டு ஓய்வெடுக்கலானார். அச்சமயம் அவரைக் கண்ட முரன் பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, அவர் தன் உடலிலிருக்கும் ஆற்றல் சக்தியை ஒரு பெண் வடிவத்தில் தோற்று வித்தார். அவள் முரனுடன் போரிட்டு அவனை வென்றாள். முரனை வென்ற பெண்ணுக்கு "ஏகாதசி' என்று அரங்கன் பெயர் சூட்டினார். அவள் அசுரனை வென்ற நாள் ஏகாதசி என அழைக்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப் பதவி அளிப்பதாகவும் வரமளித்தார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சக்தி இரவெல்லாம் தூங்காமல் இருந்து விழிப்புடன் செயலாற்றி பரந்தாமனில் அருளைப் பெற்றதுப் போல நாமும் ஏகாதசித் திருநாளில் இரவெல்லாம் கண்விழித்து அந்த பரம்பொருளை தியானித்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.

குழந்தை வரம் பெற உதவும் ஆலயங்களும்,வழிபாட்டு முறைகளும்

 
சிவபுரம் என்றழைக்கப்படும் " திருச்சிவபுரம் "
திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பாடப் பெற்ற இத் தலம் மகப் பேறு அருளும் தேவார திருத்தலமாகும். சிவபுரத்தில் வீற்றிருந்து அருளும், " சிங்காரவல்லி, ஆர்யாம்பாள், பெரியநாயகி " என்றெல்லாம் அழைக்கப்படும் அம்பிகைக்கு, வெள்ளிக் கிழமைகள் தோறும், தன்னால் இயன்ற, அளவு முறையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் பெறுவர். இத் தலம், புத்திர நோய்கள் அகற்றும் தலமாகவும் விளங்குகிறது. குழந்தைகள் சம்பந்தபட்ட நோய்கள், இத் தல அம்மனை வழிபடுவதன் மூலம் முற்றிலும் நீங்குகின்றன. ஆதி சங்கரரின் பூர்வீகமான, இத் தலத்தில், பூமியின் கீழ் ஒரு ஒரு அடிக்கும் ஒரு சிவ லிங்கம் உள்ளதாக ஐதீகம். இத் தலம், கும்பகோணத்தில் இருந்து, சாக்கோட்டை வழியே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது
ஆதி கும்பேஸ்வரர் திருக் கோயில் " நவநீத கணபதி"
காமதேனு தன் சாபம் நீங்க, இத் தலத்தில் விநாயகருக்கு வெண்ணெய் பூசி வழிபட்டதால் இவர் " வெண்ணெய் கணபதி " ஆனார். காமதேனு தன் கால் குளம்பால் உருவாக்கிய " குர " தீர்த்தத்தில் நீராடி, இந்த நவநீத கணபதிக்கு வெண்ணெய் சார்த்தி வழிபட்டு, பின்னர் " மந்திர பீடேஸ்வரியாய் " அமர்ந்திருக்கும் மங்களநாயகியையும், கிராத மூர்த்தியையும் (கிராத மூர்தி சந்நதி அருகிலேயே உள்ளது). வணங்கினால் புத்திர பக்கியம் கிடைக்கும். சகல பாவங்களும் நீங்கும். கும்பகோணத்தின் பெருமைகளில் ஒன்றான, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இத் திருக்கோயில், நகரின் மையப் பகுதியிலேயே அமைந்துள்ளது.
காசி விஸ்வநாதர் கோயில் " நவ கன்னியர் வழிபாடு "
நவ நதிகளும், தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் திருக்கோயில் நவ கன்னியர் வழிபாட்டுக்கு சிறந்த தலம். 12 வெள்ளிக் கிழமைகள் விரதமிருந்து, வாசனை மலர்கள் , எண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பால் சோறு, தேங்காய், வாழைப்பழம் போன்றவை வைத்து நவ கன்னியரை வணங்கி, முடிந்த அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் மகப் பேறு இல்லாதோர், நன் மக்களைப் பெறுவர். திருமணமாகாத பெண்களுக்கு, விரைவில் மணம் கைகூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். தீரா நோய் கொண்டோர், நோயிலிருந்து விடுபடுவர். பருவம் அடையாத பெண்கள் பூப்பெய்துவர்.
மகப் பேறு அருளும் " பாணபுரீஸ்வரர் திருக்கோயில் "
பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தை, கிராத உரு கொண்டு முக்கண்ணன் அம்பெய்ததால், கும்பத்திலிருந்த பல மங்கள பொருட்கள் சுயம்பு லிங்கங்களாக உருவெடுத்து, பல சிவ தலங்கள் தோன்றின. கயிலை நாதன், அம்பெய்யும் பொருட்டு நின்ற இடம் பாணதுறையானது. தல நாயகன் " பாணபுரீஸ்வரரானார் ". இத் தலத்தில், சோமகமலாம்பாள் சமேதராய் வீற்றிருக்கும் நாதனை வழிபட்டால் புத்திர பேறு கிட்டும். கடும் வியாதிகள் நீங்கும். சூரசேனன் எனும் வங்க தேச மன்னன் ஒருவன், தன் மனைவி காந்திமதியுடன் இத் தல ஈஸ்வரனை வழிபட்ட்தால், தீராத தன் " குஷ்ட நோய் " நீங்கி, புத்திரப் பேறும் பெற்றான். இத் தலம், நகருக்கு பெருமை சேர்க்கும் புண்ணிய தீர்த்தமாம், மகாமகக் குளக் கரையில் அமைந்துள்ளது
ஆதிஷேசன் மீது பள்ளி கொண்டுள்ள " குழந்தை கிருஷ்ணன் ".
3 வது திவ்ய தேசமாக விளங்கும் சாரங்கபாணி கோயிலின் கருவறையில், ஆதிஷேசன் மீது பள்ளி கொண்டுள்ள குழந்தை உருவ கிருஷ்ணன் விக்கிரகம் ஒன்று உள்ளது. நீண்ட நாட்களாய் குழந்தைச் செல்வம் இல்லாதோர், மகப் பேறு வேண்டுவோர், இந்த கிருஷ்ண விக்கிரகத்தை, தங்கள் மடியில் வைத்து, பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள மாலவனை எண்ணி மனமுருக வேண்டினால், குழந்தைப் பேறு நிச்சயம். தம்பதியர் சமேதராய் வந்து வேண்டுவது மிகச் சிறப்பு.
கரு வளர்க்கும் " கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி "
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருக் கோயில், கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் மருதாநல்லூர் என்ற கிராமத்தை அடுத்து உள்ளது. இந்த அம்மன் சுயம்புவாக புற்று மண்ணிலிருந்து தோன்றியதால், சாம்பிராணித் தைலமும், புணுகும் மட்டுமே சார்த்தப்படுகிறது. பல வருடங்களாக குழந்தை இல்லாதோர், இங்கு வந்து, அம்மனின் முன் உள்ள வாசற்படியை நெய் கொண்டு மெழுகி வழிபடவேண்டும். பிரசாதமாக தரப்படும் மஞ்சளை, பெண்கள் தினந்தோறும் பூசி குளித்திட மகப் பேறு கிடைக்கும். கல்யாண வைபவங்கள் நடைபெறவும், இத் தல நாயகி அருளுகிறாள்.
நின்ற நிலையில் வீற்றிருக்கும் " திருமணஞ்சேரி ராகு பகவான் "
கும்பகோணத்தை அடுத்துள்ள மாயவரத்தை அடுத்துள்ளது " மணவரம் அருளும் திருமணஞ்சேரி ". கல்யாணப் பேறு அளிப்பது " கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரர் " என்றால், இத் தலத்தில் மகப் பேறு அளிப்பது, தனி சந்நதி கொண்டு, நின்ற நிலயில், அருள்பாலிக்கும் " ராகு பகவான் ". அமாவாசை தோறும் இங்கு, குழந்தைப் பேறு வேண்டி பூஜைகளும், அர்ச்சனைகளும் நடைபெறுகிறது. தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டு, தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் ஆகியவை அர்ச்சனை தட்டில் திரும்ப தரப்படும். பிரசாதமாக தரப்படும், பாயாசத்தையும், திரும்ப தரப்படும் தேங்காயையும் உட்கொள்ள வேண்டும். எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து வெல்லசர்க்கரை சேர்த்து உட்கொண்டால் மகப் பேறு நிச்சயம். வழிபாட்டை மூன்று அல்லது ஐந்து அமாவாசைகள் செய்வது மிகச் சிறந்த பலன் அளிக்கும்.
மகப்பேறு தரும் " தலைச்சங்காடு சங்கராண்யேஸ்வரர் "
திருக்கடையூரிலிருந்து சும்மர் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, சங்கு வடிவில் உள்ள " தலைச்சங்காடு ". சிவன், பிரம்மன், விஷ்ணு என மும்மூர்த்திகளும் அருளும் தலம் இது. திருமாலுக்கு சங்கு கொடுத்ததால் இந்த ஈசன் " சங்கரான்யேஸ்வரர் " ஆனார் . அம்பிகை " சௌந்தரநாயகி அம்மன் ". பௌர்ணமி தோறும், இந்த அம்மனுக்கு, குழந்தை வரம் வேண்டி. சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சார்த்தப்பட்ட சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த சந்தான பிரசாதத்தை சிறிது உண்ண குழந்தைப் பேறு கிடைக்கும். குழந்தை வரம் வேண்டும் பெண்கள், வழிபாட்டின்போது, பௌர்ணமி விரதம் இருப்பது நல்ல பயன் அளிக்கும்.
கரு தந்து காத்திடும் " திருக்கருகாவூர் கர்பரட்சாம்பிகை "
கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் பாபநாசம் அருகே உள்ளது, கருச் சிதைவை தடுத்து , கருவினை நன்முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் " கர்பரட்சாம்பிகை " திருக்கோயில். இங்கு வசித்து வந்த தனது பக்தரான, முனிவர் ஒருவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, சிதைந்த அவர் மனைவியின் கருவை காத்து, சுகப் பிரசவம் அருளியவள் இந்த அம்பிகை. திருமணத் தடை நீக்கி, மணவரமும், குழந்தை பேறும் அருள்பவள். நீண்ட நாட்கள் திருமணமாகாத பெண்களும், பல ஆண்டுகளாக குழந்தை செல்வமற்ற பெண்களும் இத் தலம் வந்து, அம்பாள் சந்நதியில் நெய் கொண்டு மெழுகி கோலம் இட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும்.இங்கு, அம்பாளின் திருவடியில் வைத்து அர்ச்சித்து தரப்படும் " பசுநெய் " பிரசாதத்தை 48 நாட்கள் தம்பதியர் உட்கொள்ள கரு உண்டாகும். அம்மனுக்கு சார்த்தி தரப்படும் " விளக்கெண்ணெய் " பிரசாதத்தை, கருவுற்ற பெண்கள் தங்கள் வயிற்றில் தேய்த்து வந்தால் சுகப்பிரசவம் பெறுவர்.புற்று மண்ணினால் ஆன, இத் தல லிங்கத்தை புனுகு சார்த்தி வழிபட, தீரா நோய் அனைத்தும் தீர்கிறது.திருமண வரம் தந்து, கரு கொடுத்து, அதை நல்ல முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் இந்த அம்பிகையும், தீரா நோய் தீர்க்கும் ஈசனும் வெகு நிச்சயமாக தரிசிக்கப்பட வேண்டியவர்கள்.
கதிராமங்கலம் " வனதுர்க்கை "
கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் குத்தாலம் என்ற சிற்றூரின் அருகில் உள்ளது, கம்பரும் அகத்தியரும் வழிபட்ட வனதுர்க்கை குடிகொண்டுள்ள " கதிராமங்கலம் ". ராகு கால வேளை என்பது, ராகு பகவான் துர்க்கையை வழிபடும் நேரம், எனவே ராகு திசை வழிபாட்டிற்க்கான சிறந்த நேரம் ராகு காலமே. இந்த துர்க்கையை எலுமிச்சம்பழத் தோலில் நெய் விளக்கேற்றி, எலுமிச்சம் பழ மாலை சார்த்தி 9,11 அல்லது 21 வாரங்கள் வழிபட " புத்திர பாக்கியம் " கிட்டும் என்பது நிச்சயம்.
தஞ்சாவூர் மேல வீதி " சங்கர நாராயணன் "
கரிகால் சோழனின் வழி வந்த, பீம சோழ மன்னனால் கட்டப்பட்ட இந்த திருக்கோயில் சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்துவது. வலப்புறம் பார்வதியையும், இடப் பக்கம் லஷ்மியையும் கொண்டு 5 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இத் தல மூர்த்தியின் சிலை சிவனையும், விஷ்ணுவையும் ஒருங்கே கொண்டது. இத் தலம் " குழந்தைப் பேறு அருளும் " புண்ணிய ஷேத்திரமாக விளங்குகிறது.
குழந்தை செல்வம் பெற " திருவெண்காடு"

நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாத தம்பதியர் இத் தலத்தில் உள்ள முக்குளத்தில் நீராடி இறைவனை தரிசனம் செய்தால் குழந்தைச் செல்வம் பெறுவர். இத் திருத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அச்சுதகளப்பாளர் என்னும் சிவனடியாருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. 
ஒரு நாள் அவர், திருஞான சம்பந்தரின் திருவெண்காட்டு பதிகத்தை படிக்க, அதில் கூறியுள்ளாவாறு திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள சூரிய, சோம மற்றும் அக்னி என்ற மூன்று குளங்களிலும் நீராடி பரம்பொருளை வழிபட, அவர் வேண்டுதளுக்கிணங்க பெருமானும் குழந்தைச் செல்வத்தை அளித்தார். அக் குழந்தைதான், "சிவஞானபோதம்" எனும் பன்னிரு சூத்திரத்தை தந்த "மெய்க்கண்டார்" என்ற சிவஞான சித்தர். குழந்தை செல்வம் பெற விரும்புபவர்கள், திருவெண்காடு சென்று அங்குள்ள முக் குளங்களிலும் நீராடி சிவ பெருமானை வழிபட வேண்டும். தினமும் காலை வேளைகளில் பசுவிற்கு ஒரு பிடி புல் அல்லது பழம் அளிப்பது மேலும் சிறப்பு.

தீபமேற்றும் எண்ணெயின் பலன்கள்

 
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து

திருமணங்களில் முக்கியச் சடங்கு “அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது”. இதில் அருந்ததி யார்? நாம் ஏன் அருந்ததியை பார்க்க வேண்டும்? என்ற கேள்விக்கு விடை தேடலாம்…. ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் மிகச்சிறந்த “பிரம்மரிசிகள்”(முனிவர்கள்) ஏழுபேரும் (சப்த-_ஏழு) வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள். ஏழு நட்சத்திரங்களில் ஆறாவதாக இருப்பவர் (நட்சத்திரம்) வசிஷ்டர். இவரின் மனைவிதான் அருந்ததி. வசிஷ்டர் அருந்ததிக்குமான தனிச்சிறப்பு உண்டு. என்னவென்றால் மற்ற ரிஷிகள் சபலத்தால் ரம்பா, மேனகா, ஊர்வசி போன்ற வானதேவதைகளிடம் நிலை தடுமாறியவர்கள். இவர்களின் மனைவிமார்களும் தேவேந்திரனைப் பார்த்து தன்னிலை மறந்தவர்கள். இதில் வசிஷ்டரும், அருந்ததியும் விதிவிலக்கானவர்கள். எனவே அவர்கள் இணைந்தே இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து வாழ்க்கையில் இணைபிரியாது வாழவேண்டும் என்பது ஒரு புராணக்கதை, இரவு நேரத்தில் வடக்கு வானில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று சப்தரிசி மண்டலம்”. இந்த நட்சத்திரத் தொகுதிக்கு (தொகுதி என்பது நம் கண்களுக்கு தொகுப்பாக தெரிகிறது என்பதால் மட்டுமே. உண்மையில் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைவுகளில் உள்ளவை) ஒவ்வொரு நாட்டிலும் வேறுவேறு பெயர்கள் உண்டு. உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறான வடிவங்களில் தெரிவதால் பெரும்கரண்டி, கலப்பை என மேலைநாடுகளில் அழைப்பர். இந்தியாவில் பொதுவாக இதனை சப்தரிசி (ஏழு முனிவர்கள்)என அழைக்கின்றனர். இதில் உள்ள ஏழு நட்சத்திரங்களுக்கும் இந்தியாவில் ஏழு முனிவர்களின் பெயர்கள் உண்டு. அவை கிரது, புலஹ, புலஸ்த்ய, அத்ரி, அங்கிரஸ், வசிஷிட, மரீசி என்பனவாகும். இந்த ஏழு நட்சத்திரங்களில் ஆறாவதாக உள்ள வசிஷ்ட நட்சத்திரத்தின் அருகில் சற்று கூர்ந்து கவனித்தால் மங்கலான வெளிச்சத்தில் தெரிவதுதான் அருந்ததி நட்சத்திரம். இவை இரண்டுக்குமான விஞ்ஞானப் பெயரும் உண்டு. வசிஷ்ட நட்சத்திரம் மிஸார் எனவும், அருந்ததி அல்கோர் எனவும் அழைக்கப்படுகிறது. வசிஷ்டரும், அருந்ததியும் இரட்டை நட்சத்திரங்கள் அல்ல. ஆனால் ஒவ்வொன்றும் தனித்தனியே இரட்டை நட்சத்திரங்கள். அதிலும் மிஸார் என அழைக்கப்படும் வசிஷ்ட நட்சத்திரம்தான் வானவியல் வரலாற்றில் முதலில் கண்டுபிடிக்கப்ட்ட இரட்டை நட்சத்திரம். 35,000 மில்லியன் மைல்கள் இடைவெளியில் மிஸார்_ எ,மிஸார்_பி என்ற இருநட்சத்திரங்களும் ஒற்றை ஒன்று சுற்றிக் கொள்கின்றன. சப்தரிசி மண்டலத்தில் உள்ள ஏழு நட்சத்திரங்களும் ஒரே தன்மை உள்ளவை அல்ல. துபே, அல்கெய்ட், மிஸார் மேராக், ஃபெக்டா, மெக்ரஸ்,வரிசையில் ஒன்றைவிட ஒன்று மங்கலானது. துபே சற்று ஆரஞ்சு நிறம் கொண்ட 5000 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்டதாகும். மற்றவை வெண்மை நிறமுடைய 18,000 டிகிரிக்கும் மேலான வெப்பம் உள்ளவை. சப்தரிசி மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் வெவ்வேறான திசைகளில் அதிவேகமாக பயணம் செய்கின்றன. அதனால் சப்தரிசி மண்டலம் தற்போதுள்ள தோற்றத்தில் ஒருலட்சம் ஆண்டுகளுக்கு முன்னிருந்ததில்லை. ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு பின் தற்போதைய தோற்றத்தில் இருக்கபோவதில்லை.(படம் 1ல் சப்தரிசிமண்டலத்தின் முன்று நிலைகளும் காட்டப்பட்டுள்ளது. முதல் நிலை 1லட்சம் ஆண்களுக்கு முந்தையது, நடுவில் இருப்பது தற்போதைய நிலை, அடுத்ததாக இருப்பது 1லட்சம் ஆண்டுகளுக்கு பின் ஏற்படப் போகும் நிலை) சப்தரிசி மண்டலத்தின் முதல் ,இரண்டாவது நட்சத்திரமான துபே, மெராக்கும் காட்டிகள்” என அழைக்கப்படுகின்றன. ஏன் என்றால் இந்த இரு நட்சத்திரங்களிலிருந்து அமையும் கற்பனைக்கோடு தற்போதுள்ள துருவ நட்சத்திரமான போலாரிஸ்க்கை காட்டும். (இதற்கான விளக்கப் படம் 2)பூமியின் தற்சுழற்சி அச்சு தற்போது இதனை நோக்கித் தான் அமைந்துள்ளது. இதனால் மற்ற நட்சத்திரங்கள் பூமியின் நகர்வுக்கு ஏற்ப இடம்மாறினாலும் துருவநட்சத்திரம் ஒரே இடத்தில் தான் இருக்கும். அருந்ததி – ஒரு குறியீடு. முற்காலங்களில் அரசர்களுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள் (தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள்) இருந்தாக புராணங்கள் கதை கூறுகின்றன‌. இது தவிர போரின் வெற்றியாக பிறன்மனைவி கவர்தல்(எதிரியின் மனைவியை கவர்ந்து வருதல்) என்பதை சங்ககாலப் பாடல்களில் கூறப்படும் செய்தி. அருந்ததியைப் பார்க்கும் பழக்கம் எப்பொழுது ஏற்பட்டது என்பது தனியான ஆய்வுக்குரியது. ராமாயணத்தில் ராமனும், சீதையும் லட்சிய தம்பதிகளாக சொல்லப்படும் கதையும், சிலப்பதிகாரத்தில் முறைதவறிய கணவனை திருத்தி கணவனுக்காக மதுரையை எரித்த கண்ணகி, கோவலன் கதைகளும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதியை நிலைநாட்டுவதற்காக வரலாறு நெடுக தனிச்சொத்துடமை கருத்தாக்கத்தை உருவாக்க சொல்லப்பட்டு வரும் கதைகளாகும். திருமணத்தின் போது நல்லநாள், பிறந்த நட்சத்திரங்களின் பொருத்தம், நல்ல நேரம், ஜாதகப்பெருத்தம் பார்பதைவிட தம்பதிகளின் மனப்பொருத்தம், மருத்துவ ரீதியான சோதனைகள் பார்ப்பது தம்பதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.

குழந்தைகள் படிப்பில் முன்னேற இந்த மந்திரம் கூறி வழிபட வேண்டும்

 
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவான வார்த்தைகள் தான் முதல் மந்திரம். குழந்தைகளின் தன்னம்பிக்கை வளர கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லிக் கொடுங்கள்.
""சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா''

திருஷ்டி பரிகாரங்கள்


கல்லடி - கண்ணடி “கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. திருஷ்டி, மனிதர்களுக்கு மட்டும் அல்ல செடி, கொடி மரங்களுக்கும் உண்டு. 
ஒரு மாந்தோப்பில் ஒரு மரத்தில் மாங்காய் கொத்து கொத்தாக காய்த்து தொங்கியது. அந்த வழியாக சென்ற ஒருவனின் பொறாமை பார்வை அதன்மீது பட்டது. ஒரு சில தினங்களிலே நன்றாக இருந்த மரம் அதன் செழிப்பை இழந்து, காய்களில் ஒருவித நோய் தாக்கி கீழே உதிர்ந்து விழுந்தன. அதே நேரத்தில் தோப்பிற்குள் இருந்த மற்ற மரங்கள் நன்றாக இருந்தன. இதைத்தான் கண் பார்வை தோஷம் என்பார்கள். கல்லால் அடித்து இருந்தால் இரண்டு, மூன்று மாங்காய்கள்தான் சேதமடைந்து இருக்கும். ஆனால் கண்ணடி பட்டதால் முழு மரத்துக்கும் சேதாரமாகி விட்டது.
ஆரத்தி, திலகம்: விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.
வாழை மரம்: விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.
வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்: வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.
உப்புக்குளியல்: வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.
எலுமிச்சம்பழம்: வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.
கடல் நீர்: வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.
திதிகள்: அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகினால்


மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால்,வெளியிலிருந்து வரும், தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது.நாம் வெளியே எங்கே சென்றாலும்,அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவிப் படர்ந்துள்ளது. அவைகள் நம் பாதங்களில் பட்டவுடன், நமது உடலில்
சேர்கின்றது அந்த உணர்வின் வலிமையை நுகர்ந்தால், நமக்குள்
அது வலிமை பெறுகின்றது.விஷத்தின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தாலும்,வாசனையுள்ள சாணத்தின் மீது நமது பாதம் பட்டபின்,நமக்குள் விஷத்தை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம்.
ஏனென்றால், மாடு விஷத்தின் தன்மையைத் தன் உடலாக்கியபின்,
விஷத்தை நீக்கிய நல்ல உணர்வின் தன்மையாக, மாட்டின் சாணம்
வெளிப்படுகின்றது. ஆகவே,விஷத்தை ஒடுக்கும் வல்லமை மாட்டின்
சாணத்திற்கு உண்டு.ஆகையால், ஞானிகள் “மாட்டின் சாணத்தை வீட்டில் தெளி” என்றார்கள்.மாட்டுச் சாணத்தை வீட்டில்
மெழுகினால், நம்மால் வெளியிடப்பட்டு, வீட்டில் பதிந்துள்ள
சங்கடம், சலிப்பு, வேதனை, போன்ற உணர்வுகளை அது கொல்கின்றது.
2. எந்த எண்ணத்துடன் கோலம் போடவேண்டும்? அதே மாதிரி வீடுகளில் கோலம் போடுவார்கள். இது சாஸ்திரங்கள் நமக்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறை. கோலம் எதற்காகப்போடுகிறார்கள்? பல புள்ளிகளை வைத்து இணைத்துப்பார்க்கிறார்கள்.கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள் காந்தப் புலன்கள் கொண்டது. காந்தப்
புலன்கள் கொண்ட, கோலப்பொடியைக் கொண்டு கோலமிடும் பொழுது, நாம் எண்ணுகின்ற உணர்வுகள், கோலப்பொடியில் கலந்து விடுகின்றது.
வீட்டில் வெறுப்பாக இருப்பார்கள். சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆக, இந்த வெறுப்பின் உணர்வுடன், கோலப்பொடியைக் கையில் எடுத்தோம் என்றால், அதிலிருக்கும் காந்த
சக்தி நமது வெறுப்பின் உணர்வை அது கவர்ந்து கொள்ளும்.
நாம் நமது வீட்டில் கோலப்பொடி வைத்திருக்கிறோம். மற்ற
எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம். ஆனால், மாமியார் மீது வெறுப்பு, மாமனார் மீது வெறுப்பு, கணவர் மீது வெறுப்பு என்று மனதில்
வெறுப்பு கொண்டு, புள்ளி வைத்தால் எப்படியிருக்கும்? இந்த உணர்வுடன் கோலமிடத் தொடங்கினால், என்னாகும்? அது ஒழுங்காக வராது.அழித்து அழித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் சந்தோசமாக இருப்பவர்கள், ஒரு புள்ளியை வைத்தால்,
தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக்கொண்டே போவார்கள். ஆக, இதையெல்லாம் மாற்றியமைப்பதற்காக தன் குடும்பத்தின் மீது, பற்றும்
பாசமும் கொள்ளும் பொழுது,மகிழ்ச்சியான உணர்வின் தன்மையை உருவாக்கும் ஆற்றல் வருகின்றது.குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.ஒன்று சேர்ந்து வாழவேண்டும்
என்று எண்ணி கோலப் பொடியை எடுத்து,புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது, நம்முடைய நிலைகளும் ஒன்றுபடும் தன்மை வருகின்றது.ஆக, நமக்குள் வேற்றுமை இல்லாத நிலைகள் கொண்டு, அனைவரையும் அரவணைக்கும் தன்மை வர வேண்டுமென்ற எண்ணத்தால்,நமது குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் வரவேண்டும்,
இணைந்து வாழும் சக்தி பெறவேண்டும்என்ற உணர்வுகளை எண்ணித்தான்,இங்கு கோலமிட வேண்டும்.ஆக, நம் முன்னோரான சித்தபெருமக்கள் வகுத்த அறிவியல் தத்துவங்கள்
பொய்யல்ல. நாம் தெளிவாக இதையெல்லாம் தெரிந்து அந்த
ஞானிகள் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து வாழ்வோம்

வீட்டு வாசல்கள் எப்படி இருக்க வேண்டும்

தலைவாசல் உயரமானதாகவும் அகலமானதாகவும் அதைவிட சின்னதாக அடுத்த வாசலும் அதைவிட சின்னதாக அதற்கு அடுத்த வாசலும் இப்படியாக கடைசியில் பின்வாசல் முன்னதை காட்டிலும் சின்னதாக வைக்க வேண்டும் தலைவாசல் மற்றும் பின் வாசல்களில் அமைக்கப்படும் நிலைகளின் கீழ் பகுதியில் குறுக்குச் சட்டம் வைக்க வேண்டும் நா...ம வீடு கட்டும்போது கல், மண், சிமென்ட், மரம் போன்றவை களை பயன்படுத்து கிறோம் இவைகள் பழைய வீட்டில் இருந்து கழித்த தாகவோ அல்லது வேறு நபரிடம் மிச்சமானதாகவோ இருக்கக் கூடாது.நமது வீட்டின் அமைப்பு வாஸ்து சாஸ்திரப்படி உள்ளதா பாகம்1ஜன்னல் ஏன் ஈசானிய முலையில் வைக்க வேண்டும் ?வடகிழக்கு பருவ காற்று தென்மேற்கு பருவகாற்று இவைகளை கருத்தில் கொண்டு வடகிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகளில் ஜன்னல் வைக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொ்லப்படுகிறது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில்தான் காற்று அதிகமாகக் கிடைக்கிறது. அதனால் வடகிழக்கு பகுதியில் ஜன்னல் வைப்பதுதான் நல்லது இதனால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பபர்கள். இதனால்தான் நமது முன்னோர்கள் பூஜை அறையையும் முதியோர் தங்கும் அறையையும் ஈசானிய மூலையில் கட்டினார்கள் ஆண் சந்ததியே இல்லாமல் போக காரணம் என்ன? நாமது வீடுகளில் ஈசானிய மூலையை காற்று வராதபடி அடைத்து வைக்கக் கூடாது. தாராளமாக காற்று வரும்படி அந்த பக்கத்தில் சன்னல் வைக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அடிக்கடி நோய் ஏற்படும். ஆண் சந்ததி ஏற்கடாது தென்மேற்கு திசையில் திறப்பு இல்லாமல் இருக்க வேண்டும் ஏன்?வடக்கு, வடகிழக்கு திசைகளில் அலமாரிகள் வைக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வடக்கு, வடகிழக்கு திசையில் இருந்து வரும் காற்று வீட்டிற்குள் நுழையும் வகையில் இருந்தால் அந்த வீட்டில் செல்வமும் ஆரோக்கியம் சந்தோசமும் நிறைந்து இருக்கும் அதனால் அங்கு ஜன்னல்கள் வைக்கலாம். தென்மேற்கு திசையில் அலமாரிகள் வைக்கலாம் வீட்டு வாசல் படியில் உட்காரக் கூடாது ஏன்?நமது வீட்டில் இருக்கும் வாசல்படியின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருந்தால் ரெம்ப நல்லது. நாம் நினைத்ததை பேச வாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஒரு வீட்டின் நுழைவு வாசலும் மிக முக்கியம். ஆன்மிக ரீதியாகப் பார்த்தால் வாசல் வழியாகத்தான் லட்சுமி நமது வீட்டில் வாசம் செய்ய வருவார்கள் அதனால் வாசலின் குறுக்கே உட்காருவது வீட்டிற்கு வரும் லட்சுமியை தடுப்பதற்கும் அவமதிப்பதற்கும் சமமாகும் நாம் வீடு கட்டும்போது வாசல்கால் நடுவதுண்டு அப்போது பல நவரத்தினக் கற்களையும் பஞ்சலோக பொருட்களையும் வைத்து பல்வேறு பூஜைகள் செய்து இருப்போம் இப்படி அதற்கு தெய்வீகத் தன்மையை உண்டு பண்ணிவிட்டு இப்போது, அதன் மீது அமர்தால் அது லட்சுமியை அவமதிப்பதாகத்தானே கருதமுடியும் .

அம்பிகை அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

ரட்ச ரட்ச ஜகன் மாதா சர்வ சக்தி ஜெய துர்கா
ரட்ச ரட்ச ஜகன் மாதா சர்வ சக்தி ஜெய துர்கா
மங்கள வாரம் சொல்லிட வேண்டும் மங்கள கன்னிகை ஸ்லோகம் இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும்.
படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்திஅபயம்
என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி ஜயஜயசங்கரி கவுரி மனோகரி அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி
சிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி திருவருள் தருவாள் தேவி
கருணையில் கங்கை கண்ணனின் கங்கை கடைக்கண் திறந்தால் போதும் வருவினை தீரும், பழவினை ஓடும் அருள் மழை பொழிபவள் -நாளும் நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள் காளி எனத் திரிசூலம் எடுத்தவள் பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்.


பஞ்சமுக ஆஞ்சநேயர் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்


அஞ்சிலே ஒன்று பெற்றாள் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற் அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான்

கால பைரவர் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.

விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமரு கம்கை
தரித்ததோர் கோலகால பயிரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே

பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் கிடைக்கும் பலன்கள்

 ஒவ்வொரு சுப நிகழ்ச்சியின் போது பிள்ளையார் பிடித்து வைப்பதை காண்கிறோம் ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது அவை....
1:மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
2:குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.
3:புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்,விவசாயம் செழிக்கும்
4:வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.
5:உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.
6:வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி,சூன்னியம் விலகும்.
7:விபூதியார் வினாயர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்
8:சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
9:சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்
10:வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்
11:வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்
12:சர்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்கரை நோய்யின் வீரியம் குறையும்.

இறைவழிபாடே இல்லறத்தை நல்லறமாக்கும் அருமருந்து

ராகு கேது சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

 
1). தஞசாவூர் மாவட்டம கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் அருள்மிகு திருநாகநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள மூலவரிற்கு பாலாபிசேகம் செய்து சர்ப்ப தோசநிவர்த்தி அர்ச்சனை செய்ய சர்ப்ப தோசம் நிவர்த்தியாகும்.
2). திருப்பதி அருகேயுள்ள வாயுத்தலமான திருக்காளகஸ்த்தியில் மூலவரான காளகஸ்தீஸ்வரரிற்கு வில்வத்தினால் அர்ச்சனை செய்து, பச்சைக் கற்பூர அபிசேக தீர்த்தத்தினால் அபிசேகம் செய்து அந்த தீர்த்தத்தைப் பெற்று வந்து அந்த தீர்த்தத்தை பதினெட்டு நாட்கள் தொட்ர்ந்து சாப்பிட்டு வர சர்ப்ப தோசம் நிவர்த்தியாகும்.
3). தர்ப்பை, அருகு, பஞ்சலோகம் ஆகியவற்றைக் கொண்ட தாயத்து செய்து நூற்றியெட்டு நாட்கள் அதை அணிந்திருந்து பின் ஓடுகின்ற நீரில் விட்டு விட சர்ப்ப தோசம் நிவர்த்தியாகும்.
4). பிரதோச நாட்களில் பிரதோச வேளையில் சிவனிற்கு வில்வ பத்திரம் கொண்டு அபிசேகம் அர்ச்சனை செய்து, நந்தி தேவரிற்கு வில்வமும் அருகும் சேர்த்த மாலை செய்து அணிந்து வர சர்ப்ப தோசம் நீங்கும்.
5). மாதசிவராத்திரி நாட்களிலும், மகா சிவராத்திரியிலும் முறைப்படி நோன்பு நோற்று சிவவழிபாடு செய்து வர சர்ப்ப தோசம் நீங்கும்.
6). மாரியம்மன் வழிபாடு, புற்றுக்கு பால்வைத்து வழிபாடு செய்து வரவும் சர்ப்ப தோசம் நீங்கும்.
7). குளக்கரையில் வேப்பமரம், அரசமரம் இணைந்துள்ள இடத்தில் இரண்டு நாகங்கள் இணைந்துள்ள நாகர் சிலை செய்து பிரதிஸ்டை செய்ய சர்ப்ப தோசம் நீங்கும்.
8). வினாயகர் மகாமந்திர வழிபாடு, வினாயகர் கவச வழிபாடு, வினாயகர் விரத வழிபாடு முறைப்படி செய்து வர சர்ப்பதோசம் விலகும்

ஹயக்ரீவர் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

"ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே''

மந்திரம் சொல்லும் முறை

 
ஒரு மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு பலவித துவக்கநிலை செயல்பாடுகள் அவசியமாகின்றன. பலவித நியதி, நியமங்களும் தேவைப்படுகின்றன. அதன்பிறகே அதன் பயன்கள் நடைமுறைக்கு வரும். ஒரு சாதாரணச் சொல்லிற்கும் மந்திரத்திற்கும் உள்ள வித்தியாசம் அது பயன்படுத்தப்படும் விதத்தில்தான் உள்ளது.
சாதாரணமாக நாம் சொல்லும் சொற்கள் காற்று என்ற ஊடகம் வாயிலாகவே நம் காதுகளை அடைகிறது. அது சொல்பவருக்கும், அதைக் கேட்பவருக்கும் இடையில் உள்ள ஒரே தொடர்பு மட்டுமே. ஆனால், மந்திரங்கள் பஞ்சபூதங்களோடும் தொடர்பு படுத்தப்படுகின்றன.
அதாவது, சாதாரண ஜபம் என்றால் ஒரு தீபம் ஏற்றி வைத்து, அந்த மந்திரத்திற்குரிய தேவதாமூர்த்தியை வணங்கிய பின்பு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஜபம் செய்ய வேண்டும் என்பதே முறையாகும்.
அதுவே ஒரு யாகமாகவோ, ஹோமமாகவோ இருந்தால், ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் அக்னி வளர்க்கப்பட்டு, மந்திர உருவுடன் அக்னி பகவானுக்கு ஆகுதியும் அளிக்கப்படும். இவ்வாறு பஞ்ச பூதங்களோடு தொடர்புபடுத்தப்படும் ஒரு சொல் மந்திரமாகிறது.
அல்லது, இயற்கையிலேயே உள்ள சப்த அதிர்வுகளைக் குறிப்பிட்ட அலையியக்கத்திற்கு உட்படுத்தி, அதன் அதிர்வெண்ணிக்கைகளால் புற இயற்கையிலும் அவ்வெளிப்பாட்டை உணர வைப்பதும் மந்திரமாகும்

குலம் தழைக்க வேண்டும், முன்னோர் சாந்தி அடையவேண்டும், பின்னோர் செழிக்க வேண்டும்

 ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும், ஒவ்வொரு குல தெய்வம் இருக்கும். இவர்களுக்கு காவல் தெய்வம், குல தெய்வம் வழிபாடு இருக்கும். பிறக்கும் குழந்தைகளுக்கு, முதல் முடி குல தெய்வம் கோயிலில் சென்று மொட்டை போடுவார்கள். சில்ர் காது குத்துவார்கள்.
குலதெய்வம் வழிபாடு இந்து சமயத்தினருக்கும் முக்கியமான ஒன்றாகும்.அடிப்படையில் நம்முடைய இந்து மதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது. குல தெய்வ வழிபாடு மனிதனின் லௌதீக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது.
அப்படியானால் குலதெய்வமும், இறைநிலையும் வேறுவேறா? அப்படி கிடையாது, அதாவது பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணரே இதை தெளிவாக சொல்லியிருக்கிறார். உலகத்தில் இன்பத்தையும், பற்றையும் ஒதுக்கிவிட்டு வாழ்வதற்கு எல்லொராலும் முடியாது, லௌதீக வாழ்வு வாழ்வபவர்களுக்குதான் இறைதூதர்களையும், தேவதைகளயும் இறைவன் படைத்திருக்கிறார்.
அவர்களே குலதெய்வங்கள் ஆவார்கள். குல தெய்வத்தை கும்பிடும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்கள், முழுவதும் பங்காளி ஆவார்கள். இவர்கள் அண்ணன், தம்பி உறவு முறையாக கருதுபவர்கள். இவர்களுக்குள் பெண் கொடுக்கவோ, எடுக்கவோ மாட்டார்கள். மேலும் நம்முடைய வீட்டில் எந்த சுபகாரியங்கள் செய்தாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்கவேண்டும்.
எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். மேலும் வருடந்தோறும் நம்முடைய குலதெய்வத்தை வழிபடுவதால் நன்மைகளும், சந்தோசங்களும் குடும்பத்தில் நிலவும் என்பது உண்மை.
குலதெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்றுவிக்கப்பட்டதோ, ஆகாசத்திலிருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் பெரியவர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.
குலத்தைக் காப்பதால் தான் குலக் கடவுள். மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்புப்பெயர் குலதெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. `குலம் தழைக்க வேண்டும், முன்னோர் சாந்தி அடையவேண்டும், பின்னோர் செழிக்க வேண்டும்' என்று நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும்.
பல பிரச்சினைகளில் சிக்கி உழல்பவர்கள், பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குலதெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும்

ஸ்ரீ ராமபிரான் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.



ஸ்ரீராம சந்த்ர கருணாகர தீனபந்தோ
ஸீதாஸமேத பரதாக்ரஜ ராகவேச
பாபர்த்தி பஞ்ஜன பயாதுர தீனபந்தோ
பாபாம்புதௌ பதித முத்தர மாமநாதம்
ஸ்ரீராகம் தசரதாத்மஜ மப்ரமேயம்
ஸீதாபதிம் ரகுகுலாப்வய ரத்நதீபம்
ஆஜாபுபாஹு மரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி.

ஸ்ரீ கணபதி அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்


ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன கால
விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத மத
காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம் மோஹய மோஹய
ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய, அசிந்த்ய
பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய
ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான் மூட ய
மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக ஹும்பட் ஸ்வாஹா

சாம்பசிவன் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

ஓம் மணிமந்த்ர சரோ சரணம்!
ஓம் ஐஸ்வர்ய தமோ சரணம்!
ஓம் பஞ்சாட்ச்சர தமோ சரணம்!
ஓம் ஜீவதோமணம் ஜோதியே சரணம்!
ஓம் வேதத்தின் வேந்த நாயகனே சரணம்!
ஓம் ஓம் ஓம் ஓம் வீங்கார பதியே நமஹ;
ஓம் ஓங்கார பதியே நமஹ;
ஓம் ஐம்பத நாயகனே நமஹ;
ஓம் உலக வித்துக்காரகனே நமஹ;
ஓம் ஜக நாயகனே நமஹ;
ஓம் உள்ளும் புறமும் நீத்தவனே நமஹ;
ஓம் கண ரட்ச்சகனே நமஹ;
ஓம் மூலாதார வித்தகனே நமஹ;
ஓம் புண்ணியபத மூர்த்தியே நமஹ;
ஓம் ஒய்யார காரகனே நமஹ;
ஓம் ஆதியும் அந்தமும் அற்றவரே நமஹ;
ஓம் பஞ்ச பரம பக காரகனே நமஹ;
ஓம் தொய்யார மூல மூர்த்தியே நமஹ;
ஓம் கனக மூல ரட்ச்சகனே நமஹ;
ஓம் பிறைசூடிய பெருமானே நமஹ;
ஓம் ஈரேயூ மூல முதல்வனே நமஹ;
ஓம் ஓம் ஓம்! ஓம் நதவதன பூத்தம்
ஓம் சந்தோ நமோ பூமதனம்
ஓம் கைங்கர்யம் போம் பூம் புவர்சுக
ஓம் நித்தோம் காருபுதம் மைதவம்
ஓம் பூரணம் புனிதம் பூமயோகம்
துத்தம் துத்தம் துத்தம்!

குபேர வாசலைத் திறக்கும் குபேர இரகசியங்கள்

 
வந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள். வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள். அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள். பணம் வந்தால் வாய்பிழந்த ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாவேன்! என்று இறைவனிடம் திரும்பத் திரும்பக் கூறுங்கள். குபேர வாசலைத் திறந்து விடுவார். வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும்.
* பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கிப் பிரியா விடைதரவும்.
*வாடகை..... பலசரக்கு.... பால்பாக்கி... எனப் பணத்தைப் பிறருக்கு வழங்கும்போதெல்லாம், சீக்கிரம் வேறு வழியில் என்னிடம் வந்து சேர்! எனப் பிரியா விடை கொடுத்து அனுப்புங்கள்.
* ஈரம், ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே பர்சில்... வங்கியில்.... பீரோவில் வறட்சி கூடாது. இருப்புத் தொகை அதாவது குறிப்பிட்ட தொகை இருக்கும்போதே செலவை நிறுத்தி விட வேண்டும். நாள்தோறும் கண்கள் பணத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பசுமையைப் பராமரிக்கவும்.
*தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு.... அலுவலகம்.........கல்லாப்பெட்டி.....பணப்பை.... எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.
*வணிகத்தை... தொழிலை.... அலுவலகப் பணியை மனமலர்ச்சியுடன் விளையாட்டகச் செய்யுங்கள். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். சிடுமூஞ்சிகளையும் அழுமூஞ்சிகளையும் பார்த்து மூதேவிதான் விரும்பி வருகிறாள். சிரித்து வாழுங்கள். சிரிப்பவர்களுடன் சேர்ந்து வாழுங்கள்.
* கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.
ஓம் ........ஹ்ரீம்.......க்ளீம்சௌம்........ஸ்ரீம்......கும் குபேராய........... நரவாகனாயயக்ஷ ராஜாய...... தன தான்யாதிபதியே............ லக்ஷ்மி புத்ராய......ஸ்ரீம்........ ஓம்....... குபேராய நமஹ.........!
மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள். வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன் ஆகிவிடுவீர்கள்.

ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம் முன்னோர் வகுத்தனர்

  1.  விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது.வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம்.இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பாடு பற்றி டாக்டர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.
  2. டயட்டீசியன்களுக்கு இப்போது நிறையவே வேலை. எந்த வகை உணவு உண்ணலாம், எது கூடாது என்று இருதயவியல் நிபுணர்கள் நமக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இதைத் தான், நமது முன்னோர் விரதம் என்றார்கள்.ஆயுர்வேதம் என்பது அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இதில் லங்ஙனம் பரம ஒளஷதம் என்று சொல்லப்பட்டுள்ளது. லங்ஙனம் என்றால் உணவு. ஒளஷதம் என்றால் மருந்து. உணவே சிறந்த மருந்து என்பது வேதவாக்காகும். நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது. ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம் முன்னோர் வகுத்தனர்.
  3. விரதமாவது.. ஒன்றாவது... மனுஷன் செவ்வாயிலே வெள்ளம் வந்துச்சான்னா ஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்கான், இதிலே விரதம் கிரதமுனு பாடாபடுத்துறா எங்க அம்மா! என்று இனியும் சொல்ல மாட்டீர்கள் தானே!

சிவபாலன் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்


அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா
ப்ரணவப் பொருள்கண்ட திரு முருகா
பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா
அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா ...

முருக பெருமானின் விழாக்கள்

 

* தைப் பூசம் = அன்னையிடம் வேல் பெற்ற நாள்
* பங்குனி உத்திரம் = திருமண நாள்
* வைகாசி விசாகம் = பிறந்த நாள்
* ஆடிக் கிருத்திகை = அறுவரும் ஒன்றான நாள்
* ஐப்பசியில் சஷ்டி = சூர சங்காரம்
* கார்த்திகையில் கார்த்திகை = தீபம் ஒளியாய் காணும் நாள் ..!!

பாதம் படக்கூடாதவை


 மயான கரி, 
அக்கினி,
அடுப்பு,
வீபூதி,
சான்றோர் மீது,
பசுவின் மீது,
இரத்தம்,
முதலானவை மீது நம் பாதம் படக்கூடாது. படுமாயின் சனி நம்மை தொடருவார் என்று ஆசார நூலில் சொல்லப்பட்டு உள்ளது.

16 வகை லட்சுமியின் பலன்களை பெற

 

1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.
2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.
3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.
4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.
5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.
6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.
7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.
8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.
9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.
10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.
11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.
12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.
13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.
14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.
16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக் கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.

சூரியநமஸ்காரம் அற்புதங்களை நிகழ்த்தும்


 தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம் என்று அழைக்கப்படுகிறது. அதை சூரியநமஸ்காரம் என்று அழைப்பதிலேயே பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் சக்திப் பகுதி. சூரிய நமஸ்காரம் உங்கள் நாடிகளைத் திறந்து, உங்களுக்குள் இருக்கும் சூரியனை தூண்டிவிடுகிறது, இதன் மூலம் நீங்கள் மிகவும் துடிப்பாக, உயிர்ப்புடன் இருக்க முடியும். மெதுவாக 100 சூரியநமஸ்காரங்கள் செய்யும் நிலைக்கு வந்துவிட்டால், நீங்கள் ஒரு தடகள வீரரைப் போல ஆகிவிடுவீர்கள். இன்னொரு விஷயம் என்னவென்றால், உங்களை பேணிப் பாதுகாக்கின்ற சூரியனுக்கு தினமும் காலையில் செய்யும் ஒரு வழிபாடாகவும் அது இருக்கிறது. உங்களுக்கு இந்த உடல் இருப்பதன் காரணமே சூரியன்தான், இல்லையா? இந்தக் கலாசாரத்தில் வழிபாடு செய்வதென்றால் சில சடங்குகளைச் செய்வதோ அல்லது சில மந்திரங்களை முணுமுணுப்பதோ அல்ல. உங்கள் முழு உடலையுமே வழிபாடாக ஆக்குவதுதான் இங்கு வழிபடும் முறை.

சூரிய நமஸ்காரத்தின் பலன்கள்:
போதுமான அளவு சூரியநமஸ்காரம் செய்தால், உங்களுடைய தூங்கும் நேரம் மிகவும் குறைந்து, எப்போதும் ஒரு உயர்ந்த நிலையிலேயே இருப்பீர்கள். நீங்களாக எந்த முயற்சியும் செய்யாமலேயே உங்கள் தூக்கம் 4 அல்லது 41/2 மணி நேரமாக மிகச் சுலபத்தில் குறைந்துவிடும். சில வாரப் பயிற்சியிலேயே உங்கள் உற்பத்தித் திறனும், செயல்திறனும் மேம்பட்டுவிடும். யோகப் பயிற்சி செய்வதால், ஒருவர் நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, இரத்தக் கொதிப்பு, மூட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுதலை பெற முடியும். அது தன்னளவில் ஒரு முழுமையான பயிற்சியாகும். அதற்கு எந்தவிதமான கருவிகளும் தேவையில்லை. அது ஒரு வரம், ஏனென்றால் நீங்கள் பயணம் செய்து கொண்டிருந்தாலும், உங்களது பயிற்சிகளைத் தொடர முடியும். சூரியநமஸ்காரத்தைத் சரியாக செய்து பாருங்கள்; உங்கள் உடலில் இருக்கும் அத்தனை பகுதிகளும் நீண்டு, மடங்கி, அவற்றுக்குத் தேவையான உடற்பயிற்சி கிடைத்துவிடும். இதைத் தவிரவும், உங்கள் சக்தி நிலைகளும் உயர்ந்த நிலையை அடைவதால், வாழ்க்கையின் மேடு, பள்ளங்களை பெரிய சிரமங்கள் இல்லாமல் எதிர்கொள்ள முடியும். அதை ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வோடு செய்பவருக்கு சூரியநமஸ்காரம் அற்புதங்களை நிகழ்த்தும். தியானத் தன்மைக்குள் நுழைவதற்கு இது மிக எளிமையான ஒரு வழி. யோகப் பயிற்சி செய்வதால், ஒருவர் நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, இரத்தக் கொதிப்பு, மூட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுதலை பெற முடியும். ஆனால் யோகா என்பது ஒரு சிகிச்சை முறை அல்ல. நீங்கள் யோகாசனங்களை பயிற்சி செய்து வந்தால், அதற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பது வேறு விஷயம். ஆனால் இதை ஒரு சிகிச்சை முறையாகப் பயன்படுத்தக் கூடாது. ஒரு சிகிச்சை முறை என்றால், உங்களுக்கு ஒரு உடல் கோளாறு ஏற்பட்டால், நீங்கள் மருத்துவரிடம் செல்கிறீர்கள், அவர் உங்களுக்கு மருந்து கொடுக்கிறார். நீங்கள் எத்தனை காலம் அந்த மருந்தை சாப்பிடுவீர்கள்? உங்களுடைய பிரச்சனை நீடிக்கும் வரை அந்த மருந்தை உட்கொள்வீர்கள். பிரச்சனை முடிந்தவுடன், மருந்துக்கு எந்த அவசியமும் இல்லை. யோகாசனத்தையும் இப்படி எண்ணக் கூடாது. நீங்கள் யோகாசனங்கள் செய்ய ஆரம்பித்தவுடன், அவற்றை உங்கள் வாழ்க்கையின் ஒரு ஒழுக்கநெறியாகவே கடைபிடிக்க வேண்டும். அதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால் அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறது. அதிலிருந்து உங்களுக்கு கணக்கிலடங்காத பலன்களைப் பெற முடியும். யோகாசனங்களை அணுக இதுதான் சரியான வழி. ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட பலனுக்காகவும் யோகாசனங்களைச் செய்யாதீர்கள். அது அப்படி வேலை செய்யாது.

தமிழக கோவில்களின் கோபுர உயரம்

தமிழக கோவில்களின் கோபுர உயரம்...

1, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் – 236 அடி
2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.
3, தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்
4, ஆவுடையார் கோவில் – 200 அடி
5, தென்காசி – 178 அடி
6, கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி
7, மதுரை – 170.8 அடி தெற்கு கோபுரம்
8, ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி வடபத்ர சாயி கோபுரம்
9, மன்னார்குடி – 154 அடி
10, குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி
11, சிதம்பரம் – 140 அடி வடக்கு கோபுரம்
12, திருவானைக்காவல் – 135 அடி கீழ கோபுரம்
13, சுசீந்திரம் – 134 அடி
14, திருவாடனை – 130 அடி
15, குடந்தை கும்பேஸ்வரர் – 128 அடி
16, இராமேஸ்வரம் – 126 அடி கிழக்கு கோபுரம்
17, திருச்செந்தூர் – 127 அடி
18, சங்கரன் கோவில் – 125 அடி
19, திருவாரூர் – 118 அடி கீழ கோபுரம்

இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும்

 பலவிதமான வழிபாடுகளுள் விரைவாக பலன் தரும் ஒன்று, அபிஷேகம், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.
முக்தி கிடைக்க: இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும்.
தீர்க்காயுசுடன் வாழ: சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.
குடும்ப ஒற்றுமை நீடிக்க: குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
நல்வாழ்க்கை அமைய: நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது உங்கள் வீட்டில்.
கடன் தீர: மாப்பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும்.
நினைக்கும் காரியம் நிறைவேற: சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.
பிணிகள் தீர: கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.
குழந்தை பாக்யம் பெற: நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும்.
பயம் போக்க: மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலும்பிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
இனிய குரல் வளம் கிடைக்க: இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும்.
செல்வம் சேர: பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும்.
சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.
பாவங்கள் கரைய: பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும்.



உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஐவலந்தம் சர்வதோ முகம் ந்ருசிம்மம் பீஷணம் பத்ரம் மிருத்யும் மிருத்யும் நமாம்யஹம்

மூகாம்பிகை அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

மூகாம்பிகை அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.
பாஸ்வத் ரத்னாபரண வஸநாலங்க்ருதே சாருஹஸ்தை:
ஸங்கம் சக்ரம் வரதமபயம் ஸம்வஹந்தி த்ரிநேத்ரி
ஹேமப்ரக்யே ப்ரணதவரஸந்தாத்ரி பத்மாஸனஸ்த்தே
காருண்யாத்ரே பகவதி மூகாம்பிகே மாம் ரக்ஷ நித்யம்!!


Saturday, 3 January 2015

TaxiForSure 100% Cashback on Deposit of Rs. 500

taxiforsure-doubleFeatures aggregator of car rentals and taxis in India & work with various taxi operators and enable them with technology to ensure customers get an easily accessible, safe & reliable taxi ride ‘for sure’.
• Offer valid till midnight of 7th January, 2015.
• The Amount equal to your recharge will be added automatically to your TSF Wallet.
• Offer valid when you recharge your account with an amount from Rs. 500 to Rs. 1000.
• Valid on transactions made through Net Banking, Credit and Debit

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing